கிரீமி புரோக்கோலி சூப் (Creamy Broccoli Soup)புரோக்கோலியில் அதிக அளவு விட்டமின்ஸ்(Vitamin A, C & K) மற்றும் நார்சத்து இருக்கின்றது.
புரோக்கோலி சாப்பிடுவதால் எலும்புகள் வலுபெருகின்றது.
கர்பிணி பெண்கள் இதனை சாப்பிடவதால், குழந்தைக்கு சத்துகள் கிடைக்கின்றது. இதில் அதிக அளவு folic acid இருக்கின்றது. அதனால் குழந்தைகள் குறையில்லாமல்(Birth Defects) ஹெல்தியாக பிறக்கும். இது ஒரு நல்ல Birth Defect Fighter.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· புரோக்கோலி – 1 பூ
· வெங்காயம் – 1
· பூண்டு – 2 பல் நசுக்கியது
· பட்டர் – 1 தே.கரண்டி
· பால் () Heavy Cream – 1 கப்
· உப்பு, மிளகு தூள்தேவையான அளவு
· துறுவிய சீஸ்பரிமாறும் பொழுது
செய்முறை :
v புரோக்கோலியினை சிறிய சிறிய பூக்களாக வெட்டி கொள்ளவும்.வெங்காயத்தினை மிகவும் பொடியாக வெட்டிவைக்கவும்.
v புரோக்கோலி + தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

v வேகவைத்த புரோக்கோலியினை சிறிது நேரம் ஆறவைத்த பிறகு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.

v ஒரு பாத்திரத்தில் பட்டரினை போட்டு பூண்டு போட்டு வதக்கியபிறகு பொடியாக வெட்டிய வெங்காயத்தினை போட்டு 2 - 3 நிமிடம் வதக்கவும்.
v பிறகு, வதக்கிய பொருட்களுடன், அரைத்த புரோக்கோலி விழுது + பால் + உப்பு + மிளகு தூள் சேர்த்து 5 – 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

v பரிமாறும் பொழுது மேலும் சிறிது மிளகு தூள் + துறுவிய சீஸ் சேர்க்கவும்.

சுவையான ஹெல்தியான சூப்.

குறிப்பு :
டயடில் இருப்பவர்கள், Heavy Cream () பாலினை சேர்க்க வேண்டாம். அதற்கு பதிலாக தண்ணீரை மட்டும் சேர்த்து கொள்ளவும்.

27 comments:

Shobana senthilkumar said...

Hi,
First time here...u hv got a gr8 blog...romba supera irrku....naaku uruthu:)

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி சோபனா...

அடிக்கடி இந்த பக்கம் வாங்க..

Mrs.Menagasathia said...

நல்ல ஹெல்தியான சூப் பார்க்கவே அழகாயிருக்கு கீதா!!

Shama Nagarajan said...

nice lovely creamy soup

குறை ஒன்றும் இல்லை !!! said...

நம்ம ஊரில இது கிடைக்குமாங்க?

Mrs.Faizakader said...

எங்க ஊரில் இந்த புரோக்கோலி கிடைக்காதே என்ன செய்வது? வேறு பொருள் பயன்படுத்தலாமா>

நட்புடன் ஜமால் said...

புரோக்கோலி எனக்கு ரொம்ப பிடிக்கும்

மிக்க நன்றி.

வால்பையன் said...

இந்த கிருமி உடம்புக்கு ஒன்னும் செய்யாது!?

En Samaiyal said...

sounds diff... healthy soup .........nice ...

இலா said...

Geetha.. this would definetly be good for the hot summer...Nice...

கீதா ஆச்சல் said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் மேனகா...சுவையாக இருக்கும்..

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா.

கீதா ஆச்சல் said...

//
குறை ஒன்றும் இல்லை !!! said...
நம்ம ஊரில இது கிடைக்குமாங்க?
//

//எங்க ஊரில் இந்த புரோக்கோலி கிடைக்காதே என்ன செய்வது? வேறு பொருள் பயன்படுத்தலாமா//

இதனை Nilgiris Shopயில் ஒரு முறை இந்தியாவில் இருக்கும் பொழுது வாங்கி இருக்கின்றேன்...

reliance கடைகளில் இது கிடைக்கின்றது என்று ஒரு முறை எங்க அம்மா சொன்னாங்க...அங்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்...

புரோக்கோலி கிடைக்கவில்லை எனில், இதே போல் காலிஃப்ளவர், பச்சை பட்டாணியிலும் செய்யலாம்...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

கீதா ஆச்சல் said...

//இந்த கிருமி உடம்புக்கு ஒன்னும் செய்யாது!?// நல்லதை மட்டும் தான் செய்யும்...

வால்பையா...ரொம்ப தான் நீங்க வாலு...

புரோக்கோலி உடலிற்கு மிகவும் நல்லது...
அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய்...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி இலா...செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்.

RAKS KITCHEN said...

Still am hesitant to cook broccoli at home,but heard that its very healthy!!

sarusriraj said...

எங்க ஊர்ல நீல்கிரிஸ் கிடையாது அதனால் காலிபிளவர், பட்டாணி வைத்து செய்து பார்கிறேன்
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

Jaishree said...

HiGeetha,
Thanks for visiting my Blog.Your blog is awesome! Brocoli soup is delicious.. Do visit often to my space.. Have a gr8 day!

Bharathy said...

I love this soup and had tried only once.. :)
Namma oorle fresh broccoli romba pakka mudiyarathilla..
Unga recipes ellam romba homely a nalla irukku..:)..thanks for following me too..

Vijitha Shyam said...

First time here. Yummy healthy soup.

கீதா ஆச்சல் said...

ஆமாம், ராஜேஸ்வரி புரோக்கோலி உடலிற்கு மிகவும் நல்லது...ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள்..சுவையாக இருக்கும்..

கீதா ஆச்சல் said...

சாரு அக்கா, கண்டிப்பாக இதே போல பச்சபட்டாணி வைத்து செய்து பாருங்கள்...சுவையாக இருக்கும்...

கருத்துக்கு நன்றி...ஜனனி குட்டியின் கைவண்ணம் அழகாக இருக்கின்றது...வாழ்த்துகள்..

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயஸ்ரீ.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரதி...கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வாங்க..

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜிதா...கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...