தட்டை (Thatai)


இவ்வாரம் வருகின்ற, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக நான் செய்யும் எளிதில் செய்ய கூடிய தட்டை..
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
§ அரிசி மாவு – 2 கப்
§ ஊறவைத்த கடலைபருப்பு – 1/4 கப்
§ வெண்ணெய் – 2 மேஜை கரண்டி
§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி
§ உப்புதேவையான அளவு
§ எண்ணெய் - பொரிப்பதற்கு
அரைத்து கொள்ள :
§ கருவேப்பில்லை – 5 இலை
§ காய்ந்த மிளகாய் – 2
செய்முறை :
v கடலைபருப்பினை குறைந்து 1 மணி நேரமாவது ஊறவைத்து கொள்ளவும்.
v அரைக்க கொடுத்துள்ள கருவேப்பில்லை + காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
v அரிசி மாவு + அரைத்த பொருட்கள் + ஊறவைத்த கடலைபருப்பு + வெண்ணெய் + பெருங்காயம் + உப்பு சேர்த்து நன்றாக பிசையுவும்.
v வெண்ணெயுடன் அரிசிமாவு நன்றாக கலந்து இருக்க வேண்டும். பிறகு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
v இதனை சிறிய சிறிய உருண்டைகளை உருட்டி, அதனை தட்டை போல தட்டி கொள்ளவும்.

v கடாயில் எண்ணெய் காயவைத்து, தட்டிய தட்டைகளை பொரித்து எடுக்கவும்.

v சுவையான எளிதில் தயாரிக்க கூடிய தட்டை ரெடி.

கவனிக்க :
தட்டையினை எளிதில் தட்ட, அதனை இரண்டு பிளாஸ்ட் பேப்பரில் எண்ணெய் தடவி, அதன் நடுவில் மாவினை வைத்து கையினால் அழுத்தினால் தட்டை ரெடி.

16 comments:

நட்புடன் ஜமால் said...

மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது ...


பால் சேர்க்காத ஒரு டீயும் இருந்தால் ஆஹா ...

Shama Nagarajan said...

my fav....snack

யோ வாய்ஸ் said...

எனக்கு சமைக்க தெரியாது உங்க குறிப்பை அப்படியே எங்க அம்மாவிடம் கொடுத்து செய்து சாப்பிடுகிறேன். வாழ்த்துக்கள்

கீதா ஆச்சல் said...

//மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது ...


பால் சேர்க்காத ஒரு டீயும் இருந்தால் ஆஹா ..//ஆமாம் ..எங்க வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒன்று இந்த தட்டை...செய்வது மிகவும் ஈஸி என்பதால் அடிக்கடி இதனை செய்வேன்..

கீதா ஆச்சல் said...

என்னுடையதும் கூட இது fav....snack தான் ஷாமா..

கீதா ஆச்சல் said...

//எனக்கு சமைக்க தெரியாது உங்க குறிப்பை அப்படியே எங்க அம்மாவிடம் கொடுத்து செய்து சாப்பிடுகிறேன்.// மிகவும் சந்தோசம் யோகா...

அதுவும் அம்மா செய்து கொடுக்கின்றாங்க என்றால் கேட்கவே வேண்டும்..அம்மா சமையல் என்றால் எப்பொழுதும் தனி சுவை தாங்க...

Prakash said...

நான் வேற சமைக்க கத்துக்கணும். கண்டிப்பா உங்களுக்கு follower ஆகிடுறேன்.

P.S : Thanks for following me :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க..

இலா said...

Geetha! parcel few to Bos! home phone is down... will call you later...

கீதா ஆச்சல் said...

மிகவும் நன்றி பிரகாஷ்...

கீதா ஆச்சல் said...

நன்றி ராஜ் அண்ணா.

கீதா ஆச்சல் said...

//parcel few to Bos! home phone is down... will call you later...//இலா...வாங்க எங்க வீட்டுக்கு கண்டிப்பாக செய்து கொடுக்கின்றேன்...

Thamarai selvi said...

கீதா டேஸ்ட் சூப்பரா இருந்தது!!விநாகர்க்கு செய்யலாம்னு ஆரம்பிச்சேன்,ஆனால் குழந்தையும் தெய்வமும் ஒன்றுனு சந்தோஷ் சொல்லாமல் சொல்லி சாப்பிட்டு முடிச்சுட்டான்..கொஞ்சம் ஹாடா இருந்தது, மேனுவோடது அன்னைக்கு ஒரு நாள் செய்தேன்,அதும் அப்படிதான்..கடைல வாங்கின மாவுதான் யூஸ் பண்ணினேன், அது போதுமா இல்ல மாவு திரிச்சு செய்யனுமா? இல்ல இன்னும் கொஞ்சம் பட்டர் சேர்த்து செய்யலாமா? ஏதாவது டிப்ஸ் இருந்தால் கொடுங்க,நன்றி கீதா!!

கீதா ஆச்சல் said...

//,ஆனால் குழந்தையும் தெய்வமும் ஒன்றுனு சந்தோஷ் சொல்லாமல் சொல்லி சாப்பிட்டு முடிச்சுட்டான்// கண்டிப்பாக உண்மை...

தட்டை கிரிஸ்பியாக (முருக்கு மாதிரி) தான் இருக்கும் தாமரை...

நீங்கள் அதனை தட்டும் பொழுது மிகவும் மெல்லியதாக தட்டினால் நன்றாக இருக்கும்...

நானும் கடையில் வாங்கின மாவினை தான் உபயோகின்றேன்...

பட்டர் அதிகமாக சேர்க்க தேவையில்லை...கொடுத்த அளவே போதுமானது.

Jaleela said...

தட்டை ரொம்ப சூப்பரா இருக்கு, அழகா ஒரே சைசில், .

நானும் போடுகீறேன் அதையும் ருசி பாருங்கள்.

Geetha Achal said...

நன்றி ஜலிலா அக்கா. கண்டிப்பாக உங்கள் செய்முறையினை போடுங்கள். அதையும் ருசி பார்த்துவிடுகிறேன். மிகவும் நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...