சிப்போடேலே சிக்கன்(Chipotle Chicken)Chipotle – Mexican Grillயில் கிடைக்கும் சிக்கனை என்னுடைய வீட்டில் அதே செய்முறையில் நான் சமைத்தது.
சிக்கனை ஊறவைக்க : குறைந்தது 1 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ சிக்கன் (Boneless, Skinless Chicken Breast) – 2
§ Chipotle Peppers in Adobo Sauce – 4 Peppers
§ சீரக தூள் – 2 தே.கரண்டி
§ மிளகு – 10
§ சிவப்பு வெங்காயம்(Red Onion) – 1/2
§ பூண்டு – 4 பல்
§ எண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v சிக்கனை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வெங்காயாத்தினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
v வெங்காயம் + சீரக தூள் + மிளகு + பூண்டு + Chipotle Peppers + எண்ணெய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.
v இந்த விழுதினை சிக்கனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி 1 மணி நேரமாவது ஊறவிடவும்.
v ஒரு பெரிய அடிகணமான பனினை நன்றாக காயவிடவும். அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு கிரில் பண்ணுவது போல, அதிக தீயில் 3 நிமிடங்கள் வேகவிடவும்.

v சிக்கனை திருப்பிபோட்டு மேலும் வேகவிடவும்.

v சிக்கன் நன்றாக வெந்த பிறகு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும். சுவையான சிப்போடேலே சிக்கன் ரெடி.

கவனிக்க :
இந்த சிக்கனை சமைக்கும் பொழுது அதிக தீயில் வைத்து சமைக்கவும். அப்பொழுது தான் சுவையாக இருக்கும்.


Reposting it for my Friend.....

11 comments:

கீதா ஆச்சல் said...

ஹர்ஷினி அம்மா சொன்னது..
வாவ் எனக்கு இது ரொம்ப பிடிக்கும் அப்படியே பிலேக் பீன் எல்லாம் போட்டு ஒரு ரைஸ் இருக்குமே அந்த ரெசிபியையும் குடுங்க கீதா.

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா...

நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள்...

//பிலேக் பீன் எல்லாம் போட்டு ஒரு ரைஸ் இருக்குமே அந்த ரெசிபியையும் குடுங்க கீதா//

சிப்போடேலே பிலக் பீன்ஸை சொல்லுகின்றிங்களா...

Chipotleவில் கிடைக்கும் Clinatro Lime rice கொடுத்து இருக்கின்றேன்..
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/chipotle-cliantro-lime-rice.html
பாருங்கள்...

நீங்கள் இதனை தான் சொல்லுறிங்களா...

எம் அப்துல் காதர் said...

பெயர் தான் வாயில நுழைய மாட்டேங்குது.மற்றபடி நல்லா இருக்கு medam!!

angelin said...

thanks for sharing this recipe.
my daughter would love to taste this.
corn meal idly with garlic chutney seydhu parthhen it came very nice.
WISH YOU A HAPPY PONGAL.
HAVE A LOVELY WEEKEND.

GEETHA ACHAL said...

நன்றி அப்துல்...

நன்றி ஏஞ்சலின்...இட்லி செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மகிழ்ச்சி..

இதனையும் செய்து பாருங்க...நல்லா இருக்கும்...

Jay said...

save me some geetha..I'll be right over...
tempting recipe with irresistable click..:P
Tasty Appetite

Mahes said...

My kids would love this, will try it soon. Thanks!

Vimitha Anand said...

That looks so tempting and yummy geetha...

Shanavi said...

Geetha, I love chipotle flavours..Oru naal naanum seidhu paarkirein

Jhansi Hemanth said...

I have a doubt about chipotle peppers in adobo sauce... where can i get it?

GEETHA ACHAL said...

நன்றி ஜான்சி...இந்த பெப்பர்ஸ் எல்லா கடைகளிலும் கிடைக்கும்.Walmartயில் Mexican Sectionயில் தேடி பாருங்க...

நான் Local American Grocery Shopயில் தான் வாங்கி இருக்கின்றேன்...கண்டிப்பாக எல்லா கடைகளிலும் இருக்கும். இந்த பெப்பரினை அந்த சாஸில் ஊறவைத்து இருப்பாங்க...Canned Foods Sectionயிலும் தேடி பாருங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...