சூப்பர் பீர்க்கங்காய் சட்னி - Perkankai Chutney - Side Dish for Idly and Dosa


சூப்பர் பீர்க்கங்காய் சட்னி
எப்பொழுதும் தேங்காய், வெங்காயம் அல்லது தக்காளி சட்னி என்று செய்யாமல் இப்படி காய்கறிகளினையும் சேர்த்து சட்னி செய்வதால் நமக்கும் உணவில் காய்கறிகளினை சேர்த்து சாப்பிட்ட திருப்தி மற்றும் காலை உணவில் இப்படி காய்களினை சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கும் நல்லது.
காய்கள் சாப்பிடாத குழந்தைகள் கூட நீங்கள் இப்படி வித விதமாக காய்களை சட்னியில் தெரியாத வண்ணம் சமைத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பீர்க்கங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பார்க்க வாங்க
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
*       பீர்க்கங்காய் – 1/4 கிலோ
*       தக்காளி – 1 பெரியது
*       மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
*       உப்பு தேவையான அளவு
தாளிக்க :
*       எண்ணெய் – 1 தே.கரண்டி
*       கடுகு – 1/2 தே.கரண்டி
*       நறுக்கிய வெங்காயம் – 1
*       பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2
*       கருவேப்பில்லை – 5 இலை
கடைசியில் தூவ :
*       பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 2 மேஜை கரண்டி
செய்முறை :
*       பீர்க்கங்காயினை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
*       தக்காளியையும் பொடியாக நறுக்கி அத்துடன் வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காய் + மஞ்சள் தூள் + 1/2 தே.கரண்டி உப்பு + 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிட்டு கடைசியில் அனைத்தையும் கரண்டியால் மசித்து கொள்ளவும்.
*       கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம் + பச்சை மிளகாய் + கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
*       பிறகு மசித்து வைத்துள்ள பீர்க்கங்காய் கலவையினை இதில் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். (தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். வேண்டுமானால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்)
*       கடைசியில் கொத்தமல்லி தூவி மேலும் 1 நிமிடம் கொதிக்கவிடவும்.
*       இப்பொழுது சுவையான் பீர்க்கங்காய் சட்னி ரெடி.
      குறிப்பு :
பீர்க்கங்காய் தோலினை வீணாக்காமல் அதனை வைத்து சட்னியோ அல்லது துவையலோ செய்து சாப்பிடலாம். அதனை வைத்து எப்படி சமைக்கலாம் என்பதினை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

12 comments:

Nithu Bala said...

Hi Geetha, saw your comment in Menaka's blog..came from there..you have a very lovely blog..I'm happy to follow you..Drop on at my blog sometime..

Pavithra said...

Hi geetha how are u .. seeing u after a long time. Thought u were busy for some days. Hope to see more recipes from u. By the way peerkangai chutney with idli is making me more hungry ..Yummy!!!

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா

Shama Nagarajan said...

yummy healthy choice

அன்புடன் மலிக்கா said...

சூப்பர் கீத்து. போட்டோவை பார்க்கும்போது நாவில் நீர் சுரக்குது..
ரொம்ப நாளாச்சி நான் இந்தபக்கம் வந்து சாரிப்பா.

NIZAMUDEEN said...

சுலபமான செய்முறைக் குறிப்புக்கள்!
சுவை மிகுந்த சிற்றுண்டியின்
சிறப்பான படம்.
அருமை!

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நித்து...நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...இந்தியா சென்றதால் ப்ளாக் பக்கம் வ்ரமுடியவில்லை...இனிமேல் ப்ளாக் பக்கம் வருவேன் என்று நினைக்கிறேன்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மலிக்கா அக்கா...நீங்க வேற எதுக்கு சாரி எல்லாம்...நானே என்னுடைய ப்ளாக் பக்கம் வந்து பல நாட்கள் ஆகுது...எல்லாம் இந்தியா பயணம் தான்...நன்றி அக்கா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிஜாமூதீன். கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்கள்...சூப்பராக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...