ஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idli - Indian Oats Recipe / Idly Varieties

என்னது ஒட்ஸ் இட்லியா???இது எல்லாம் கொஞ்சம் ஒவராக தெரியவில்லையா…...என என் கணவர் கேட்டவுடன் ஆமாம்!! ஆமாசாப்பிட்டு பாருங்கள்..”என்று சொன்னேன். சாப்பிட்டுவிட்டு அவரும் நன்றாக இருக்கின்றது என்று சொன்னார்.


எப்பொழுதும் அரிசியில் இட்லி செய்து போரடித்துவிட்டால் இப்படி எதாவது விதவிதமாக் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த ஒட்ஸ் இட்லியினை நீங்களும் செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்.


அதிலும் முக்கியமாக உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம்.
இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ தயிர் – 1/2 கப்
§ உப்புதேவையான அளவு
வறுத்து கொள்ள :
§ ஒட்ஸ் – 1 கப்
§ ரவை – 1/2 கப்
தாளிக்க தேவையான பொருட்கள் :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
§ பச்சை மிளகாய் – 2
§ கருவேப்பில்லை – 3 இலை
§ இஞ்சிசிறிய துண்டு
செய்முறை :
v முதலில் ஒட்ஸினை கடாயில் போட்டு 2 - 3 நிமிடங்கள் வறுத்து கொண்டு அதனை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
v ரவையினை கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v பெரிய பாத்திரத்தில் பொடித்த ஒட்ஸ் + வறுத்த ரவை + தயிர் + தாளித்த பொருட்கள் + தேவையான அளவு தண்ணீர் + உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். இதனை 20 – 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
v பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.சுவையான ஒட்ஸ் ரவா இட்லி ரெடி. இதனை சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

குறிப்பு :
v இட்லி தட்டில் ஊற்றும் பொழுது இட்லி தட்டினை சிறிது நேரம் இட்லி பானையில் ஆவியில் வைத்தால் சூடாகிவிடும். அதன் பிறகு இட்லிதட்டில் மாவு ஊற்றினால் சீக்கிரம் வெந்து உப்பி இருக்கும்.
v இதில் சோடா மாவு எதுவும் நான் சேர்க்கவில்லை. இதற்கு நான் உபயோகித்த்து old- fashioned oats.

26 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆக உங்க கண்டுபிடிப்புக்கு உங்க வூட்டுக்காரர் தான் பலியாடா? நல்லா தான் இருக்கும் போல இருக்குங்க.. செய்ய சொல்லி பாப்போம்..

கீதா ஆச்சல் said...

//ஆக உங்க கண்டுபிடிப்புக்கு உங்க வூட்டுக்காரர் தான் பலியாடா? // என்னது பலியாடா...நீங்க வேற மிகவும் கொடுத்துவச்சவருனு சொல்லனும்..இப்படி எதே விதவிதமாக சமைச்சத சாப்பிட கொடுத்துவைக்க வேண்டாமா...என்ன...காரக்ட் தானே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//மிகவும் கொடுத்துவச்சவருனு சொல்லனும்//
நல்ல நகைச்சுவை உணர்வுங்க உங்களுக்கு..

கீதா ஆச்சல் said...

உண்மையை நான் சொன்ன இப்படியா சொல்லுவது அண்ணா!!!!!

Ammu Madhu said...

கீதா அக்கா,
என் ப்ளாக்கில் உங்களின் பதிவிற்கு நன்றி அக்கா..அக்காரவடிசல் கண்டிப்பா செய்து பாருங்கள்..கோவிலில் செய்யும் முறை இது....சூப்பரா இருக்கும்....செய்து பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஓட்ஸ் ஊத்தப்பம்,ஆப்பம்,அடை,இடிஆப்பம்,வடை எல்லாம் தெரியும் இட்லி இப்போ தன் கேள்வி படறேன்....இனிக்கி நைட் பண்ணிட்டு சொல்றேன்.

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

Ammu Madhu said...

கீதா அக்கா,

பண்ணிட்டேன்..நல்லா இருந்துச்சு..தொட்டுக்க தக்காளி தொக்கு பண்ணினேன்..எனக்கு ரொம்ப பிடிச்சது..

நேத்து நைட்டு இதே போல் இட்லி பண்ணி அத வச்சு ப்ரைடு இட்லி பண்ணி குடுத்தேன்..மதுக்கு ரொம்ப புடிச்சது..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

கீதா ஆச்சல் said...

மிகவும் சந்தோசம் அம்மு...உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இந்த இட்லி பிடித்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி...

Saro said...

I tried out this idly two days before and it was good. Had it with chutney and it was a tasty combination.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி சரஸ்வதி. இன்னும் இருக்கும் குறிப்புகளையும் செய்து பாருங்கள். கண்டிப்பாக் பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.

ஹர்ஷினி அம்மா said...

கீதா இன்னைக்கு உங்க ஒட்ஸ் ரவா இட்லிதான் எங்க வீட்லே டின்னர், கூட உங்க காரசார வெங்காய சட்னி.....எதாவது புதுசா பன்னினா முறைக்கும் என்னவர் கூட அட ஒட்ஸ்ஸான்னு சாப்பிட்டார்...ஆனா இட்லி நர்மல் இட்லி போல சாஃப்டா வரலை இப்படிதான் இருக்குமா?

Geetha Achal said...

மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா..

இந்த இட்லி , நாம் எப்பொழுதும் செய்யும் இட்லி போலவே நன்றாக வரும்...மாவு மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும்..

தண்ணீர் சிறிது அதிகமாகிவிட்டாலும் கூட இட்லி உப்பலாக இருக்காது..

சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு இட்லி தட்டில் இருந்து எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஹுஸைனம்மா said...

கீதா,

ஓட்ஸ் ரவா இட்லி செய்தேன். நன்றாக‌ இருந்தது. பிள்ளைகளுக்கும் பிடித்தது, ரொம்ப மகிழ்ச்சி. நன்றி.

Geetha Achal said...

தங்களுடைய கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி ஹுஸைனம்மா..

நன்றி.

அன்னு said...

கீதா க்கா,

இதுல வெள்ளை ரவை சேர்த்தீங்களா அல்லது கோதுமை ரவையா? இன்னிக்கு நைட் செஞ்சு பாக்கனும்.

GEETHA ACHAL said...

அன்னு...இந்த இட்லியில் ரவை சேர்த்து இருக்கின்றேன்...விரும்பினால் கோதுமை ரவையும் சேர்த்து கொள்ளலாம்...ஆனால் ரவையினை விட கோதுமை ரவையினை சிறிது நேரம் கூடுதலாக ஊறவிடவேண்டும்.

ஸாதிகா said...

ஓட்ஸில் இட்லி..ம்ம்..அசத்துங்க கீதாஆச்சல்.

LK said...

//க உங்க கண்டுபிடிப்புக்கு உங்க வூட்டுக்காரர் தான் பலியாடா//

ellar veetlaium ithuthana nadakuthu

சுந்தரா said...

புதுமையான நல்ல ரெசிபி...

விரைவில் செய்துபார்க்கிறேன்

prabhadamu said...

கீதா அக்கா ஓட்ஸில் இட்லி super...

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

asiya omar said...

கீதா ஆச்சல் ரவா இட்லி மிக்ஸ் இருக்கு,அதனுடன் நாளை ஒட்ஸ் சேர்த்து செய்து பார்க்கணும்.பார்க்க பஞ்சுபஞ்சாக இருக்கு.

GEETHA ACHAL said...

நன்றி ஸாதிகா அக்கா...

நன்றி கார்த்திக்...

நன்றி சுந்தரா...

நன்றி பிரபா...

நன்றி ஆசியா அக்கா...கண்டிப்பாக செய்து பாருங்க...சூப்பராக வரும்...

அன்னு said...

நேத்திக்கு நைட் இதான் செஞ்சேன் கீதாக்கா, அருமையா இருந்தது. ஆனா கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியானதால நல்லா உப்பலை. இருந்தாலும் எங்க ரெண்டு பேருக்கும் ரெம்ப பிடிச்சு போச்சு. ஒரியாக்காரர், ஆஹா பிரமாதம், சீக்கிரம் இந்த ரெசிபிய ப்ளாகுல போடுன்னாரு. நான் ஏற்கனவே இதை ப்ளாகில இருந்துதான் பார்த்து ட்ரை பண்ணேன்னவுடனே கப் சிப். தொட்டுக்க ஸ்பெசல் வேர்க்கடலை சட்னி. அதுவும் நல்லா இருந்தது. இன்னிக்கு லஞ்ச்ல தயிர்சாதத்துக்கு தொட்டுக்கவும் நல்லா இருந்தது. பிள்ளைங்க உடம்பு கூடறதுக்கு ஏதாவது ஹெல்தியா குறிப்பு போடுங்கக்கா. என் பையனுக்கு பீட்ஸா ஒன்னு தவிர வேறெந்த அமெரிக்க உணவும் பிடிக்காது. எல்லாமே நம்மூர் மாதிரிதேன் சாப்பிடுவான். சாக்லேட் விட சிப்ஸ், முறுக்குதேன் ரெம்ப இஷ்டம். அதனாலேயே எனக்கு தெரியலை என்ன குடுத்து இவனை தேத்தறதுன்னு!!

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப சந்தோசம் அன்னு...நீங்க சமைத்து பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி...

குழந்தைகள் இதே மாதிரி சாப்பிட்டாலும் வெயிட் போடுவாங்க...ரொம்ப வருத்தப்படாதீங்க...

விரும்பினால் என்னுடைய மெயில் ஐடியில் Contact செய்யலாம்.

madhav said...

oats rava idly inru dinner athu than seithu parthuvittu solkiren

Related Posts Plugin for WordPress, Blogger...