KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் - KFC Style Fried Chicken



என்ன தான் சொல்லுங்க…KFC சிக்கனுக்கு நிகர் KFC தான்…எப்படி தான் அவ்வளவு சுவையோ தெரியவில்லை…முன்பு எல்லாம் யோசிப்பேன்…எப்படி தான் இவ்வளவு சுவையாக செய்றாங்க…சிக்கனின் மேல்புறத்தில் மட்டும் இல்லாமல் உள்ளேயும் எப்படி சுவையாக இருக்கு என்று…


அதன் பிறகு என்னுடைய தேடுதல் வேட்டையில் நான் கண்டு அறிந்ததினை நீங்களும் செய்து பாருங்கள்..


நான் எப்பொழுதும் சிக்கனை ப்ரை செய்யும் பொழுது மசாலாவினை அப்படியே சிக்கனுடன் சேர்த்து பிரட்டி , அதனை 2 – 3 மணி நேரமாவாது ஊறவைத்து பிறகு பொரித்து எடுப்பேன்…ஆனால் வெளியில் சுவையாகவும் உள்ளே சுப்புனு இருக்கும்….எவ்வளவு நேரம் ஊறினாலும் இப்படி தான் இருக்கின்றது..


ஆனால் இந்த முறையில் சிக்கன் + மசாலா பொருட்கள் + சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைப்பதால் சிக்கனில் எல்லா பொருட்களும் சேர்த்துவிடுகின்றது. அதனால் சிக்கனை சாப்பிடும் பொழுது அதன் சுவையினை நம்மால் கண்டு அறியமுடிகின்றது..


அதே போல மைதா மாவுடன் பிரட்தூள் சேர்த்தால் மிகவும் க்ரிஸ்பியாக இருக்கும்..


உங்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல காரம், மசாலாவினை சேர்த்து கொள்ளவும்.
சிக்கனை 2 - 3 மணி நேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் 1 மணி நேரம் மிதமான சுடுதண்ணீரில் ஊறவைக்கவும்.(அதற்கு மேல் ஊறவைக்கவேண்டாம்....சிக்கனுக்கு (நமக்கும் தான்...) நல்லது இல்லை...)


வாங்க...நீங்களும் இந்த முறையில் சிக்கனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்…


சிக்கனை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : 2 – 3 நேரம் (குறைந்தது)
சமைக்க தேவைப்படும் நேரம்: 15 – 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சிக்கன் லெக் பிஸ்(Leg Piece) – 4
§ எண்ணெய் - பொரிப்பதற்கு
சிக்கனை ஊறவைக்க :
§ மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
§ இஞ்சி பூண்டு விழுது – 1 தே.கரண்டி
§ உப்பு – 3 தே.கரண்டி
§ எலுமிச்சைசாறு - 2 தே.கரண்டி
§ பார்ஸிலி இலை/கொத்தமல்லி இலை – சிறிதளவு (விரும்பினால்)
முட்டை கலவை :
§ முட்டை வெள்ளை கரு – 2
§ மிளகாய் தூள்/ மிளகு தூள் - 1/2 தே.கரண்டி
§ உப்பு – 1/4 தே.கரண்டி
மைதா கலவை :
§ மைதா மாவு – 1 கப்
§ பிரட் தூள் – 1/2 கப்
§ உப்பு – 1/2 தே.கரண்டி
செய்முறை :
§ சிக்கனை சுத்தம் செய்து லெக்பீஸுல் கத்தியினை வைத்து சிறிது கீறிவிடவும். (இப்படி கீறுவதால் மசாலா சிக்கன் உள்ளே சென்றுவிடும்)
§ ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கனை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றிவும்.
§ பிறகு சிக்கனுடன் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் அந்த தண்ணீருடன் கரைத்துவிடவும். இதனை அப்படியே குறைந்தது 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
§ முட்டையின் வெள்ளை கரு + மிளகாய் தூள்/மிளகு தூள் + உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
§ மைதா மாவு + பிரட் தூள் + உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கலந்து வைக்கவும்.
சிக்கன் ஊறி 2 – 3 மணி பிறகு :
§ கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.
§ சிக்கனை தண்ணீரில் இருந்த்து எடுத்து அதனை முட்டை கலவையில் தோய்த்து பிறகு அதனை மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.

§ பிறகு அதனை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் 6 – 8 நிமிடங்கள் வேகவிட்டு பொரித்து எடுக்கவும்.

§ சுவையான KFC ஸ்டைல் சிக்கன் ரெடி.

23 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

செஞ்சுடுவோம்... நன்றி பாச மலரே..

Mrs.Menagasathia said...

அசத்திட்டீங்க கீதா,பார்க்கும் போதே சாப்பிடத் தோனுது!!

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பார்க்கனுமாக்கும்....அண்ணா...

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா....வாங்க எங்க வீட்டிக்கு செய்து கொடுக்கிறேன்...

Thamarai selvi said...

கீதா ரொம்ப நல்லா இருக்கு,செய்ய கஷ்டமாவும் இருக்காதுனு நினைக்கிறேன்..வீக் எண்ட் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..நன்றி கீதா!!!

கீதா ஆச்சல் said...

வாங்க தாமரை...ஆமாம் தாமரை இது செய்வது மிகவும் சுலபம் தான்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றாக இருக்கும்...

சந்தோஷ் குட்டி எப்படி இருக்கின்றான்?...

Suresh said...

Oru murai padichen thiruma tamilish thedi pidichi intha varam nanum en wife um sernthu KFC chicken try seiyurom parpom

sridhar said...

Nice to see this, Let me try too.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீதர்.

கண்டிப்பாக செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்.

asiya omar said...

இது ரொம்ப நல்ல இருக்கு கீதா,இப்பதான் என் கண்ணில் பட்டது.

Geetha Achal said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ஆசியா அக்கா...மிகவும் சூப்பராக இருக்கும்...நன்றி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

அனாமிகா துவாரகன் said...

KFC-ல உருளைக்கிழங்கு ஸ்டார்ஜ் கலந்து செய்வாங்கனு சொன்னாங்க. கிடைச்சா கலந்து செய்து பாருங்க. அப்புறம் யாருமே KFC வேணும்னு சொல்லமாட்டாங்க.

மைதாவுக்குப் பதிலாக Corn Flour பாவியுங்க. இன்னும் ருசியாக இருக்கும். வளரும் பசங்களுக்கு செய்யறதில மஞ்சள் கருவை எடுத்திட்டு செய்ய வேண்டாமேன்னு அம்மா முட்டையை மிக்சியில அடிச்சுட்டு பாவிப்பாங்க (with yolk). நல்லாவே வரும். Try பண்ணி பாருங்க.

savitha ramesh said...

Geetha naan ungal visiri aagitten...appadiye namma tamizh manam paravudhu unga samaylil....adhu mattu millalmal,virundhombal panbu tamizhanukku mattum dhan nradhai prove pannitteenga ( by saying vaanga en vettukku)..vaazhga tamizh valarga sem mozhi......

GEETHA ACHAL said...

நன்றி சவிதா...உங்களுடைய அன்பான கருத்துக்கு நன்றி...மிகவும் மகிழ்ச்சி...

murali said...

i was try keetha mam result is very good thank you mam good receipe
D.Murali

GEETHA ACHAL said...

நன்றி முரளி....செய்து பார்த்து பின்னுட்டம் அளிததில் மிகவும் மகிழ்ச்சி...

Anonymous said...

Instead of water you can use butter milk

asmidha banu said...

Super tast

vanitha balasubramanian said...

hello akka na oats rava idly try panen sry sariya varala plz give some tips ena rava use pananum

GEETHA ACHAL said...

நன்றி வனிதா...ஒரு வேலை தண்ணீர் பதம் அதிகமாக இருந்தால் இட்லி சரியாக வராது. நான் ரவையினை வறுத்து சேர்ப்பேன்.

தண்ணீருக்கு பதில் தயிர் அளவு அதிகம் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

http://geethaachalrecipe.blogspot.ca/2009/07/oats-rava-idli.html

http://geethaachalrecipe.blogspot.ca/2012/04/instant-oats-wheat-rava-idli.html

Buvana Selvam said...

Hai Geetha mam, we tried KFC chicken at home. Wow really the it comes awesome. Superb taste. We never ate before like this. Thank you!!!! So much!!!

rajeswari muthazhagan said...

Mam nan unga rombal visiri.yeapadina unga samayala irunthu niraya saithu pathu irukayen.yen pasangakooda unga fan.

Related Posts Plugin for WordPress, Blogger...