ரவா பொங்கல் - Rava Pongal - Pongal Recipes


பொங்கல் அனைவருக்கும் மிகவும் விருப்பமான காலை நேர சிற்றுண்டி. பொங்கல், சக்கரை பொங்கல் போன்றவையினை விஷேசம் , நல்ல நாள் போன்ற சமயங்கலில் பெரும்பாலும் நாம் சமைப்போம்.
எப்பொழுதும் அரிசியினை வைத்து தான் பொங்கல் செய்வோம். அரிசி சாப்பிட்டு மிகவும் போர் அடித்துவிட்டால் இப்படி ரவையினை வைத்து பொங்கல் செய்து பாருங்கள்…சுவையாக இருக்கும்..
அடுத்த முறை பொங்கல் செய்யும் பொழுது இப்படி செய்து பாருங்கள்…அப்புறம் உங்கள் வீட்டில் எப்பொழுதும் ரவா பொங்கல் தான்…வாருங்கள் இதன் செய்முறையினை பார்ப்போம்…
ரவா பொங்கலுடன் தேங்காய் சட்னி, சாம்பார், வடை போன்றவையுடன் சாப்பிட்டுவிட்டு சுடாக ஒரு காபி குடித்தால் அருமையோ…அருமை…
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  பாசிப்பருப்பு – 1 கப்
§  ரவை – 2 கப்
§  உப்புதேவையான அளவு
கடைசியில் தாளித்து சேர்க்க :
§  நெய் – 2 மேஜை கரண்டி
§  மிளகு – 1 தே.கரண்டி
§  சீரகம் – 1 தே.கரண்டி
§  பொடியாக நறுக்கிய இஞ்சிசிறிய துண்டு
§  கருவேப்பில்லை – 5 இலை
§  முந்திரி – 10
செய்முறை :
v  பாசிப்பருப்பினை சிறுது வறுத்து கொண்டு , 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஸர் குக்கரில் போட்டு 2 – 3 விசில் விட்டு வேகவைக்கவும்.
v  ரவையினை கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
v  பாசிப்பருப்பினை நன்றாக மசித்து 3 கப் தண்ணீர் + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
v  பிறகு அதில் ரவையை சேர்த்து கட்டிபடாமல் கிளறி வேகவிடவும்.
v  தாளிப்பு கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து அதனை ரவா பொங்கலுடன் சேர்த்து நன்றாக கிளறிவும்.
v  இதனை சாம்பார், சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.

2 comments:

ஹர்ஷினி அம்மா - said...

/அரிசி சாப்பிட்டு மிகவும் போர் அடித்துவிட்டால் இப்படி ரவையினை வைத்து பொங்கல் செய்து பாருங்கள்…சுவையாக இருக்கும்../

அரிசி கிடைப்பதும் இப்போ கஸ்டமா இருக்கு கீதா... கண்டிப்பா செய்து பாக்கனும்...நல்ல குறிப்பு

கீதா ஆச்சல் said...

ஆமாம் ஹர்ஷினி அம்மா...நீங்கள் சொல்வது உண்மை தான்..
கண்டிப்பாக செய்து பாருங்கள்..தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...