ஒட்ஸ் சட்னி - Oats Chutney - Side Dish for Idly and Dosa - Oats Indian Recipe

ஒட்ஸினை வைத்து சட்னியா?....ஆமாம்..ஒட்ஸ் சட்னி தாங்க…எப்பொழுதும் பொட்டுகடலை சட்னி, வேர்க்கடலை சட்னி என்று எல்லாம் செய்து இருப்போம்…அது போல் தான் ஒட்ஸ் சட்னியும், செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக சத்தான சட்னி

ஒட்ஸினை எதாவது ஒரு வழியில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.


சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· ஒட்ஸ் – 1 கப்
· தேங்காய துறுவல் – 1/2 கப்
· பச்சை மிளகாய் – 2
· பூண்டு – 1 பல்
· இஞ்சிசிறிய துண்டு
· உப்பு - சிறிதளவு
தாளிக்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 3 இலை
செய்முறை :
· ஒட்ஸ் + தேங்காய் துறுவல் + பச்சை மிளகாய் + பூண்டு + இஞ்சி + உப்பு + தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
· தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எல்லாம் தாளித்து சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.
· சுவையான ஒட்ஸ் தேங்காய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, உப்புமா, வடை போன்றவையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
இந்த சட்னியினை செய்தவுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

20 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

போங்க.. வாழ்த்தி வாழ்த்தி விரலே வலிக்குது.. :)

sarusriraj said...

கீதா ஒட்ஸ் ல் இத்தனை விதமான சமையலா , கலக்குங்க , வெரும் கஞ்சி , சூப் மட்டும் செய்ய தெரிந்த எனக்கு ஒட்ஸில் இத்தனை விதம் செய்ய கற்று தந்ததிற்கு மிகவும் நன்றி

Mrs.Menagasathia said...

கீதா நேற்றிரவு இந்த சட்னி செய்தேன்,சூப்பர்.ஆனா அரைத்த உடனே சாப்பிடனும் இல்லைன்னா கொழகொழன்னு இருக்கு.பொட்டுக்கடனை சட்னி மாதிரியே இருக்கு,நன்றி உங்களுக்கு!!

manjula said...

geetha,very nice to see the different chutney

சப்ராஸ் அபூ பக்கர் said...

தனிய இருக்கிற ஆண்கள் செய்யக் கூடிய ரொம்ப இலகுவான சமையல் குறிப்பு ஒன்று எழுதுங்க..... ப்ளீஸ்...... (ஆனால் அது எனக்கல்ல, என்னுடைய உயிர் தோழனுக்கு....)

வாழ்த்துக்கள்....

ஸ்வர்ணரேக்கா said...

ஹய்!! ஒட்ஸ் பணியாரம், அதுக்கு மேட்சா ஒட்ஸ் சட்னின்னு, விருந்த அமர்க்களபடுத்திட்டீங்க கீதா.. சூப்பர்...

En Samaiyal said...

Wow puthusu puthusa recipes pootu kalaikurenga...... oats kanchi thaan naan kayelvi pattu erukayen.....aanaa oats ella chutney ,panneyaram eppo thaan kayelvi paturayen.......very nice...will try it

En Samaiyal said...

Pls collect ur award from my blog ......

நிலாமதி said...

ஒட்சில் கஞ்சி மட்டுமே செய்ய தெரிந்த எனக்கு உங்க ரெசிப்பி மிகவும் பயனுள்ளது.நன்றிங்க. தொடர்ந்து எழுதுங்க. நிலாமதி.

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா...

கீதா ஆச்சல் said...

//ஒட்ஸ் ல் இத்தனை விதமான சமையலா , கலக்குங்க , வெரும் கஞ்சி , சூப் மட்டும் செய்ய தெரிந்த எனக்கு ஒட்ஸில் இத்தனை விதம் செய்ய கற்று தந்ததிற்கு மிகவும் நன்றி// மிகவும் நன்றி சாரு அக்கா..


இப்பொழுது டயடில் இருப்பதால் எப்படி எல்லாம் ட்ரை செய்கின்றேன்...

கீதா ஆச்சல் said...

//இந்த சட்னி செய்தேன்,சூப்பர்.ஆனா அரைத்த உடனே சாப்பிடனும் இல்லைன்னா கொழகொழன்னு இருக்கு.பொட்டுக்கடனை சட்னி மாதிரியே இருக்கு,நன்றி // ஆமாம் மேனகா, இந்த சட்னியினை செய்த உடனே சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்...அப்படியே பொட்டுகடலை சட்னி மாதிரியே இருக்கும்..

இதனை வீட்டில் செய்து கொடுத்த பொழுது, யாருமே இதனை ஒட்ஸ் சட்னி என்று நம்பவில்லை...சாப்பிட அப்படியே பொட்டுகடலை சட்னி மாதிரியே இருந்தது...

செய்துவிட்டு பின்னுட்டம் தந்தமைக்கு நன்றி

கீதா ஆச்சல் said...

தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சுளா..

கீதா ஆச்சல் said...

//தனிய இருக்கிற ஆண்கள் செய்யக் கூடிய ரொம்ப இலகுவான சமையல் குறிப்பு ஒன்று எழுதுங்க..... ப்ளீஸ்...... (ஆனால் அது எனக்கல்ல, என்னுடைய உயிர் தோழனுக்கு....)//

இந்த ப்ளாகில் நிறைய குறிப்புகள் எளிதில் செய்ய கூடியதாக இருக்கும்.

இன்னும் நிறைய குறிப்புகள் கண்டிப்பாக கொடுக்கின்றேன்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சப்ராஸ்

கீதா ஆச்சல் said...

//ஒட்ஸ் பணியாரம், அதுக்கு மேட்சா ஒட்ஸ் சட்னின்னு, விருந்த அமர்க்களபடுத்திட்டீங்க கீதா.. // மிகவும் நன்றி ஸ்வர்ணா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

கீதா ஆச்சல் said...

//Wow puthusu puthusa recipes pootu kalaikurenga...... oats kanchi thaan naan kayelvi pattu erukayen.....aanaa oats ella chutney ,panneyaram eppo thaan kayelvi paturayen.......very nice...will try it//

மிகவும் நன்றி ப்ரியா. கண்டிப்பாக செய்து பாருங்கள்...

உங்களுடைய விருதுக்கு மிகவும் நன்றி.

கீதா ஆச்சல் said...

//ஒட்சில் கஞ்சி மட்டுமே செய்ய தெரிந்த எனக்கு உங்க ரெசிப்பி மிகவும் பயனுள்ளது.நன்றிங்க. தொடர்ந்து எழுதுங்க//

கண்டிப்பாக செய்து பாருங்கள்.

தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிகவும் நன்றி நிலாமதி.

Shama Nagarajan said...

lovely chutney...hope u love oats a lot

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷாமா நாகராஜ்.

Sweetlime said...

yummy and very creative idea with oats....All ur receipes are super...

Related Posts Plugin for WordPress, Blogger...