சென்னா மசாலா


சென்னா மசாலா

இது ஒரு பிரபலமான வட இந்திய உணவு. வட இந்திய மக்களின் விருந்து, விழாக்கள் போன்ற சமயங்களில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும் இந்த சென்னா மசாலா.

இதற்கு பொருத்தமாக ரொட்டி, பூரி, நாண், பட்டூரா போன்றவுடன் பரிமாறபடும்.

ஆனால் இப்பொழுது எல்லாம் வட இந்தியர்கள் மட்டும் இல்லாமல் நம்முடைய தென் இந்திய மக்களும் தங்களுடைய விருந்து நிகழ்ச்சிகளின் உணவு பட்டியலில் இதனையும் சேர்த்து கொள்கின்றனர். சென்னா மசாலாவினை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

அதனுடைய செய்முறையினை இப்பொழுது பார்க்கலாம்..நீங்களும் இந்த சென்னா மசாலாவினை செய்து பாருங்கள்….வாங்க….

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்

தேவையான பொருட்கள்:

v  கொண்டைகடலை(சென்னா) – 2 கப்

v  பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 கப்

v  பொடியாக நறுக்கிய தக்காளி – 1 கப்

v  தயிர் – 1 கப்

v  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப்

v  பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 மேஜை கரண்டி

v  பச்சை மிளகாய்  - 2

v  உப்பு – தேவையான அளவு

தேவையான பொடி வகைகள்:

v  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

v  தனியா தூள் – 1 1/2 தே.கரண்டி

v  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

v  கரம் மசாலா தூள் – 1 தே.கரண்டி

தாளிக்க:

v  எண்ணெய் – 4 மேஜை கரண்டி

v  சோம்பு – 1  தே.கரண்டி

v  கருவேப்பில்லை – 5 இலை

 

Ø  முதலில் கொண்டைகடலையினை குறைந்தது 6 மணி நேரம் ஊறபோட்டு அதனை பிரஸர் குக்கரில் 3 – 4 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும். (1/2 கப் வேகவைத்த சென்னாவினை மட்டும் தனியா எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.)

Ø  கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + கருவேப்பில்லை தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கவும்.

Ø  அதன் பின்னர் இஞ்சி, பூண்டு போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளியினை சேர்த்து குழைய வதக்கவும்.

Ø  பிறகு கொடுத்துள்ள பொடி வகைகள் + தயிர் + கொத்தமல்லி சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கழித்து 1 கப் தண்ணீர் + வேகவைத்த சென்னா சேர்த்து 10 – 15 நிமிடம் வேகவிடவும்.

Ø  கடைசியில் அரைத்து வைத்துள்ள 1/2 சென்னாவினை சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.

Ø  இப்பொழுது சுவையான சென்னா மசாலா ரெடி.

19 comments:

சி.தவநெறிச்செல்வன் said...

மிக அருமையான உணவு வகை, மிக எளிதாக செய்யக்கூடியதாக இருக்கிறது, முயன்றுபார்க்கிறேன்.

உங்கள் தள அமைப்பும் மிக அழகாக இருக்கிறது

கீதா ஆச்சல் said...

திரு. தவநெறி செல்வன், தங்கள் என்னுடைய வலைபகுதிக்கு வந்தமைக்கு மிகவும் நன்றி.

கண்டிப்பாக செய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.

சி.தவநெறிச்செல்வன் said...

தாங்கள் சொன்ன சென்னா மசாலா செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது, நன்றி தங்கள் தளம் என்னைப்போன்ற வெளிநாட்டில் தனியே வாழும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி

கீதா ஆச்சல் said...

//நன்றி தங்கள் தளம் என்னைப்போன்ற வெளிநாட்டில் தனியே வாழும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் // மிகவும் நன்றி அண்ணா.

செய்துவிட்டு பின்னுட்டம் அனுப்பி மேலும் என்னை ஊக்கவிக்கும் உங்களுக்கு என்னுடைய நன்றி.

rk guru said...

நாக்கில் எச்சில் உறுகிறது...

ஸாதிகா said...

சோம்பெல்லாம் சேர்த்து சற்று வித்தியாசமாக உள்ளது.டிரை பண்ணிடுவோம்.

LK said...

பார்க்க நல்ல இருக்கு . அடுத்த வாரம் செஞ்சிடலாம்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி குரு....நன்றி கார்த்திக் கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்க...சூப்பராக இருக்கும்...

natn said...

super

natn said...

super

Priyajanish said...

epadi ninga ivlo azhaga panringa ninga sonnatha kandippa try pannanum pola iruku pictures pakave romba azhaga iruku.. Nice akka ...

Sreevidhya said...

Thanks for sharing the recipe.

shanthi said...

hi keetha supera irunthathu senna masala...very thanks

GEETHA ACHAL said...

நன்றி ஸ்ரீவித்யா...

நன்றி சாந்தி...செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி...

syamala said...

we always make with chenna masala, chaat masala, gram flourbut it is very simple&good

Vani Vani said...

super akka

Vani Vani said...

nalla irukku akka

Thiagarajan Arumugam said...

சமையலுக்கு உள்ள வலை தளங்களில் என்னை சிந்திக்க வைத்த வலைதளம். செய்முறை விளக்கம் மிக அருமை.

Related Posts Plugin for WordPress, Blogger...