கீரை தண்டு கூட்டு - Keerai Kootu


கீரை தண்டு கூட்டு
கீரை வகைகளினை அதிகம் சேர்த்து கொள்ளவது உடலிற்கு மிகவும் நல்லது.வளரும் குழந்தைகள் அதிகம் சாப்பிட வேண்டியது.

கீரையினை சுத்தம் செய்கிறோம் என்று பலரும் கீரை இலை பகுதியினை மட்டும் எடுத்து கொண்டு தண்டு பகுதியினை தூக்கி எறிந்துவிடுகிறோம்.

அப்படி அந்த தண்டு பகுதியினை தூக்கி எறியாமல் நான் அதனை பருப்பு வேக வைக்கும் பொழுது அதனை பருப்புடன் சேர்த்து வேகவைக்கலாம், கார குழம்பு , புளி குழம்புகள் செய்து பொழுது இதனையும் சேர்த்து செய்யலாம்.

இந்த செய்முறையில் கீரை தண்டினை தூக்கி எறியாமல் செய்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்..வாருங்கள் பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
§  கீரை தண்டு – 1 கப்
§  துவரம் பருப்பு – 1/2  கப்
§  சின்ன வெங்காயம் – 5
§  தக்காளி – 1 சிறியது    
தாளிக்க :
§  எண்ணெய் – 1 தே.கரண்டி
§  காய்ந்த மிளகாய் – 2
§  நசுக்கிய பூண்டு – 3 பல்
§  சீரகம் – 1 தே.கரண்டி
§  கடுகு – 1/4 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – தேவையான அளவு
கடைசியில் சேர்க்க :
§  தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
§  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
v  முதலில் கீரை தண்டினை நாரினை நீக்கி பொடியாக வெவும்.
v  கீரை + துவரம் பருப்பு + தூள் வகைகள் + 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
v  வெங்காயம், தக்காளியினை நீட்டாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
v  பின்னர் வெங்காயம் வதக்கி பிறகு தக்காளியை போட்டு அதில் வதக்கவும்.
v  அதன்பின் 1 கப் தண்ணீர் + வேகவைத்துள்ள கலவையினை இதில் சேர்த்து கொதிக்கவிடவும்.
v  தேங்காய் துறுவலினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
v  அரைத்த தேங்காய் விழுது + கொத்தமல்லி சேர்த்து மேலும் 3 நிமிடம் வேகவிடவும். சுவையான கீரை தண்டு கூட்டு ரெடி.
v  இதனை சாதம்சாப்பத்தி உடன் சாப்பிடமிகவும் சுவையாக இருக்கும்.

2 comments:

Mrs.Menagasathia said...

கூட்டு பார்க்கவே சாப்பிடத் தோனுது,நான் பொரியல் தான் செய்திருக்கேன் கூட்டு செய்ததில்லை.செய்து பார்க்கனும் கீதா!!

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா. கண்டிப்பாக செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...