செட்டிநாடு பெப்பர் சிக்கன் - Chettinad Pepper Chicken

        print this page Print
பெப்பர் சிக்கன் மிகவும் பிரபலமானது, அதிலும் செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் சிக்கன் என்றால் கேட்கவே வேண்டான், அவ்வளவு தனி சிறப்பு வாய்ந்தது. செட்டிநாடு சமையலில் இந்த பெப்பர் சிக்கன் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவு.

செட்டிநாடு சமையல் முறையில், சிக்கனை சமைக்கும் பக்குவம் மிகவும் வித்தியசமாக இருக்கும்.

நாம் பொதுவாக சிக்கனை சமைக்கும் பொழுது, இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன், வெங்காயம், தக்காளியினை போட்டு சிறிது நேரம் வதங்கிய பிறகு சிக்கனை அதில் சேர்த்து நன்றாக பிரட்டி வேகவிடுவோம்.


ஆனால் செட்டிநாடு செய்முறையில், இஞ்சி பூண்டு விழுது வதங்கிய உடன் வெங்காயம் + தக்காளி + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் உள்ள தண்ணீர் தன்மை வற்றிய எண்ணெய் வெளிவரும் சமயம் ,தான் சிக்கனை சேர்த்து 5- 8 நிமிடம் வேகவைக்க வேண்டும். 

இதனுடைய சுவையே அதில் தான் இருக்கின்றது.  இந்த பெப்பர் சிக்கனிற்கு, பெரிய துண்டுகளிற்கு பதிலாக சிறிய சிறிய சிக்கன் துண்டுகளில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

இத்துடன் சாதம், சாம்பார், ரசம், சப்பாத்தி போன்றவையுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும்.

வாங்க..இந்த பெப்பர் சிக்கனின் செய்முறையினை பார்ப்போம்…

சமைக்க தேவைப்படும் நேரம் :25 - 30 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  சிக்கன் – 1/2 கிலோ
§  வெங்காயம்  - 2
§  தக்காளி – 2
§  இஞ்சி பூண்டு விழுது – 2 தே.கரண்டி
தாளிக்க :
§  எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§  சோம்பு – 1 தே.கரண்டி
§  கருவேப்பில்லை – 5 இலை


 சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§  மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§  மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§  தனியா தூள் – 1 தே.கரண்டி
§  கரம் மசாலா தூள் – 1/2 தே.கரண்டி
§  உப்பு – 2 தே.கரண்டி
கடைசியில் சேர்க்க வேண்டியவை :
§  மிளகு தூள் – 1/2 தே.கரண்டி
§  கொத்தமல்லி – சிறிதளவு


செய்முறை :
v  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெங்காயம் + தக்காளி மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.


v  கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


v  பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி + தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.


v  இதனை 10 – 15 நிமிடம் தட்டு போட்டு முடி வேகவிடவும். இதில் இருந்து தண்ணீர் தன்மை எல்லாம் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். (எண்ணெய் பிரிந்து வந்த பிறகு தான் சிக்கனை சேர்க்க வேண்டும்.அது தான் சரியான பதம் இந்த செய்முறையில்.)


v  எண்ணெய் பிரிந்து வந்த பின் சிக்கனை அதில் சேர்த்து நன்றாக பிரட்டிவிட்டு தட்டு போட்டு முடி 5 – 8நிமிடம் வேகவிடவும்.


v  கடைசியில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறி 1 நிமிடம் வேகவிடவும்.


v  இப்பொழுது சுவையான செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.

19 comments:

ஹர்ஷினி அம்மா - said...

பாக்கவே நல்ல கலரா இருக்கு கீதா... எங்க வீட்டுலே வேரமாதிரி இருக்கும் ... இதை இன்னைக்கே பன்னி பாக்கனும்.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா.
செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். நன்றி

mrs.noohu said...

டியர் கீதா ஆச்சல் எப்படி இருக்கீங்க?குழந்தை நலமா?இப்பொழுதான் சேர்ச் செய்தப்ப உங்க பிலாக் ஐ பார்கிறேன் அழகா,அருமையா இருக்கு வாழ்த்துகள் :)

அன்புடன்.
மர்ழியா

shari said...

pepper chicken en veetil seithu parthen nanraga vanthathu. enakku puthukottai muttai maas eppadi seivathu enru solla mudiuma? pls...

Mahes said...

Tried this over the weekend, came out very yummy. Thanks!

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி மகேஷ்...

Anusha said...

Hi..
I tried it today..

It is yummy..

thanks for the good recipe

GEETHA ACHAL said...

நன்றி அனுஷா...செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் ரொம்ப மகிழ்ச்சி...

Anonymous said...

It taste very good, my family enjoyed this receipe.Thank you for your receipe, madam. by Stella

naga lakshmi said...

wow.....very colourful.........super taste....thank you geetha mam....

Saranya said...

very very nice. Neenga sonna mathiriye seithu parthen. supera irunthathu

Anonymous said...

super apdnu la solla mudiyathu sumar than.........,

Sanjeev said...

Thakkali eppo podanum nu ithil kurippidavilai

Chitra Leo said...

super taste

Chitra Leo said...

super taste.

Anonymous said...

chatti kariki pochu ma pattukutti......

prema latha said...

your recipes are nice.please post how to prepare semiya at home

Anonymous said...

please post how to prepare semiya at home

Anonymous said...

I tried this recipe.so good.thanks for your recipe.

Related Posts Plugin for WordPress, Blogger...