ஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)
ஒட்ஸ் உடலிற்கு மிகவும் நல்ல ஒரு உணவு. ஒட்ஸ் சாப்பிடுவதால் Cholesterolலினை குறைக்க உதவுகின்றது. இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் மிகவும் நல்லது. இதனை வைத்து நாம் பல சமையல் குறிப்புகளை பார்த்து இருக்கின்றோம்…
இதனையும் செய்து பாருங்கள்…அருமையாக இருக்கும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· ஒட்ஸ் – 2 கப்
· ரவை – 1 கப்
· தயிர் – 1/2 கப்
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய்/நெய் - சிறிதளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· சீரகம் – 1/4 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 4 இலை
· உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
· வெங்காயம் – 1
· பச்சை மிளகாய் – 2
செய்முறை :
v ஒட்ஸினை 3 கப் தண்ணீ ஊற்றி 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். வெங்காயம் + பச்சை மிளகாயினை பொடியாக வெட்டி கொள்ளவும்.
v கடாயில் ரவையினை போட்டு வெறுமனே வறுத்து எடுத்து தனியா வைக்கவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் + உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
v ஊறவைத்த ஒட்ஸினை அதே தண்ணீருடன் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
v ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த ஒட்ஸ் + வறுத்த ரவை + வதக்கிய பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கி 30 நிமிடங்கள் வைக்கவும்.
v பணியாரகல்லில் எண்ணெய்/நெய் ஊற்றி இந்த கலவையினை பணியாரங்களாக ஊற்றவும்.

v ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடம் வேகவிடவும்.

v சுவையான ஒட்ஸ் பணியாரம் ரெடி. இதனை சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் புதினா, கொத்தமல்லி என சேர்த்து செய்யலாம்.

7 comments:

sarusriraj said...

geetha tempting to eat mouth watering recepie , keep it up

Nithya said...

Marubadiyum oru kalakal recipe.. semma healthy..

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி சாரு அக்கா.

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி நித்யா..

Thamarai selvi said...

ஓட்ஸ்ல நிறைய ரெஸிப்பிஸ் கொடுக்கிறீங்க!!எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு!!ஒன்னு ஒன்னா ட்ரை பண்றேன் கீதா!!நன்றி!!

கீதா ஆச்சல் said...

//ஓட்ஸ்ல நிறைய ரெஸிப்பிஸ் கொடுக்கிறீங்க!!எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு!!ஒன்னு ஒன்னா ட்ரை பண்றேன் கீதா!!//கண்டிப்பாக பொறுமையாக செய்து பாருங்கள் தாமரை...

சந்தோஷ் குட்டிக்கு மிகவும் பிடிக்கும்...நன்றி

Priya Narasimhan said...

romba nalla recipe..inda saturday idai seidu paarkiren..

Related Posts Plugin for WordPress, Blogger...