கீரை கொள்ளு பொரியல் (Keerai Kollu Poriyal)

கீரையினை தினமும் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
எப்பொழுதும் கீரையினை மட்டும் தனியாக பொரியல், கூட்டு, கடைசல் என்று சாப்பிடுவோம். 


அத்துடன் எதாவது ஒரு பருப்பு வகையினை சேர்த்து சாப்பிட்டால் உடலிற்கு மிகவும் நல்லது.
இந்த கீரை கொள்ளு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்.


இந்த பொரியலுக்கு கொள்ளினை ஊறவைத்து, கீரையுடன் சேர்த்து வேகவைக்கவும். ஊறவைத்த கொள்ளு வேக 10 நிமிடங்களுக்கும் குறைவாக தான் நேரம் எடுக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ கீரை – 1 கட்டு
§ ஊறவைத்த கொள்ளு – 1 கப்
§ வெங்காயம் – 1
§ நசுக்கிய பூண்டு – 2 பல்
§ காய்ந்த மிளகாய் – 2
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ கடுகுதாளிக்க
§ உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
v கொள்ளினை குறைந்தது 3 - 4 மணி நேரம ஊறவைத்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையினை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம் பருப்பு + காய்ந்த மிளகாய் தாளித்து பின் நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி பின் வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

v பின் கொள்ளினை போட்டு மேலும் 3 நிமிடம் வதக்கவும்.

v அதன்பின், கீரை + தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வேகவிடவும்.
v சுவையான சத்தான கீரை கொள்ளு பொரியல் ரெடி.

கவனிக்க:
இந்த பொரியலுக்கு தண்டு கீரை, Collard Greens, Brocolli Rabe போன்ற கீரைகள் மிகவும் சுவையாக இருக்கும்.

6 comments:

பிரபாகர் said...

நம்ப மாட்டீர்கள், சமையலில் நிறைய ஆர்வமெனக்கு. கண்டிப்பாய் நாளை காலை கீரை கொள்ளு பொறியல்தான்.(அப்பா வந்திருந்தபோது அவரின் சுகருக்கு நல்லது என அம்மா கொடுத்தனுப்பிய கொள்ளினை என்ன செய்ய என பெரிதாய் ஒரு கேள்வி நேற்று தான் எழுந்தது.)
நன்றி.

பிரபாகர்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

mmm.. Thx..

Mrs.Menagasathia said...

கொள்ளு போட்டு செய்வது சூப்பராகதான் இருக்கும்.

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபாகர்.

//நம்ப மாட்டீர்கள், சமையலில் நிறைய ஆர்வமெனக்கு//மிகுந்த சந்தோசம்.

//அப்பா வந்திருந்தபோது அவரின் சுகருக்கு நல்லது என அம்மா கொடுத்தனுப்பிய கொள்ளினை என்ன செய்ய என பெரிதாய் ஒரு கேள்வி நேற்று தான் எழுந்தது// ஆமாம் கொள்ளு மிகவும் உடலிற்கு நல்லது.

கொள்ளினை வைத்து நான் செய்து உள்ள மற்ற குறிப்புகளையும் செய்து பாருங்கள்.நன்றி.

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா.

கீதா ஆச்சல் said...

நன்றி மேனகா. நேரம் கிடைக்கும்பொழுது செய்து பாருங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...