ஒட்ஸ் சுரைக்காய் தோசை - Oats Surakkai Dosai


வாங்கி வந்த சுரைக்காயினை எப்பொழுதும் கூட்டு, பச்சடி என்று சாப்பிட மிகவும் வெறுப்பாக இருக்கவே…. அதனால் நான் செய்த ஒட்ஸ் சுரைக்காய் தோசை…

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடம்
தேவையான பொருட்கள் :
§ ஒட்ஸ் – 1 கப்
§ துறுவிய சுரைக்காய் – 1 கப்
§ தயிர் – 1/4 கப்
§ உப்புதேவையான அளவு
செய்முறை :
v ஒட்ஸ் + துறுவிய சுரைக்காய் + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
v மாவு நன்றாக அரைப்பட்டவுடன், அரைத்த மாவு + தயிர் + உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
v தோசை கல்லினை காயவைத்து மெல்லிய தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
v இத்துடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு :
தோசை சுடும் பொழுது எண்ணெய் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. விரும்பினால் எண்ணெய் ஊற்றி சுட்டு கொள்ளலாம்.
மாவினை தோசை மாவு பதத்திற்கு நன்றாக மைய அரைத்து வைக்கவும்.இந்த மாவில் தோசை மிகவும் மெல்லியாதாக வரும்.

10 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்குங்க...

Mrs.Menagasathia said...

நல்ல நல்ல டயட் ரெசிபிலாம் குடுக்குறீங்க.
அதனால் நான் உங்களுக்கு ஒரு பட்டம் தரேன்.எங்கள் கீதா டயட் ரெசிபி ராணி என்று பட்டம் குடுக்கிறேன் ஏத்துக்குங்க கீதா!!

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி அண்ணா..

கீதா ஆச்சல் said...

//எங்கள் கீதா டயட் ரெசிபி ராணி என்று பட்டம் குடுக்கிறேன் ஏத்துக்குங்க கீதா!!//

மிகவும் நன்றி மேனகா....பட்டத்தினை எற்று கொண்டேன்...நன்றி மேனகா....

LK said...

சத்தான உணவு ...

GEETHA ACHAL said...

நன்றி கார்த்திக்...

அன்னு said...

ஹாய் கீதாக்கா,

அருமையான உணவு, அருமையான குறிப்பு. இப்போ எங்க வீட்டுல அடிக்கடி செய்யக்கூடிய ஒன்றாகி விட்டது. சுரைக்காய்க்கு பதில் வேறென்ன காயெல்லாம் உபயோகிக்கலாம்?

GEETHA ACHAL said...

ரொம்ப சந்தோசம் அன்னு...

சுரைக்காயிற்கு பதிலாக பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ, வெள்ளரிக்காய் போன்றைவை உபயோகிக்கலாம்...எல்லாம் நன்றாக வரும்...

அன்னு said...

Planning to use zucchini and see, will update you. Thank you sis.

GEETHA ACHAL said...

கண்டிப்பாக சுக்கினி வைத்து செய்து பாருங்க...நன்றாக தான் இருக்கும்...இங்கு என்னுடைய DHயிற்கு சுக்கினி என்றால் அலர்ஜி...எதோ பிடிக்காமல் போய்விட்டது...அதனால் அதனை அவ்வளவாக செய்வதில்லை...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...அன்னு...

Related Posts Plugin for WordPress, Blogger...