தக்காளி குருமா - Tomato Kurma - Thakkali Kurma Recipe - Best Sidedish for idli / Dosa


எங்க வீட்டில் செய்யும் இந்த குருமா எனக்கு மிகவும் பிடிக்கும்... இது இட்லி, தோசைக்கு சூப்பரான Combination...

இதில், வெங்காயம் + தக்காளியினை கண்டிப்பாக நீளமாக வெட்டி கொள்ள வேண்டும். அதே மாதிரி வெரும் சோம்பு மட்டுமே சேர்க்க வேண்டும்.  காரத்திற்கு பச்சைமிளகாய் + சிறிது மிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  தக்காளி - 4
  .  வெங்காயம் - 2 பெரியது
  .  பச்சைமிளகாய் - 4
  .  கருவேப்பிலை - 5 இலை
  .  கொத்தமல்லி - சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
  .  மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

அரைத்து கொள்ள :
  .  தேங்காய் - 2 துண்டுகள்
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  கசகசா - 1/2 தே.கரண்டி (விரும்பினால்)

முதலில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி 
  .  சோம்பு - 1/4 தே.கரண்டி
  .  இஞ்சி பூண்டு விழுது - 2 தே.கரண்டி


செய்முறை :
.  வெங்காயம் + தக்காளி நீளமாக வெட்டி கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறி வைக்கவும். (கவனிக்க : கண்டிப்பாக வெங்காயம் + தக்காளியினை நீளமாக வெட்டி வைகக்வும். பொடியாக நறுக்க வேண்டாம்.)

.  கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

.  இஞ்சி பூண்டு சிறிது வதங்கியதும் அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


.  பிறகு இதில் நீளமாக அரிந்த தக்காளியினை சேர்த்து வதக்கவும்.

.  தக்காளி வதங்கியதும் அதில் சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.


.  தேங்காய் + சோம்பு + கசகசா + சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

.  இத்துடன் 2 - 3 கப் தண்ணீர் + அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  சுமார் 6 - 8 நிமிடங்கள் கழித்து குருமா நன்றாக கொதித்த பிறகு கடைசியில் கருவேப்பிலை + கொத்தமல்லி தூவி கொள்ளவும்.


.  சுவையான தக்காளி குருமா ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...முருங்கைகீரை ராகி அடை - Murungai Keerai Ragi Adai Recipe - Kezhvaragu Kara Adai


எங்க வீட்டில் முருங்கை மரம் இருந்ததால், அம்மா அடிக்கடி செய்யும் Evening Snacks listயில் இந்த அடையும் இருக்கும். எங்களுக்கு மிகவும் பிடித்த அடை. 

அம்மா பொறுமையாக இரண்டு தோசை கல் வைத்து மிதமான தீயில் அடையினை சுட்டு கொடுப்பாங்க...  ஒரு அடை சாப்பிட்டு முடிந்த பிறகும் காத்து இருந்து இன்னொரு அடை சாப்பிடுவோம்...ரொம்ப சூப்பரான சத்தான உணவு..

முருங்கைகீரைக்கு பதில் Collard Greens சேர்த்து செய்து பாருங்க...அதுவும் இதே மாதிரி சுவையுடன் இருக்கும். 

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்..

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 - 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  ராகி / கேழ்வரகு மாவு - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு
  .  எண்ணெய் - சிறிதளவு

தாளித்து சேர்க்க:
  .  முருங்கைகீரை இலை - 1 கப்  (சுத்தம் செய்தது)
  .  வெங்காயம் - 1
  .  பச்சைமிளகாய் - 2 - 4 (காரத்திற்கு ஏற்ப)
  .  கருவேப்பிலை - விரும்பினால் - 5 இலை

செய்முறை :
.  வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

.  கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

.  இத்துடன் முருங்கைகீரை இலையினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.


.  ராகி மாவுடன் வதக்கிய பொருட்கள் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


.  வதக்கிய பொருட்கள் ராகி மாவுடன் நன்றாக கலந்த பிறகு, அத்துடன்  சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவினை உருண்டையாக வரும் வரை உருட்டு கொள்ளவும்.

.  மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.  Paper Towel / Ziploc cover யினை ஒரு உருண்டையினை எடுத்து வைத்து அடையினை தட்டி கொள்ளவும். 


(கவனிக்க : மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் அடை தட்டும் பொழுது வீரல் விடும் Shapeயும் ஒழுங்காக வராது. அதே மாதிரி தண்ணீர் அதிகம் சேர்த்து விட்டால் அடையினை தட்ட வராது. அதனால் மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.) 

.  தோசை கல்லினை காய வைத்து கொள்ளவும். தட்டி வைத்து இருக்கும் அடையினை கல்லில் போட்டு அத்துடன் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சுமார் 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும்.


.  ஒரு பக்கம் நன்றாக வெந்த பிறகு அடையினை திருப்பி போட்டு (விரும்பினால் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி ) 2 நிமிடங்கள் வேகவிடவும்.

.  சுவையான சத்தான முருங்கைகீரை அடை ரெடி. 


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...


கருவேப்பில்லை துவையல் - Karuveppillai Thuvaiyal Recipe for kanji - Curry Leaves Thuvaiyal


மாதத்திற்கு ஒரு முறையாவது எங்கள் வீட்டில் அம்மா இந்த துவையிலினை செய்து விடுவாங்க.. பெரும்பாலும் Weekendsயில் வீட்டினை சுத்தம் செய்யும் பொழுது நொய் கஞ்சி + கருவேப்பிலை துவையல் தான் காலை மெனுவாக இருக்கும்.

இந்த துவையிலினை தாளிக்க தேவையில்லை, அதே மாதிரி எந்த பொருட்களையும் வதக்க தேவையில்லை. எளிதில் செய்துவிடலாம்.

நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.


துவையல் செய்ய தேவைப்படும் நேரம் : 2 - 3 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
.  கருவேப்பிலை இலை - 3 கப்
.  காய்ந்த மிளகாய் - 4 - 5 (காரத்திற்கு ஏற்ப)
.  புளி - நெல்லிக்காய் அளவு
.  உப்பு - தேவைக்கு


செய்முறை :
.  கருவேப்பிலையினை தண்ணிரீல் அலசி கொள்ளவும்.

.  கருவேப்பிலை + காய்ந்த மிளகாய் + புளி + உப்பு + 1 - 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும்.


.  சுவையான சத்தான துவையல் ரெடி. இதனை கஞ்சியுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். அதே மாதிரி தயிர் சாதம், இட்லி, தோசைக்கும் ரொம்ப நன்றாக இருக்கும்.Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...உப்பு உருண்டை - Uppu Urundai Recipe- Steamed Rice Balls - Childhood Memories / Friendship 5 series


எங்கள் வீட்டில் அம்மா கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது இந்த உப்பு உருண்டையினை செய்வாங்க...Evening வீட்டிற்கு வந்து சாப்பிடுவோம்...எளிதில் செய்ய கூடிய சத்தான Snack இது...இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னி/ சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்...

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  புழுங்கல் அரிசி - 2 கப்
  .  உப்பு - தேவையான அளவு

தாளித்து சேர்க்க :
  .  எண்ணெய் -  2 மேஜை கரண்டி
  .  கடுகு - 1/4 தே.கரண்டி
  .  கடலைப்பருப்பு - 1 தே.கரண்டி
  .  உளுத்தம்பருப்பு - 1 தே.கரண்டி
  .  கருவேப்பிலை - 10 இலை
  .  காய்ந்தமிளகாய் - 3 (இரண்டாக உடைத்து கொள்ளவும்)
  .  பெருங்காயம் - 1/4 தே.கரண்டிக்கும் குறைவாக


செய்முறை :
  .  புழுங்கல் அரிசியினை தண்ணீரில் சுமார் 2 - 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

  .  அரிசியினை கழுவி அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.


 .  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து தாளித்து கொள்ளவும்.

.  இதில் அரைத்த மாவினை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி கொள்ளவும். 


  .  மாவு கெட்டியாக உருண்டையாக உருட்டும் பதம் வரும் வரை கிளறி கொள்ளவும். (சுமார் 3 - 5 நிமிடங்கள் )


  .  மாவு கிளறிய பிறகு அதனை 3 - 5 நிமிடங்கள் ஆறவிடவும்.மாவு ஆறிய பிறகு அதனை Medium Size உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். (கவனிக்க: அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற போல் உருண்டைகளின் அளவினை பார்த்து கொள்ளவும்.)

  .  உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து இட்லி வேகவைப்பது போல 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும்.


 .  சுவையான சத்தான மாலை நேர சிற்றுண்டி ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் எதாவது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.குறிப்பு :
இதில் விரும்பினால் துறுவிய தேங்காய் சேர்த்து கொள்ளலாம்.

நீளமான காய்ந்த மிளகாயினை 2 - 3 துண்டுகளாக கிள்ளி தாளித்து கொள்ளவும்.

பெரும்பாலும் இதில் காய்ந்த மிளகாய் தான் பயன்படுத்துவாங்க...விரும்பினால் பச்சைமிளகாய் சேர்த்து கொள்ளவும்.

மாவினை மிகவும் கெட்டியாக அரைக்க தேவையில்லை. தண்ணீர் 1 கப் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...

சுண்டைக்காய் டிபன் சாம்பார் - Sundakkai Tiffin Sambar Recipe - Sundakkai Recipes - Side Dish for Idli / Dosa


சுண்டைக்காயில் அதிக அளவு கல்சியம் மற்றும் இரும்பு சத்து இருக்கின்றது.இந்த  காய் சிறிது கசப்பும் துவர்ப்பும் சுவையில் இருக்கும்.

அடிக்கடி சுண்டைக்காயினை சாப்பிடுவதால் ரத்தம் மற்றும் வயிற்றினை சுத்தம் செய்ய உதவுகின்றது.

எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி இருக்கும். அம்மா வாரம் ஒரு முறையாவது இந்த சாம்பார் அல்லது குழம்பு செய்து கொடுப்பாங்க...இதே மாதிரி சுண்டைக்காய் பதில் கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.

எளிதில் செய்ய கூடிய சத்தான டிபன் சாம்பார்... நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்...

print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  சுண்டைக்காய் - 30 - 40
  .  துவரம் பருப்பு - 1 கப்
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 1
  .  பச்சைமிளகாய் - 3
  .  புளி Paste - 1/4 தே.கரண்டி
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

கடைசியில் தாளிக்க :
  .  எண்ணெய் - 1 தே.கரண்டி
  .  கடுகு , கருவேப்பில்லை, பெருங்காயம் - தாளிக்க


செய்முறை :
  .  வெங்காயம் + தக்காளியினை பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 .  பிரஸர் குக்கரில் துவரம் கழுவி சேர்த்து கொள்ளவும். வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

  .  இத்துடன் தேவையான அளவு தண்ணீர் (சுமார் 2 - 3 கப்) + மஞ்சள் தூள் + புளி + உப்பு சேர்த்து பிரஸர் குக்கரில் 4 - 5 விசில் வரும் வரை வேகவிடவும்.


  .  பிரஸர் அடங்கியதும் குக்கரினை திறந்து மத்து வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.


.  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்த்து கலக்கவும்.

 .  சுவையான சாம்பார் ரெடி. இதனை இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Linking this post to "Friendship 5 series" started by Geetha Achal & Savitha...
கத்திரிக்காய் மாங்காய் நெத்திலி மீன் குழம்பு - Brinjal Mango Nethili Meen Kuzhambu recipe - Nethili Fish Gravy


print this page PRINT

சமைக்க தேவைப்படும் நேரம் :  30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  நெத்திலி மீன் - 1/4 கிலோ (சுத்தம் செய்தது)
  .  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (அ) புளி Paste - 1 தே.கரண்டி
  .  கருவேப்பில்லை - 5 இலை

நறுக்கி கொள்ள :
  .  வெங்காயம் - 1 பெரியது
  .  தக்காளி - 1 பெரியது
  .  கத்திரிக்காய் - 1/4 கிலோ
  .  மாங்காய் - 3 - 4 துண்டுகள்
  .  பச்சைமிளகாய் - 3

சேர்க்க வேண்டிய பொருட்கள் :
  .  மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
  .  மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
  .  தனியா தூள் - 2 தே.கரண்டி
  .  உப்பு - தேவையான அளவு

தாளிக்க :
  .  எண்ணெய் - 1 மேஜை கரண்டி
  .  கடுகு - 1/4 தே.கரண்டி
  .  வெந்தயம் - 1/4 தே.கரண்டி

(குறிப்பு : கடுகு, வெந்தயம் பதில் தாளிக்கும் வடகம் சேர்த்து தாளித்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். மிளகாய்தூள் + தனியா தூள் பதில் குழம்பு மிளகாய் தூள் 1 மேஜை கரண்டி அளவு சேர்த்து கொள்ளலாம்.)


செய்முறை :
. மீன் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கத்திரிக்காய் + மாங்காயினை Medium Size துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

புளியினை 3 கப் தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கீறிவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.  


வெங்காயம் வதங்கியதும் அத்துடன் தக்காளி சேர்த்து 2 - 3 நிமிடங்கள் வதக்கவும்.

பிறகு இதில் கத்திரிக்காய் + மாங்காய் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.


.  இத்துடன் புளி கரைசல் + சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து தட்டு போட்டு மூடி  சுமார் 8 -10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும்.


கடைசியில் மீன் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து 1 - 2 நிமிடம் தட்டு போட்டு வேகவிட்டு  அடுப்பினை நிறுத்திவிடவும். அந்த சூட்டிலேயே மீன் வெந்துவிடும். 


.  சுவையான எளிதில் செய்ய கூடிய மீன் குழம்பு ரெடி.


கவனிக்க :
எங்க வீட்டில் எப்பொழுதும் கத்திரிக்காய், மாங்காய் போட்டு தான் செய்வாங்க...விரும்பினால் காய் இல்லாமலும் செய்யலாம்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற் போல காரம் சேர்த்து கொள்ளவும்.

மாங்காய் சேர்ப்பதால் புளியினை பார்த்து சேர்த்து கொள்ளவும்.


Tacobell Cheesy Fiesta Potatoes Recipe - Kids Special - Friendship 5 series


வீட்டிலேயே எளிதில் செய்ய கூடிய சத்தான Snack இது..

print this page PRINT
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
  .  உருளைகிழங்கு - 2
  .  சீரக தூள் - 1/2 தே.கரண்டி
  .  பூண்டு - 3 பல் நசுக்கியது
  .  உப்பு - தேவையான அளவு
  .  ஆலிவ் ஆயில் - 1 தே.கரண்டி
பட்டர் - 2 தே.கரண்டி 

கடைசியில் சேர்க்க :
  .  Cheddar Cheese - 1 Slice
  .  Sour Cream - 1 மேஜை கரண்டி
  .  Chives - மேலே தூவ

செய்முறை :
.  உருளைகிழங்கினை தோல் நீக்கி சிறிய Cube துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.


  .  கடாய் சூடானதும் அதில் ஆலிவ் ஆயில் சேர்த்து அத்துடன் உருளைகிழங்கு + சீரகதூள் + பூண்டு + தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்து பக்கமும் 4 - 5 நிமிடங்கள் சிவக்கவிடவும்.


.  அவனை 400Fயில் மூற்சூடு செய்யவும். Roast செய்து வைத்துள்ள உருளைகிழங்கினை மேலும் 6 - 8 நிமிடங்கள் வேகவிடவும். 

 .  பறிமாறும் பொழுது உருளைகிழங்கு மீது Cheddar Cheese, Sour cream & Chives தூவி பறிமாறவும்.


  .  சுவையான சத்தான Snack ரெடி.கவனிக்க:
பூண்டு சேர்ப்பதற்கு பதில் Garlic Powder சேர்க்கலாம்.

Cheddar Cheeseயிற்கு பதில் Velveeta Cheese 2 மேஜை கரண்டி பயன்படுத்தலாம்.


Linking this post to "Friendship 5 series" started by me & Savitha...Related Posts Plugin for WordPress, Blogger...