மஷ்ரூம் மசாலா (Mushroom Masala)


சுவையான மஷ்ரூம் மசாலாவினை நீங்கள் செய்து பார்த்து உங்கள் கருத்தினை தெரிவிக்கவும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ மஷ்ரூம் – 1 Packet
§ வெங்காயம் – 1
§ தக்காளி – 1
§ கருவேப்பில்லை – 5 இலை
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
§ மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
§ மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
§ தனியா தூள் – 1/2 தே.கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
§ சோம்பு – 1 தே.கரண்டி
§ கடுகு – 1/4 தே.கரண்டி
கடைசியில் தூவ :
§ பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
v மஷ்ரும் + வெங்காயம் + தக்காளியினை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சோம்பு தாளித்து வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
v வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி + மஷ்ரூம் + சேர்க்க வேண்டிய தூள் வகைகள் சேர்த்து நன்றாக கிளறி 12 – 15 நிமிடங்கள் வேகவிடவும்.
v கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான மஷ்ரூம் மசாலா ரெடி.

9 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

இதுதா டையட்டா?

Priyanka said...

பாக்கும் போதே ஆசையா இருக்குங்க! நாளைக்கி மதியம் மஷ்ரூம் மசாலா தான் சைடு டிஷ் எங்க வீட்ல... ;) :)

கீதா ஆச்சல் said...

//இதுதா டையட்டா?/// இது என்ன கேள்வி...யார் சொன்னா டயட் இருந்தா இப்படி எல்லாம் சாப்பிட கூடாது என்று?

மஷ்ரூம் மிகவும் நல்லது...இது என்னுடைய டயட் உணவில் நான் சேர்த்து கொள்வது தான்...

கீதா ஆச்சல் said...

பிரியங்கா, மிகவும் நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும்...செய்வதும் மிகவும் சுலபம்.

malu said...

hi geetha new to this blog
very interesting good job

பிரதீபா said...

செஞ்சு பாத்தேங்க கீதா. ரொம்ப நல்லா வந்துச்சுங்க.. எல்லாம் வெந்ததுக்கு அப்புறமா ஏதோ தோணி, கடைசியில ரெண்டு முட்டை உடைச்சு போட்டேன் அதுக்குள்ள; புதுசா ஒரு சுவை, அதுவும் நல்லாவே இருந்தது. மஷ்ரூம் வாசம் ஒரு மாதிரி இருக்குமே, அதை முட்டை சரி செய்து விட்டது.
பீட்டா பிரட் கூட வெச்சு சாப்பிட பிரமாதமா இருந்துதுங்க. கொங்கு சமையல் மட்டுமே செய்யத் தெரிஞ்ச எனக்கு உங்க புண்ணியத்தால இன்னும் ரெண்டு மூணு ஐட்டம் கத்துக்கிட்டேன். நன்றி கீதா.

GEETHA ACHAL said...

மிகவும் சந்தோசம் பிரதீபா...கருத்துக்கு நன்றி...

yeskha said...

இதைக் காப்பி அடிக்கக்கூடாது என்று போட்டிருக்கிறீர்கள்.. காப்பி அடிக்காமல் எப்படி நான் இதை செய்து பார்ப்பது...?

yeskha said...

இதைக் காப்பி அடிக்கக்கூடாது என்று போட்டிருக்கிறீர்கள்.. காப்பி அடிக்காமல் எப்படி நான் இதை செய்து பார்ப்பது...?

விளையாட்டாகச் சொன்னேன்.. செய்து பார்த்தேன்.. என்னுடைய மோசமான கைப்பக்குவத்திற்கே நன்றாக வந்தது..

Related Posts Plugin for WordPress, Blogger...