100வது பதிவு - பார்லி பாயசம்(Barley Payasam)


இந்த பதிவு என்னுடைய 100வது பதிவு !!!! என்னுடைய ப்ளாகினை படிப்பவர்கள், பின்னுட்டம் அளித்து என்னை மேலும் ஊக்கவிக்கும் நண்பர்கள், பாலேவர்ஸாக இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி .

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

· பார்லி(Quick Cooking Barley) – 1/4 கப்

· பால் – 4 கப்

· கண்டன்ஸ்டு மில்க்– 1 சிறிய டின் (அ) சக்கரை(தேவையான அளவு)

· நெய் – 2 தே.கரண்டி

· முந்திரி, திரட்சை – சிறிதளவு

· ஏலக்காய் – 1

செய்முறை :

v 1 தே.கரண்டி நெய் + பார்லி சேர்த்து வறுத்து கொள்ளவும். அதன்பின் அத்துடன் 4 கப் பால் சேர்த்து பார்லி வேகும் வரை வைக்கவும். (Quick Cooking Barleyயாக இருந்தாலும் கூட வேகசிறிது நேரம் எடுக்கும் – குறைந்தது 15 - 20 நிமிடங்கள்)

v இப்பொழுது மீதம் உள்ள நெயில் முந்திரி , திரட்சையினை வறுத்து தனியாக வைக்கவும்.

v பார்லி நன்றாக வெந்து, பால் சுண்டி இருக்கும். பொடித்த ஏலக்காய் + கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.

v கடைசியில் வறுத்த முந்திரி + திரட்சை சேர்த்து பரிமாறவும். சுவையான ஹெல்தியான பார்லி பாயசம்.

குறிப்பு :

பார்லியினை பாலில் வேகவைக்க நேரம் அதிக எடுக்கும். அதனால் நேரத்தினை சேமிக்க, பார்லியினை பிரஸ்ர் குக்கரில் போட்டு வேகவைத்த பிறகு பாயசத்தில் சேர்த்து கொள்ளலாம்.


44 comments:

நட்புடன் ஜமால் said...

100க்கு 100 வாழ்த்துகள்

பாயசத்தோடு சொன்ன விதம் அழகு.

En Samaiyal said...

Congrats on ur 100th post ......long way to go ....All the Best .....Barley paayasam maa.....always u r giving unique recipes .....cool...

Pavithra said...

Congrats on your 100th post geetha wish u should reach more milestone... All the best. And the barley payasam is looking so good and rich wish to have right away.

Nithya said...

Kalakareenga.. paayasam super and 100vdhu postukku valthukkal :)

En Samaiyal said...

Congrats on ur awards too....

sarusriraj said...

கீதா தங்களது 100 ஆவது பதிவுக்கு வாழ்துக்கள். வித்யாசமான இனிப்பு பாயாசத்துடன் வழங்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்

Saro said...

Congrats on hitting the century! I'm looking forward to more recipes from you...

ஹர்ஷினி அம்மா said...

கீதா சுவையான, ஆரோகியமாக, எளிதாக செய்ய கூடிய ரெசிபிஸ்...அதுவும் குருகிய காலத்தில் 100-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்..

100 விரைவில் பல 100 ஆக வாழ்த்துகள் :-)

Mrs.Menagasathia said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கீதா!!.வித்தியாசமான பார்லி பாயசம் குடுத்து அசத்திட்டீங்க.
100 இன்னும் பல 100 ஆக வாழ்த்துக்கள்!!

Thamarai selvi said...

100 அடிச்சாச்சா? சூப்பர்ர்ர்!!வாழ்த்துக்கள்!!கலக்கிட்டீங்க கீதா!!இன்னும் நிறைய கொடுங்க,ஆவலோடு படிச்சு பார்த்து செய்ய ரெடியா இருக்கேன்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள்!!!

இலா said...

Congrat Geetha!!! solli iruntha kalayilee car eduthuttu vanthu iruppenee..

Priya said...

Congrats Geetha...Wat an excellent way to celebrate ur 100th post..delicious paayasam..

D.R.Ashok said...

Plz help me, how to cook sambar, rasam(separate topic) like that for living. becoz I am depending food from wife or sis or mom. My stomach not suit for hotel food. I dont now how to cooking.

For food, i joined ur site

congrats for 100th pathivu.

கீதா ஆச்சல் said...

தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஜமால்.

கீதா ஆச்சல் said...

//Barley paayasam maa.....always u r giving unique recipes .....cool.//வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ப்ரியா.

கீதா ஆச்சல் said...

//the barley payasam is looking so good and rich wish to have right away// வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பவித்ரா.

கீதா ஆச்சல் said...

//aayasam super and 100vdhu postukku valthukkal :)// வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நித்யா

கீதா ஆச்சல் said...

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சாரு அக்கா.

கீதா ஆச்சல் said...

//Congrats on hitting the century! I'm looking forward to more recipes from you.//வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சரஸ்வதி.

கீதா ஆச்சல் said...

//ஆரோகியமாக, எளிதாக செய்ய கூடிய ரெசிபிஸ்...அதுவும் குருகிய காலத்தில் 100-ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்..// வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ஹர்ஷினி அம்மா...

கீதா ஆச்சல் said...

//வித்தியாசமான பார்லி பாயசம் குடுத்து அசத்திட்டீங்க.
100 இன்னும் பல 100 ஆக வாழ்த்துக்கள்!!// வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மேனகா.

கீதா ஆச்சல் said...

//இன்னும் நிறைய கொடுங்க,ஆவலோடு படிச்சு பார்த்து செய்ய ரெடியா இருக்கேன்!!// வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி தாமரை.

கீதா ஆச்சல் said...

வாழ்த்துக்கு மிகவும் நன்றி ராஜ் அண்ணா..

கீதா ஆச்சல் said...

//solli iruntha kalayilee car eduthuttu vanthu iruppenee..//சரி..இப்ப கார் எடுத்துகிட்டு வாங்க...பாயசம் ரெடியாக இருக்கு....வாழ்த்துக்கு கருத்துக்கும் மிகவும் நன்றி இலா..

கீதா ஆச்சல் said...

//Wat an excellent way to celebrate ur 100th post..delicious paayasam..//வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ப்ரியா.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அசோக்.

கண்டிப்பாக இதில் இருக்கும் குறிப்புகளில் இருந்து செய்து பாருங்கள்...அனைத்து எளிதில் செய்ய கூடிய உணவாக இருக்கும்...

கண்டிப்பாக அடிக்கடி வாங்க...

Ammu Madhu said...

வாழ்த்துக்கள் கீதா அக்கா..

அன்புடன்,
அம்மு.

RAKS KITCHEN said...

Dear geeta,
Congrats on your 100th post!!!
Looking forward for more from here :)

I love the texture of barley, My mom used to give this ,long time since i had barley!!

Porkodi (பொற்கொடி) said...

ஓ கீதா ஆச்சல் நீங்களும் ப்லாக்கறீங்களா..? அறுசுவையில் இருந்து நிறைய பேர் ப்ளாக் பண்றீங்க போல!

ரொம்ப நல்லாருக்கு பாயசம்.. ஒரு கப் அனுப்பி வைங்க ப்ளீஸ். 100க்கு வாழ்த்துக்கள்! :)

Mohan said...

100 வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மிகவும் புரியும்படி எளிதாக படங்களுடன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. உங்கள் சமையல் குறிப்புகளிலிருந்து சிலவற்றை நான் பயன்படுத்தி இருக்கிறேன். நன்றி!
தொடருங்கள்!! வாழ்த்துக்கள்!!!

Mohan said...

ஓட்ஸ் -ஐப் பயன்படுத்தி எத்தனை வித ஐட்டங்கள். வெறும் கஞ்சி மட்டுமே வைக்க முடியும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தை மாற்றி உபயோகமான எத்தனை வித தகவல்கள் தந்துள்ளீர்கள்! பதிவுலகில் விருது எப்படிக் கொடுப்பது என்பது எனக்குத் தெரியாது. எனது இந்த மனமார்ந்த வாழ்த்துக்களையே
விருதாக எடுத்துக்கொள்ளுங்கள்!! நன்றி! நன்றி!!

வால்பையன் said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்!

SanjaiGandhi said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்.. :)

கீதா ஆச்சல் said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி அம்மு.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி rak's

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி பொற்கொடி.

கண்டிப்பாக வாங்க எங்கள் வீட்டிற்கு ஒரு கப் பாயசம் ரெடியாக இருக்கு...

வால்பையன் said...

//கண்டிப்பாக வாங்க எங்கள் வீட்டிற்கு ஒரு கப் பாயசம் ரெடியாக இருக்கு... //

சோதனைக்கு வேறு யாரும் சிக்கலையா!?

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி மோகன்.

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி..

கண்டிப்பாக என்னுடைய சமையல் குறிப்புகளை செய்து பாருங்கள்...

இப்பொழுது நான் டயடில் இருப்பதால் பெரும்பாலும் டயட் சமையல் தான்...

அனைவரும் பல சமையல் குறிப்புகளை பார்த்து இருப்பாங்க...அதனை எல்லாம் பார்த்தவுடனே சாப்பிட தோனும்...செய்தும் சாப்பிடுவோம்..ஆனால் எடை எறிகிட்டே போகும்..

என்னுடைய இந்த ப்ளாகில் இருக்கும் குறிப்புகளை செய்து பாருங்கள்...கண்டிப்பாக உடல் ஆரோகியத்துடன், எடை குறையவும் உதவும்.

உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் சொல்லுங்கள்.நன்றி...

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி வால்பையா...

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சஞ்சய்...

கீதா ஆச்சல் said...

////கண்டிப்பாக வாங்க எங்கள் வீட்டிற்கு ஒரு கப் பாயசம் ரெடியாக இருக்கு... //

சோதனைக்கு வேறு யாரும் சிக்கலையா!?//

வால்பையன் தான் ஒசியாக கேப்பாரு என்று நினைத்தேன்...ஆனால்.....தப்பித்துவிட்டார்...என்ன செய்ய...

S.A. நவாஸுதீன் said...

ஸ்வீட்டா ஒரு செஞ்சுரி. வாழ்த்துக்கள் சகோதரி

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நவாஸுதீன்..

அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வாங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...