ப்ரெடெட் ஸ்ரிம்ப் (Breaded Shrimp)


ஸ்ரிம்ப் மிகவும் பிரபலமான கடல் உணவு. பெரும்பாலும் ஸ்ரிம்ப், appetizer செய்ய எற்றது.
இந்த ப்ரெடெட் ஸ்ரிம்பினை ஒரு முறை இங்கு உள்ள பிரபலமான கடல் உணவு Resturantயில் சாப்பிடுள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. அன்றில் இருந்து பெரிய வகை ஸ்ரிம்பினை வாங்கும் பொழுது அதனை இது மாதிரி சமைத்து சாப்பிடுவது.

இதனை செய்வது மிகவும் சுலபம். இதற்கு பெரிய அளவு இராலினை உபயோகிக்க வேண்டும். இராலினை சுத்தம் செய்யும் பொழுது வால் பகுதியினை மட்டும் நீக்க வேண்டாம். இந்த ஸ்ரிம்பினை சாப்பிடும் பொழுது அதனை தொடாமல் வால் பகுதியினை பிடித்து சாப்பிட்டு அதனை தூக்கிபோட்டு விடலாம். கையிலும் படாமல் சாப்பிட உதவுகின்றது. இது நல்லதொரு பிங்கர் புட்.

சுத்தம் செய்த இராலினை மைதா மாவு கரைசலில் தோய்த்து பின் அதனை பிரெட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரிக்க வேண்டும்.(வேண்டுமனால் 1 – 2 மணி நேரம் freezer வைத்து பின் எடுத்து பொரிக்கலாம்.) இதனை விருந்தினர் வரும் சமயம் செய்து கொடுத்தால் கண்டிப்பாக பாராட்டு நிச்சயம் உண்டு. இந்த ஸ்ரிம்பினை டொமெடோ சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதனுடைய செய்முறையினை இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§  பெரிய ஸ்ரிம்ப் (இரால் ) – 20
§  பிரெட் தூள் – 2 கப்
§  மைதா மாவு – 1/2 கப்
§  பார்மஜான் சீஸ் – 1/2 கப் (விரும்பினால்)
§  மிளகு தூள் – 1/4 தே.கரண்டி
§  உப்பு – 1 தே.கரண்டி
§  எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
v  இராலின் வால் பகுதியினை மட்டும் நீக்கமால் மற்ற அனைத்து பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.


v  ஒரு தட்டில் பிரெட் தூள் + பார்மஜான் சீஸ் + மிளகு தூள் + உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.


v  ஒரு பாத்திரத்தில் மைதா மாவினை 1 கப் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.


v  இப்பொழுது ஒரு இராலினை எடுத்து மைதா மாவு கரைசலில் தோய்த்து பின் பிரெட் தூள் கலவையில் பிரட்டி எடுக்கவும். இப்படியே அனைத்து இராலினை செய்து வைக்கவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைத்து பின் இந்த் ப்ரெடெட் ஸ்ரிம்பினை பொரித்து எடுக்கவும்.


v  இதனை சாஸுடன் பரிமாறவும். சுவையான பிங்கர் புட் ரெடி.


குறிப்பு :
இராலினை மைதா மாவு கரைசலில் தோய்ந்து பின் பிரெட் தூளில் பிரெட்டிய பின் Freezer வைத்துவிட்டால் விருந்தினர்கள் வரும் வேலை எடுத்து பொரித்து கொடுக்கலாம்.


அவரவர் விருப்பத்திற்கு எற்றாற் போல காரத்திற்கு மிளகினையோ அல்லது மிளகாய் தூளினையோ சேர்த்து கொள்ளலாம்.

2 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர் கீதா!!

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா.

Related Posts Plugin for WordPress, Blogger...