அவரைக்காய் கொள்ளு உசிலி (Avaraikai Kollu Usili)

அவரைக்காயில் அதிக அளவு நார்சத்தும், சூடினை தணிக்கும் சக்தியும் உள்ளது. அவரைக்காயினை BP , டயபெட்டிக் உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது.
இந்த அவரைக்காய் கொள்ளு உசிலி மிகவும் சுவையாக இருக்கும்.


கொள்ளுவினை ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 – 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· அவரைக்காய் – 1/4 கிலோ
· கொள்ளு – 1 கப்
· காய்ந்தமிளகாய் - 2
· உப்பு – 1/2 தே.கரண்டி (அவரைக்காய்க்கு)
·எண்ணெய் – 1 தே.கரண்டி (அவரைக்காய்க்கு)
முதலில் கொள்ளுடன் சேர்த்து தனியாக சமைக்க:
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டு
· வெங்காயம் – 1
· பச்சைமிளகாய் – 4
· கருவேப்பில்லை – 4 இலை
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கொள்ளினை குறைந்தது 3 – 4 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். நன்றாக ஊறியபிறகு அதனை கழுவி, கொள்ளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

v அவரைக்காயினை பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் + பச்சைமிளகாய் சேர்த்து பொடியாக வெட்டி கொள்ளவும்.
v கடாய் 1 : ஒரு நாண்ஸ்டிக் பனில், எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
v இதனுடன் அரைத்து வைத்துள்ள கொள்ளு + தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.

v 10 நிமிடங்களில் கொள்ளு நன்றாக வெந்து உதிர்ந்து இருக்கும்.
v கடாய் 2 : இன்னொரு கடாயில், பொடியாக அரிந்து வைத்துள்ள அவரைக்காய் + உப்பு + 1 தே.கரண்டி எண்ணெய் சேர்த்து, சிறிய தீயில் வைத்து நன்றாக வேகவிடவும்.( அவரைக்காயினை வதக்கவும் பொழுது தண்ணீர் சேர்த்து வேகவைக்க கூடாது).

v கடாய் 1 : கொள்ளு நன்றாக வெந்து பின், வேகவைத்த அவரைக்காயினை கொள்ளுடன் சேர்த்து மேலும் 3 – 4 நிமிடங்கள் வதக்கவும்.

v சுவையான சத்தான அவரைக்காய் கொள்ளு உசிலி ரெடி.

குறிப்பு :
அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், காரமணி, வாழைப்பூ போன்ற காய்களிலும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.
கொள்ளு புட்டு மீதம் இருந்தாலும், அத்துடன் காய்கள் சேர்த்து இப்படி செய்யலாம். கொள்ளு புட்டு குறிப்பினை காண இங்கே க்ளிக் செய்யவும்.

35 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

செய்வித்து சாப்பிடுறேன்..

Nithya said...

Usili paakave arumaya iruku.. kalakareenga. :)

Mrs.Menagasathia said...

சூப்பரா இருக்கு கீதா.நானும் இதுப்போல் பீன்ஸில் செய்துள்ளேன்,போஸ்டிங் போடதான் நேரமில்லை.நன்றாகயிருக்கும் இந்த உசிலி.காராமணியில் செய்ததில்லை.இனி செய்து பார்க்கிறேன்.

Priya said...

Arumaiyana kuripu Geetha, parukku usiliku pathi kollu nalla arumaiyana idea.Seithu paarka vendiya oru poriyal..

En Samaiyal said...

Diff combo Geetha..Naan beans parupu usili panni erukayen....Aanaa ethu vithyaasama eruku...

sarusriraj said...

கீதா சில நாட்களுக்கு பிறகு , ஒரு சத்தான ரெசிபி செய்து பார்க்கிறேன்

Priya said...

Adutha murai grocery vangum pothu,kandippa kollu vanganummu impress pannittinga..kalakkunga

Porkodi (பொற்கொடி) said...

naan indha padhivai padikave illai! yenna enakum avaraikkum parambarai pagai!! :O

RAKS KITCHEN said...

எப்போவுமே நீங்க ஏதாவது புதுசா செய்யறீங்க!! நல்ல ரெசிபி :)

Balakrishna Saraswathy said...

Lip smacking avarikai poriyal..very selective collection of recipes.

Pavithra said...

wow kollu usili nice idea instead of toordhal will sure try it out and healthy too.. sure will let u know.

S.A. நவாஸுதீன் said...

நன்றி சகோதரி தெளிவான செய்முறை விளக்கத்திற்கு

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல டையட் ரெசிபி போல!!!

சிங்கக்குட்டி said...

எப்படி கீதா எப்படி? தங்கமணி உங்க பதிவ பாத்து பாத்து தினம் எதாவது ரெடி பண்ணுது. அருமை கீதா :-))

சிங்கக்குட்டி said...

கீதா இந்த பதிவிற்கு பின்னூட்டம் போட்ட நியாபகம் உள்ளது? இல்லை என்றால், இதோ...
உங்கள் புண்ணியத்தில், தங்கமணியிடம் இருந்து தினம் புதிதாக ஏதாவது கிடைக்கிறது, நன்றி :-))

நட்புடன் ஜமால் said...

சமையல் குறிப்பும் போட்டு அவை உடல் நலத்திற்கும் ஏதுவாக இருக்கு அனைத்துமே

மிக்க நன்றி.

ஹர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு கீதா... அவரைக்காய் எங்க கிடைச்சது உங்களுக்கு?..... அம்மா வந்ததும் அக்‌ஷாதாவுக்கு ஜாலியா!!!

Geetha Achal said...

கண்டிப்பாக அம்மாகிட்ட சொல்ல செய்து சாப்பிடுங்கள் யோகா. நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா.

Geetha Achal said...

அப்படியா மேனகா..ஆமாம் பீன்ஸ்,காராமணியிலும் மிகவும் சுவையாக இருக்கும் .நன்றி.

Geetha Achal said...

கண்டிப்பாக செய்து பாருங்கள் ப்ரியா.நன்றி.

Geetha Achal said...

//Diff combo Geetha..Naan beans parupu usili panni erukayen....Aanaa ethu vithyaasama eruku..//தங்கள் கருத்துக்கு நன்றி பரியா.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா...இப்போ அம்மா வந்து இருப்பதால் கொஞ்சம் பிஸி அவ்வளவு தான்...

Geetha Achal said...

//Adutha murai grocery vangum pothu,kandippa kollu vanganummu impress pannittinga..kalakkunga//மிகவும் சந்தோசம் பரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்.

Geetha Achal said...

//naan indha padhivai padikave illai! yenna enakum avaraikkum parambarai pagai!! :O//ஒ..அப்படியா...தங்கள் பின்னுடத்திற்கு நன்றி

Geetha Achal said...

//எப்போவுமே நீங்க ஏதாவது புதுசா செய்யறீங்க!! நல்ல ரெசிபி :)//தங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி.

Geetha Achal said...

//ip smacking avarikai poriyal..very selective collection of recipes.//தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சரஸ்வதி.

கண்டிப்பாக அடிக்கடி இந்த பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன்

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்.

Geetha Achal said...

//எப்படி கீதா எப்படி? தங்கமணி உங்க பதிவ பாத்து பாத்து தினம் எதாவது ரெடி பண்ணுது. அருமை கீதா :-))//

மிகவும் சந்தோசமாக இருக்கு சிங்ககுட்டி.

நன்றி உங்களுக்கும் , உங்கள் தங்கமணிக்கு.

Geetha Achal said...

//சமையல் குறிப்பும் போட்டு அவை உடல் நலத்திற்கும் ஏதுவாக இருக்கு அனைத்துமே
//

தங்கள் கருத்துக்கு , ஊக்கமிப்பதற்கும் மிகவும் நன்றி ஜமால்.

Geetha Achal said...

//நல்லா இருக்கு கீதா... அவரைக்காய் எங்க கிடைச்சது உங்களுக்கு?..... அம்மா வந்ததும் அக்‌ஷாதாவுக்கு ஜாலியா!!//

நன்றி ஹர்ஷினி அம்மா...

அவரைக்காயினை இங்கு உள்ள இந்தியன் கடையில் வாங்கினேன்..

அம்மா வந்ததில் இருந்து கொஞ்சம் பிஸி..அதனால் ப்ளாக் பக்கம் அவ்வளவாக வரமுடியவில்லை என்றால் அடிக்கடி எட்டி பார்பது தான். நன்றி .

Valarmathi said...

Supera irukku, nice combo, looks yummy.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி வளர்மதி.

Related Posts Plugin for WordPress, Blogger...