பார்லி கோதுமை ரவா இட்லி / தோசை ( Barley Wheat Rava Idly / Dosai - Indian Barley Recipe / Idly Varieties

பார்லியில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது… உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் அதிக அளவு நார்சத்து உள்ள ஒரு உணவினை சாப்பிடுவது நல்லது.
பார்லியில் கஞ்சி மட்டும் தான் செய்ய முடியும் என்றில்லாமல் , இட்லி, தோசை, அடை, கலந்த சாதம் என பல வகைகளிலும் இதனை செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி – 2 கப்
· கோதுமை ரவை – 1 கப்
· தயிர் – 2 மேஜை கரண்டி
· காய்ந்த மிளகாய் – 3 (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v பார்லியினை குறைந்த்து 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு ஊறவைத்த பார்லி + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.
v அரைத்த பார்லி + கோதுமை ரவை + தயிர் + உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொண்டு, 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

இட்லிகள் செய்ய :
இட்லி தட்டுகளில், மாவினை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான சத்தான பார்லி இட்லி ரெடி.

தோசை செய்ய :
தோசை கல்லினை காயவைத்து, மெல்லிய தோசைகளாக மாவினை ஊற்றி வேகவிடவும்.

ஒருபக்கம் நன்றாக வெந்த பிறகு, தோசையினை திருப்பி போட்டு மேலும் 1 நிமிடம் வேகவிடவும்.
சுவையான சத்தான பார்லி தோசை ரெடி.
இந்த இட்லி / தோசையுடன் சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
மாவினை இட்லிக்கு ஊற்றும் பொழுது கெட்டியாக இருக்கவேண்டும். இதுவே, தோசையாக ஊற்ற வேண்டும் எனில், சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
பார்லி + கோதுவை ரவை சேர்த்து கலந்துபின், கண்டிப்பாக குறைந்த்து 1 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். அப்பொழுது தான் கோதுமை ரவை மாவுடன் சேர்ந்து நன்றாக ஊறியிருக்கும்.

38 comments:

நட்புடன் ஜமால் said...

மிகவும் சத்தான பொருட்களை எளிய முறையைல் கொடுத்து உள்ளீர்கள்

வாழ்த்துகள் - நன்றி.

vidhas said...

First time here,Geetha. Love to read in tamil and i wanted to type my comment in tamil, but theriyala. Sathana dosai and idli. Kalkureenga.

Sanghi said...

Mmm nalla recipe! Naan kandippa try pannuven!

Mrs.Menagasathia said...

super,i will try this soon!!!

sarusriraj said...

geetha no words to congrats u , all recipes are easyiest one and healthy , mouth watering recepies

யோ வாய்ஸ் said...

நன்றி அக்கா. சாப்பிட்டு பார்க்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

அருமைங்க. பிரிண்ட் போட்டு வச்சிட்டேன். நோன்பு முடியட்டும் செஞ்சிருவோம்

அதிரை அபூபக்கர் said...

ஆரோக்கியமான உணவு, வகையை.. எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள்..நன்றி.

Shama Nagarajan said...

healthy idli dear...looks perfect

கீதா ஆச்சல் said...

//மிகவும் சத்தான பொருட்களை எளிய முறையைல் கொடுத்து உள்ளீர்கள்// தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்.

கீதா ஆச்சல் said...

// Love to read in tamil and i wanted to type my comment in tamil, but theriyala. Sathana dosai and idli. Kalkureenga//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி vidhas.

தமிழில் தான் comment கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தமிழில் எழுத editor வேண்டும்..
இருந்தாலும் தங்கள் முயர்ச்சிக்கு மிகவும் நன்றி..

அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் sanghi. நன்றி.

Geetha Achal said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் மேனகா. நன்றி

Geetha Achal said...

//all recipes are easyiest one and healthy , mouth watering recepies//
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சாரு அக்கா.

Geetha Achal said...

//நன்றி அக்கா. சாப்பிட்டு பார்க்கிறேன்// அப்பாடா...கடைசியாக யோகாவே சாப்பிட்டு பார்க்கிறேன் என்று சொல்லியாச்சு அப்புறம் என்ன...

அம்மா, எப்படி இருக்காங்க...

Geetha Achal said...

//அருமைங்க. பிரிண்ட் போட்டு வச்சிட்டேன். நோன்பு முடியட்டும் செஞ்சிருவோம்//

மிகவும் மகிழ்ச்சி நவாஸுதீன்.. கண்டிப்பாக செய்து பாருங்கள். நன்றி

Geetha Achal said...

//ஆரோக்கியமான உணவு, வகையை.. எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள்..//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அதிரை அபூபக்கர்.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன். நன்றி

Geetha Achal said...

//healthy idli dear//தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா.

சிங்கக்குட்டி said...

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.

En Samaiyal said...

always u r giving a healthy & unique recipes pa.....romba vithaasama eruku...

குறை ஒன்றும் இல்லை !!! said...

Wow... Thxxxxxxxxxxxxxxxx

RAKS KITCHEN said...

Barely season?!! Nice idea and recipes geeta....will be very useful to include barley in diet!!

Viki's Kitchen said...

First time here..I am addicted to ur blog now:) U have a nice space with lot of Tamil recipes...Admire the way u type in Tamil. Good job done.
Gonna try this barley idly / dosa soon.

Porkodi said...

barley oats nu ore sathaana bloga irukke geetha :)

Valarmathi said...

Wow Geetha, ur blog looks great, liked the way writing in tamil. Dont know how to type comment in tamil. Barley dosa looks great and this is such a yummy way to eat barley.

Hema said...

Dosai and Idly with barley and wheat.. sounds healthy and innovative.. please accept ur award form my blog http://salt2taste.blogspot.com/2009/09/coconut-rice-thengai-sadham.html

Geetha Achal said...

தங்கள் விருதுக்கு நன்றி சிங்ககுட்டி...நாளைக்கு கண்டிப்பாக விருதினை போட்டுவிடுகின்றேன்...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி...ஆமாம் கண்டிப்பாக உடல் எடையினை குறைக்க விரும்புவோர் மட்டும் இல்லாது, அனவைருக்கும் இந்த உணவுகள் மிகவும் சிறந்தது.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விக்கி.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன். நன்றி

Geetha Achal said...

வாங்க பொற்கொடி...ஆமாங்க..இப்ப டயடிங் இருப்பதால் இப்படி சத்தான ப்ளாக் ஆயிடுச்சு...

Geetha Achal said...

தங்கள் விருத்துக்கு மிகவும் நன்றி ஹேமா.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வளர்மதி..

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவும் என அன்புடன் அழைக்கின்றேன்.

அருண் said...

அக்கா வாழ்க , தொடருங்கள் உங்கள் சேவையை , உங்க துணைவர் மிகவும் கொடுத்து வைத்தவர் .

Geetha Achal said...

//தொடருங்கள் உங்கள் சேவையை , உங்க துணைவர் மிகவும் கொடுத்து வைத்தவர் //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அருண்...

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.நன்றி

Mahi said...

கீதா,பார்லி இட்லி செய்துட்டேன்..நன்றி!

நான் மிளகாய்,கோதுமைரவை,தயிர் இதெல்லாம் சேர்க்கலை..ஒண்ணரை டம்ளர் பார்லி,அரை டம்ளர் இட்லி அரிசி, ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்தேன்..இட்லி நல்லா வந்தது!

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி..செய்து பார்த்துவிட்டு சொன்னதில் மிகவும் மகிழ்ச்சி...நன்றி மகி...

Related Posts Plugin for WordPress, Blogger...