கீரை பொரியல் - Keerai Poriyal


கீரையினை தினமும் நம்முடைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவதன் மூலம் நம்முடைய உடலிற்கு புத்துணர்ச்சி அளிக்கிறோம். கீரையில் அனைத்து வித சத்துக்கள் இருக்கின்றன. அதனால் கீரையினை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிக அவசியம்.


பலரும் எனக்கு கீரை சாப்பிட பிடிக்கும் , ஆனால் அதனை ஆய்ந்த சுத்தம் செய்யும் நேரத்தில் வேறு எதவாது சுலபமான உணவினை தயரித்து விடலாம்…என பலர் கூற கேட்டு இருக்கிறேன்.


கீரையினை சுத்தம் செய்வது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை என்றே எனக்கு தோன்றும். கீரையின் வேர் பகுதியினை மட்டும் நீக்கி மற்ற பகுதியினை சமயலுக்கு உபயோகிக்கவும். 


ஆனால் பலரும் வெறும் கீரையின் இலைகளை மட்டும் எடுத்து சமையல் செய்வார்கள். இனிமேல் கீரையின் தண்டு பகுதியை தூக்கி எறியாமால் நாம் செய்யும் பொரியலிலோ அல்லது கூட்டு, குழம்பிலோ சேர்த்து செய்து பாருங்கள்…கண்டிப்பாக இனிமேல் எதையும் தூக்கி எறியமாட்டோம்..


சரி..இப்பொழுது கீரை பொரியலினை செய்வது எப்படி என்பதினை பார்ப்போம் வாருங்கள்…
இந்த கீரை பொரியலினை சாதத்துடன் கலந்து சாப்பிட, சாம்பார், ரசம், மோர். சாப்பத்தி போன்றவையுடன் மிகவும் பொருத்தமாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ கீரை – 1 கட்டு
§ வெங்காயம் – 1
§ உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
§ காய்ந்த மிளகாய் – 2
§ நசுக்கிய பூண்டு – 2 பல்
செய்முறை :
v கீரையினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
v பிறகு கீரை + உப்பு , வதக்கிய பொருட்களுடன் சேர்த்து நன்றாக கிளறி தட்டு போட்டு மூடி 5 – 8 நிமிடம் வேகவிடவும்.
v இப்பொழுது சுவையான கீரை பொரியல் ரெடி.
குறிப்பு :
கீரை வேகவைக்கும் பொழுது தண்ணீர் ஊற்ற வேகவைக்க தேவையில்லை.

7 comments:

ஹர்ஷினி அம்மா - said...

கீரை நல்லா பச்சை கலரா இருக்கு... என்ன கீரைப்பா இது.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா. இந்த கீரை புரோக்கலி ரேப்(Brocoli Rabe).
புரோக்கலி ரேப்பில் தான் நான் பெரும்பாலும் பொரியல் செய்வேன்.
மிகவும் சுவையாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பாருங்கள்.

ஹர்ஷினி அம்மா - said...

ஓஓஒ அப்படியா கீதா ...Brocoli Rabe இதுவரை வாங்கியது இல்லை... இந்த வாரம் கண்டிப்பா வாங்கி பன்னிபாக்கனும்.

Anonymous said...

புரோக்கலி ரேப் கீரை பொரியல் is good anti .... Alagar jayakodi

Geetha Achal said...

நன்றி அழகர் ஜெயகொடி.

Anonymous said...

hai geetha, in ur receipe everytime u said "milagaithool" whether it is "only chilli powder" or " mixing of chilli and other items like dania,bengal gram etc"

pls confirm

GEETHA ACHAL said...

நன்றி அனானி..

நான் மிளகாய் தூள் என்று குறிப்பிடுவது வெரும் மிளகாய் தூள்...

கலந்த மிளகாய் தூள் என்றால் தான் மிளகாய் தூள் + மற்ற பொருட்கள் சேர்த்து அரைத்த தூள்...

ஆனால் எப்பொழுதுமே தனி மிளகாய் தூள் தான் பயன்படுத்துகிறேன்...இங்கே எனக்கு அப்படி தான் கிடைக்கும்...

Related Posts Plugin for WordPress, Blogger...