தவலை வடை - Thavalai vadai
வடை இல்லா விருந்து காணுவது அரிது. பண்டிகைகள், விருந்துகள் போன்றவற்றில் எண்ணெய் பலகாரம் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும். அப்படி செய்யபடும் பலகாரத்தில் ஒன்று இந்த வடை.

வடைகள் பல வகைகள் உள்ளன். அப்படி ஒரு வகை தான் இந்த தவலை வடை. இந்த தவலை வடை மேற்புறதில் மிகவும் கிரிஸ்பியாக(மொரு மொருப்பாக), உள்ளே மென்மையாகவும் இருக்கும்.

இந்த வடையினை நான் முதன் முதலில் என்னுடைய பெரியம்மா திருமதி. சாந்தா பாண்டுரங்கன் அவர்கள் வீட்டில் தான் சாப்பிட்டேன். எனக்கு வடை என்றால் மிகவும் விருப்பம் என்பதால் வித்தியசாமாக எனக்காக இதனை பெரியம்மா செய்து கொடுத்தார்கள். மிகுந்த காரம் இல்லாமல் சுவையாக இருப்பதால் என்னுடைய குழந்தையும்மிகவும் ருசித்து சாப்பிட்டாள்.

இதனை 2 – 3 நாட்கள் கூட வைத்து சாப்பிடலாம். நன்றாக சுவையாக இருக்கும்.
வாங்க…இதனுடை செய்முறையினை பார்ப்போம் வாருங்கள் .

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடம் (பருப்பினை 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்)
தேவையான பொருட்கள் ;
§  அரிசி – 1 கப்
§  கடலை பருப்பு – 1/2 கப்
§  துவரம் பருப்பு – 1/2 கப்
§  உளுந்தம் பருப்பு – 1/4 கப்
§  பாசிப்பருப்பு – 1/4 கப்
§  காய்ந்த மிளகாய் - 3
§  தேங்காய் பல் – சிறிதளவு
§  எண்ணெய் – பொரிப்பதற்கு
§  உப்பு – தேவையான அளவு
தாளித்து சேர்க்க வேண்டியவை :
§  எண்ணெய் – 1 தே.கரண்டி
§  கடுகு – 1 தே.கரண்டி
செய்முறை :
v  முதலில் அரிசி + கடலை பருப்பு + துவரம் பருப்பினை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
v  உளுந்தினை தனியாக ஒரு பாத்திரத்திலும், பாசிப்பருப்பினை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். நன்றாக ஊறிய பிறகு பருப்புகளை கழுவி தண்ணீர் வடித்துவிடவும்.
v  முதலில் அரிசி + கடலை பருப்பு + துவரம் பருப்பு + காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
v  உளுந்தினை இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும். பாசிப்பருப்பினை அரைக்க கூடாது.

v  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும். இப்பொழுது அரைத்த பருப்பு வகைகள் + பாசிப்பருப்பு + தேங்காய் பல் + தாளித்த பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

v  எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும். மிகவும் சுவையான தவலை வடை ரெடி.
குறிப்பு :
தேங்காயினை பொடியாக அரிந்து சேர்க்கவேண்டும். அதே போல ஊற வைத்த பாசிப்பருப்பினை அப்படியே சேர்க்க வேண்டும். 

5 comments:

Mrs.Menagasathia said...

என்ன கீதா நாம் 2 பேரும் ஒரே குறிப்பை குடுத்திருக்கோம் நீங்க வடை,நான் அடை குடுத்திருக்கேன்.உங்கள் குறிப்பும் நல்லாயிருக்கு!!

கீதா ஆச்சல் said...

ஹா…ஹா…என்ன பொருத்தம் பாருங்கள்…நம்ம இரண்டு பேருக்கும்…தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா…இதனை செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக சொல்லுங்கள்.

தெய்வசுகந்தி said...

நானும் இதே போல வடை மற்றும் அடை செய்வேன்!!! Looks good!!

Jasmine Jafar said...

hai geetha mam its very useful to us i wish to know some recepies in paneer n musroom can you give some recepies in that

Jasmine Jafar said...

hai geetha mam i like your blog its very useful and i wish to know some recepies in panneer and musroom items

Related Posts Plugin for WordPress, Blogger...