தினமும் ஒரு முட்டை அவசியமா?


தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை.

காலை நேரத்தில் சிற்றுண்டியாக, 2 முட்டையினை சாப்பிடுவதால், நம்முடைய உடலிற்கு 14 கிராம் அதிக சத்துகள் நிரம்பிய Protein, 12 கிராம் கொழுப்பு ,1 கிராம் Carbohydrate மற்றும் 13 விதமான Minerals & விட்டமின்ஸ் கிடைக்கின்றது.

பொதுவாக ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிஸ் இருக்கின்றது, இதில் 60 கலோரிஸ் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கின்றது. மீது 20 கலோரிகள் தான் வெள்ளை கருவில் இருக்கின்றது. அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள், வயதனவர்கள் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு Cholesterol இருக்கின்றது. ஆனாலும் இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவினை அதிகப்படுத்துவதில்லை. ஆனாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 300 mg Cholesterol நம்முடைய உடலிற்கு தேவைப்படுகின்றது. ஒரு முட்டையின மஞ்சள் கருவில் சுமார் 275 mg இருக்கின்றது. தினமும் முட்டையினை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தினமும் காலை நேர உணவாக, இரண்டு முட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் உடல் இயங்கும்..(முட்டையில் அதிக சத்துகள் இருப்பதால்.) இப்படி தினமும் 2 முட்டையினை சாப்பிடுவதால் உடல் இளைக்கவும் உதவுகின்றது.

முட்டையினை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,

முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பது மிகவும் நல்லது.

வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும் முன்போ(எப்படியும் சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்இது அதற்கும் முன்பு…)முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.

வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.முட்டையின் வெள்ளை கருவினை 8 – 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 – 3 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.

முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள Iron சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் Sulfurருடன் சேர்த்து முட்டையின மஞ்சள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றிவிடுகின்றது. (…அது நல்லது அல்ல…)

முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது: Expiry Dateயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். Expiry Dateயிற்கு 2 – 3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.

முட்டையினை அனைத்து வித சமையலுக்கும் உபயோகிக்கலாம்.

26 comments:

Mrs.Menagasathia said...

நல்லத் தகவல் கீதா!!.

// Expiry Dateயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். Expiry Dateயிற்கு 2 – 3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.// இது எனக்குத் தெரியாது.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!

sarusriraj said...

முட்டை பத்தி இவ்வளவு தகவலா , மிகவும் நன்றி கீதா பகிர்ந்து கொண்டமைக்கு

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா

கீதா ஆச்சல் said...

நன்றி சாரு அக்கா.

குட்டி பிரபு said...

அருமையான தகவல்கள்! சமையலோட சேர்த்து இந்த மாதிரி தகவலும் கொடுத்தா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஏங்க இங்க முட்டைக்கு Expiry date 1 week தாங்க :)
ஆனாலும் நல்ல தகவல்.. நன்றி...

En Samaiyal said...

wow very nice tips about Egg ......Nice of u for sharing .......

கீதா ஆச்சல் said...

//சமையலோட சேர்த்து இந்த மாதிரி தகவலும் கொடுத்தா ரொம்ப பயனுள்ளதா இருக்கும்// என்னுடைய அனைத்து குறிப்புகளும் சமையலோட தான் இருக்கும். கண்டிப்பாக செய்து பாருங்கள்.

கீதா ஆச்சல் said...

//ஏங்க இங்க முட்டைக்கு Expiry date 1 week தாங்க :)//ஒ..அப்படியா...
கருத்துக்கு நன்றி ராஜ்.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியாராஜ்.

கிறுக்கல் கிறுக்கன் said...

நல்ல தகவல்

ஸ்வர்ணரேக்கா said...

முதல்முறையா உங்க சமையலறைக்கு ஆசையா வந்தேன்.. நான் வெஜிடேரியன் விருந்தா போச்சு.. பரவாயில்லை.. இன்னோரு நாள் வெஜிடேரியன் விருந்துக்கு வரேன்...

Pavithra said...

Hi geetha that is really so informative and useful. And the yolk changing to green color is really informative will take care of doing egg from now onwards....thanks for sharing this .. post more like this.

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்கள்.

-----------------

முட்டையை பொறிப்பதற்காக எடுத்து உடைக்கும் முன்பு அதனை கழுவுதல் நலம்.

Chitra said...

first time to ur blog..its very informative..ellaam sathaana samaiyal post :) will visit frequently

Priya said...

Excellent informations Geetha!

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி கிறுக்கல் கிறுக்கன்.

கீதா ஆச்சல் said...

//முதல்முறையா உங்க சமையலறைக்கு ஆசையா வந்தேன்.. நான் வெஜிடேரியன் விருந்தா போச்சு.. பரவாயில்லை.. இன்னோரு நாள் வெஜிடேரியன் விருந்துக்கு வரேன்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்வர்ணாரேகா..

கண்டிப்பாக அடிக்கடி வாங்க...என்னுடைய பெரும்பாலான குறிப்புகள் அனைத்தும் வெஜிடேரியன் தானுங்க...

நாளைக்கு வாங்க..உங்களுக்குகாக வெஜிடேரியன் குறிப்பு பதிவு தானுங்க...

உங்கள் பெயர் அழகாக இருக்கின்றது...

கீதா ஆச்சல் said...

//And the yolk changing to green color is really informative will take care of doing egg from now onwards....thanks for sharing this .. post more like this.//தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா.

கண்டிப்பாக இது மாதிரி நல்ல தகவல்கள் என்னுடைய பதிவில் இனி நீங்கள் அடிக்கடி காணலாம்.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்புடன் ஜமால்.

//முட்டையை பொறிப்பதற்காக எடுத்து உடைக்கும் முன்பு அதனை கழுவுதல் நலம்.//ஆமாம் கண்டிப்பாக இப்படி செய்வது நல்லது.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா.
கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வாங்க...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

braintime0 said...

Geetha, Egg is my all time favourite one. Regulara egg sappitta, uddambu koraiyum-nnu sollaratha ketta ..ah..ahh.. evvalavu nalla irruku... :).

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி braintime.

கண்டிப்பாக அடிக்கடி வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

asiya omar said...

கீதாச்சல் உங்கள் ப்ளாக்கில் உள்ள அனைத்திலும் கருத்திட ஆசை,ஆனால் முடிந்த நேரம் வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம்.எல்லாமே அருமையோ அருமை.எதை பாராட்ட எதை விட அத்தனையும் மிகவும் நேர்த்தி.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஆசியா அக்கா.

எப்படி இருக்கின்றிங்க...வீட்டில் அனைவரும் நலமா..

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...