இரால் புளி குழம்பு - Prawn Tamrind Kuzhambu


இரால் புளி குழம்பு
இரால் மிகவும் பிரபலமான கடல் உணவு. அதிலும் இராலினை வைத்து குழம்பு செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

அதனை சமைத்து சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் அதுனுடைய சுவையோ தனி தான்.

புளி சேர்க்கும் குழம்புகளில் மட்டும் இராலினை சேர்த்து சமைக்கும் பொழுது அதனை முதலில் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பின் போட வேண்டும் . இல்லை என்றால் இரால் கடினமாக , ரப்பர் போல ஆகிவிடும்.

இந்த இரால் குழம்பினை களி, கூழ், சாதம், சாப்பத்தி போன்றவையுடன் சாப்பிட மிகவும் ஜோராக இருக்கும். இப்பொழுது இதன் செய்முறையினை பார்ப்போம் வாருங்கள்…


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சுத்தம் செய்த இரால் – 1/4 கிலோ
§  உருளைகிழங்கு – 2
§  பொடியாக நறுக்கிய கீரை தண்டு – 1 கப் (விரும்பினால்)
§  எதவாது ஒரு சுண்டல் வகை (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
§  வெங்காயம் – 1
§  தக்காளி – 1
§  பச்சை மிளகாய் – 2
தாளிக்க :
§  நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
§  கடுகு – 1/2 தே.கரண்டி
§  வெந்தயம் – 1/2 தே.கரண்டி
§  நசுக்கிய பூண்டு – 3 பல்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§  தனியா தூள் – 1 தே.கரண்டி
§  உப்பு – 2 தே.கரண்டி


கரைத்து கொள்ள :
§  புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
கடைசியில் தூவ :
§  கொத்தமல்லி – ஒரு கைபிடி(பொடியாக நறுக்கவும்)


செய்முறை :
v  வெங்காயம், தக்காளியினை வெட்டி கொள்ளவும். உருளைகிழங்கினை பெரிய துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயினை இரண்டாக கீறிகொள்ளவும்.

v  புளியினை 3 கப் தண்ணீரில்  கரைத்து கொண்டு அத்துடன் தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இராலில் 3 பங்குகளாக பிரித்து அந்த எண்ணெயில் பொரித்து தனியா வைக்கவும்.

v  பிறகு அந்த எண்ணெயில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து நசுக்கிய பூண்டு போட்டு வதக்கிய பின் வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கவும்.

v  அதன்பின் அதில் உருளைகிழங்கு + கீரை தண்டு + சுண்டல் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கரைத்து வைத்துள்ள புளி கரைசலினை இதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

v  தூள் வாசனைகள் போன பிறகு அதில் பொரித்து வைத்துள்ள இரால் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி  சேர்த்து மேலும் 3 – 5 நிமிடம் வேகவிடவும்.

v  இப்பொழுது சுவையான இரால் புளி குழம்பு ரெடி.


கவனிக்க :
இராலில் எந்த தூள்கலும் சேர்க்காமல் பொரிக்கவும் .எண்ணெயில் சிறிது சிறிதாக இராலினை போட்டு பொரிக்கவும்.அப்படி இல்லாமல் மொத்தமாக இராலினை போட்டால் பொரிவதற்கு பதிலாக வெந்துவிட்டும். (இராலில் இருந்து நிறைய தண்ணீர் வெளிபட்டு தண்ணீயில் வேக ஆரம்பித்துவிடும். இதனால் சுவை மாறுபட்டுவிடும்.)

இந்த இரால் குழம்பில் கீரை தண்டு போடுவதால் சுவையினை மேலும் சேர்க்கும். 

4 comments:

madhu said...

how many days it will be good ?

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கு நன்றி மது.


ஒரு நாளைக்கு இரண்டு வேளை என்று கூடு செய்தால், இந்த குழம்பு 2 - 3 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

இந்த குழம்பு வகைகள் எல்லாம் ஒரு நாள் கழித்து சாப்பிட்டால் தான் ருசியே ...

இதனை ப்ரிஜில் வைத்தால் ஒரு வாரம் வரை கூட இருக்கும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

Anonymous said...

இரால் புளி குழம்பு "தூள்"
கீதா ஆச்சல்..... very thank .... Alagar jayakodi form chennai ......

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அழகர்கொடி...

மிகவும் மகிழ்ச்சி...

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என உங்களை அன்புடன் அழைக்கின்றேன். நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...