பிரவுன் ரைஸ் அடை (Brown Rice Adai)

வேகவைத்த பிரவுன் ரைஸினை வைத்து செய்த சுவையான சத்தான அடை…இந்த அடை மிகவும் சுவையாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப்
· ஒட்ஸ் – 3/4 கப்
· தேங்காய் துறுவல் – 2 தே.கரண்டி
· பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1
· கொத்தமல்லி – சிறிதளவு
· உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· சீரகம் – 1/2 தே.கரண்டி
செய்முறை :
v ஒட்ஸுனை மிக்ஸியில் பொடித்து தனியாக வைக்கவும். அதன் பின், வேகவைத்த பிரவுன் ரைஸினை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வைக்கவும்.
v அரைத்த சாதம் + பொடித்த ஒட்ஸ் + தேங்காய் துறுவல் + பச்சை மிளகாய் + கொத்தமல்லி + தாளித்த பொருட்கள் + உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
v பிசைந்து வைத்துள்ள கலவையினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி, அடைகளாக தட்டி கொள்ளவும்.

v தோசை கல்லினை காயவைத்து, தட்டிய அடையினை போட்டு வேகவிடவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்தபிறகு அடையினை திருப்பிபோட்டு அதனை மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.

சுவையான பிரவுன் ரைஸ் அடை ரெடி.

குறிப்பு :
ஒரு பிளாஸ்டி பேப்பர் மீது எண்ணெய் தடவி, உருட்டிய உருண்டைகளை வைத்து, அதன் மீது மற்றொமொரு எண்ணெய் தடவிய பேப்பர் வைத்து, அடைகளாக தட்டவும். இப்படி தட்டினால் மிகவும் ஈஸியாக அடைகள் தட்டவரும்.


இதோ போல வெள்ளை சாதத்திலும் செய்யலாம். டயட்டில் இருப்பவர்கள் தேங்காய் துறுவலினை சேர்த்து கொள்ள தேவையில்லை.

8 comments:

Saro said...

Awesome idea geetha!!! Thanks for the recipe...

sarusriraj said...

all your recepie are tempting to eat..

Mrs.Menagasathia said...

ப்ரவுன் ரைஸ் அடை பர்ர்க்கவே சாப்பிடத் தோனுது,செய்து பார்க்கிறேன் கீதா.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க..

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சரஸ்வதி.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

//ப்ரவுன் ரைஸ் அடை பர்ர்க்கவே சாப்பிடத் தோனுது//கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்.

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா.

Related Posts Plugin for WordPress, Blogger...