அவரைக்காய் வேர்க்கடலை பொரியல் - Avarakkai Peanut Poriyal


அவரைக்காய் வேர்க்கடலை பொரியல்
அவரைக்காயில் நாம் பெரும்பாலும் தேங்காய் துறுவலினை தான் சேர்த்து சமைப்போம். இந்த செய்முறையில் வித்தியசாமாக செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும். இது கிரமாத்து ஸ்பெஷல்.

கிரமாத்தில் வாழும் மக்கள் வேர்கடலையினை தாங்கள் கழனிகளில் பயிரிடுவார்கள். அவர்கள் வீட்டில் எப்பொழுதும் கடலை இருக்கும். ஆகவே அவர்கள் தங்களுடைய சமையலில் வேர்கடலை, வேர்கடலை எண்ணெய்(இதனை மலட்டெண்ணெய் என்று கூறுவார்கள்) இதனை தான் பொரும்பாலும் உபயோகிப்பார்கள்.

இந்த பொரியலினை சாதம், சாம்பார், ரசம், சாப்பாத்தி, கலந்த சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
தேவையான பொருட்கள்:
v அவரைக்காய் – 1/4 கிலோ
v பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
v பொடியாக நறுக்கிய தக்காளி – 1
சேர்க்க வேண்டிய தூள் வகைகள்:
v மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
v தனியா தூள் – 1/2 தே.கரண்டி
v மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
v உப்பு – 1 தே.கரண்டி
தாளிக்க:
v எண்ணெய் – 2 தே.கரண்டி
v கடுகு – 1/2 தே.கரண்டி
v கருவேப்பில்லை – 5 இலை
வறுத்து பொடிக்க வேண்டிய பொருள்:
v வேர்க்கடலை – 1/2 கப் (வேர்க்கடலையினை தோலுடனே விரும்பினால் கொர கொரவென்று பொடிக்கவும். அதில் தான் சுவை.)


செய்முறை :
* அவரைக்காயினை கம்பு நீக்கி பொடியாக வெட்டி கொள்ளவும்.
* பின்பு கடாயினை வைத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பின்பு வெங்காயம் போட்டு வதக்கி பின் தக்காளி மற்றும் அவரையினை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.


* பிறகு பொடிவகைகள் சேர்த்து கிளறி சிறு தீயில் தட்டு போட்டு முடி வேகவிடவும்.(வேண்டுமானால் தண்ணீரினை தெளித்து கொள்ளலாம்).
* காய்கள் நன்றாக வெந்தபிறகு கடைசியில் பொடித்து வைத்துள்ள வேர்கடலையினை போட்டு ஒரு பிரட்டு பிரட்டிவிட்டு பரிமாறவும்.


* இப்பொழுது சுவையான அவரைக்காய் வேர்க்கடலை பொரியல் ரெடி.

2 comments:

Reshma said...

new recipe
Mother said that this is nice let me try like that....
Thank u for sharing

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ரேஸ்மா.

கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...