ராகி கீரை கொழுக்கட்டை(Ragi Spinach Kozhukattai)

ராகியினை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுவது நல்லது. அதே போல நம்முடைய அன்றாட உணவில் கீரையினை சேர்த்து கொள்வது மிக அவசியமானது.


இந்த ராகிமாவு + ஸ்பினாச் கீரையினை வைத்து நான் செய்த இந்த கொழுக்கடையினை நீங்களும் செய்து பார்த்து உங்களுடைய கருத்தினை தெரிவிக்கவும்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 - 35 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ ராகி மாவு – 2 கப்
§ ஸ்பினாச் கீரை (Spinach) – 2 கப்
§ வெங்காயம் – 1
§ பச்சை மிளகாய் – 3
§ உப்பு – தேவையான அளவு
§ எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை :
v வெங்காயம் + பச்சை மிளகாய் + கீரையினை பொடிதாக வெட்டி வைக்கவும்.
v கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் + பச்சை மிளகாயினை வதக்கிய பிறகு கீரையினை போட்டு 3- 4 நிமிடங்கள் வதக்கவும்.
v வதக்கிய பொருட்களை 5 நிமிடங்கள் ஆறவிட்டு ராகி மாவு + தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். ( மாவினை பிசையும் பொழுது தண்ணீர் ஊற்றி தேவையில்லை. கீரையில் இருந்து வெளிபடும் தண்ணீரே போதும். வேண்டுமானால் 1 – 2 மேஜை கரண்டி தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். )
v இதனை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

v ராகி உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

v இப்பொழுது சுவையான சத்தான ராகி கீரை கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு :
கீரையினை அப்படியே மாவில் கலந்து கொழுக்கட்டை பிடிக்க்கூடாது. அதற்கு காரணம்,கீரையில் தண்ணீர் தன்மை அதிகமாக இருக்கின்றது. வதக்காமல் செய்தால், கொழுக்கட்டை சொதசொதவென்று ஆகிவிடும்.


அதனால், எப்பொழுதும் கீரையினை வதக்கி செய்தால் நன்றாக இருக்கும்…இந்த மாதிரி கொழுக்கட்டைகளுக்கு.


உங்கள் விருப்பதிற்கு எற்றாவாறு நீங்கள் கீரையினை சேர்த்து கொள்ளலாம்.

7 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - இவ்ளோ சமயல் குறிப்பா

அட்டகாசம் போங்க

நாக்கிலே தண்ணி ஊறுது

யார் இதெல்லாம் செய்யறது ....

நல்வாழ்த்துகள் கீதா

கீதா ஆச்சல் said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சீனா.

கண்டிப்பாக நேரம் கிடைக்கும்பொழுது செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

கலக்குங்க..

ஹர்ஷினி அம்மா said...

மிண்டும் ஒரு அரோகியமான ரெசிபி வீட்டுக்கு போனதும் கண்டிப்பா பன்னி பாக்கனும்.:-)

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா....

கீதா ஆச்சல் said...

//மிண்டும் ஒரு அரோகியமான ரெசிபி வீட்டுக்கு போனதும் கண்டிப்பா பன்னி பாக்கனும்.:-)//

கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா. கண்டிப்பாக புது வீட்டிற்கு சென்றபிறகு பொறுமையாக செய்து பாருங்கள்...

Priya said...

Geetha i have seen ur recipes in Arusuvai.com, today only i came to know u too have a blog, excellent recipes yaar! if u have time pls visit my blog..

Priyasuresh
http://priyaeasyntastyrecipes.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...