கொள்ளு புட்டு (Kollu / Horsegram Puttu)கொள்ளு உடலிற்கு மிகவும் நல்லது…இதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிடுவது நல்லது… எப்பொழுதும் கொள்ளினை வைத்து சாலட், குழம்பு, ரசம், துவையல் என்று செய்யாமல், ஒரு முறை இந்த புட்டினை செய்து பாருங்கள்…இந்த புட்டு மிகவும் சுவையாக இருக்கும்...
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்த்து 4 – 5 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கொள்ளு – 2 கப்
· காய்ந்த மிளகாய் – 3
· கடுகு – தாளிக்க
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
பொடியாக நறுக்கி கொள்ள :
· பூண்டு – 6 பல்
· வெங்காயம் – 1
· கொத்தமல்லி – சிறிதளவு
· இஞ்சி – சிறிய துண்டு
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
v கொள்ளினை குறைந்த்து 4 – 5 மணி நேரம் ஊறவைக்கவும். கொள்ளினை நன்றாக கழுவி, தண்ணீர் வடித்து கொள்ளவும்.
v கொள்ளு + காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
v பொடியாக நறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெட்டி வைக்கவும்.
v ஒரு நாண்-ஸ்டிக் பனில், 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டினை போட்டு வதக்கவும்.
v அதன் பின்னர், வெங்காயம் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

v பிறகு, அரைத்த விழுது + தூள் வகைகள் + மீதம் உள்ள எண்ணெயினை இத்துடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

v 2 – 3 நிமிடங்களுக்கு ஒரு முறை அடிக்கடி கிளறிவிடவும். இப்படியே, கொள்ளு, தனிதனியாக புட்டு மாதிரி உதிரும் வரை செய்யுவும். (இதற்கு குறைந்து 15 – 20 நிமிடங்கள் ஆகும்.)

v கடைசியில் கொத்தமல்லி + இஞ்சி சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

சுவையான சத்தான கொள்ளு புட்டி ரெடி. இதனை சாதம், சாம்பார், குழம்பு, ரசம், தயிர், தோசை, சப்பாத்தி என்று எதனுடம் சாப்பிட்டாலும் சுவை சூப்பராக இருக்கும்.

கவனிக்க :
கொள்ளினை சேர்த்து முதலில் கிளறும் பொழுது, கட்டி கட்டியாக தான் இருக்கும்.
கொள்ளு நன்றாக வெந்த பிறகு, கட்டியில்லாமல், பொடி பொடியாக உடைந்துவிடும்.
இந்த புட்டினை செய்ய, நாண்-ஸ்டிக் பாத்திரம் உபயோகபடுத்தினால், எண்ணெய் அதிகம் சேர்க்க தேவையில்லை.

24 comments:

RAKS KITCHEN said...

The way you have presented the recipe is very easy to understand,the ingredients are nice and the puttu looks very nice :)

யோ வாய்ஸ் said...

எப்படி இவ்வளவு உணவு முறைகளை தெரிந்து வைத்துள்ளீர்கள். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது...

Priya said...

Woww Geetha, such a wonderful dish, ungaluku mattum yeppadi ippadi ellam thonuthu...Arumainga..

S.A. நவாஸுதீன் said...

தெளிவான செயல்முறை விளக்கம். வாழ்த்துக்கள்

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ராஜேஸ்வரி...

இதே போல, துவரம் பருப்பு, கடலைபருப்பில் செய்யலாம்...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Geetha Achal said...

//எப்படி இவ்வளவு உணவு முறைகளை தெரிந்து வைத்துள்ளீர்கள். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது..//

மிகவும் நன்றி யோகா...எனக்கு சமைப்பதில் கொஞ்சம் ஆர்வம்...அதாங்க காரணம்...நன்றி

Mrs.Menagasathia said...

ரொம்ப அருமையா இருக்கு கொள்ளுப் புட்டு.

Geetha Achal said...

//Woww Geetha, such a wonderful dish, ungaluku mattum yeppadi ippadi ellam thonuthu...Arumainga..//
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன்..நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்..

sarusriraj said...

கீதா என்ன இது , கொள்ளூ ரசம், சுண்டல் தான் பண்ணுவேன் அதுவும் சில வருடங்களூக்கு முன் , கொள்ளு புட்டு கேள்வி படாத ஒன்று செய்து பார்கிறேன். எனக்கு கூட பொறாமையா இருக்கு , இந்த மாச மளிகை லிஸ்டல , பார்லி , கொள்ளு, ஒட்ஸ், கோதுமைரவை , பயிறு வகைகள் எல்லாம் இடம் பெற்றிருக்கு . மிகவும் நன்றி . உங்கள் ராகி + கீரை உருண்டை செய்து பார்தேன் , சூப்பர்...

En Samaiyal said...

Kollu puttu sounds different pa......

இலா said...

Nice one Geetha...

நட்புடன் ஜமால் said...

எலுமிச்சை பழத்தை அருகே பார்த்தவுடனேயே விளங்கிற்று இது நிச்சியம் நல்லாயிருக்கும் என்று

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க... கொள்ளு திண்ண குதிரையும் இளைக்கும் என்பது பழமொழி!!!

Geetha Achal said...

/// இந்த மாச மளிகை லிஸ்டல , பார்லி , கொள்ளு, ஒட்ஸ், கோதுமைரவை , பயிறு வகைகள் எல்லாம் இடம் பெற்றிருக்கு // மிகவும் நன்றி சாரு அக்கா...

கேட்கவே மிகவும் சந்தோசமாக இருக்கின்றது..

ராகி கீரை உருண்டை செய்து சாப்பிட்டிங்களா..குழந்தைகள் விரும்பி சாப்பிட்டாங்களா...

நன்றி சாரு அக்கா

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா.

Geetha Achal said...

நன்றி இலா.

Geetha Achal said...

நன்றி ஜமால்..

Geetha Achal said...

//கொள்ளு திண்ண குதிரையும் இளைக்கும் என்பது பழமொழி// ஆமாம் ராஜ் அண்ணா...உண்மை தான்...போல...

நன்றி...வீட்டில் சொல்லி சமைக்க சொல்லுங்க...சென்னையில தான் கொள்ளு கிடைக்குமே..

Shobana senthilkumar said...

Hi geetha,
i bought lot of kollu from india..as my in-law told it reduces cholestral but sdidnt knot now i can do puttu...thanks geetha:)

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஷோபனா...ஆமாம், இது உடலிற்கு மிகவும் நல்லது...

கண்டிப்பாக செய்து பாருங்கள்...மிகவும் சுவையாக இருக்கும்..

Mrs.Menagasathia said...

இன்னிக்கு இந்த புட்டினை செய்தேன் கீதா.அருமையாக இருந்தது.மிளகாய்த்தூள்க்கு பதில் மிளகு+சோம்புத்தூள்+எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்.மகளும் விரும்பி சாப்பிட்டாங்க.நன்றி உங்களுக்கு.

Geetha Achal said...

//அருமையாக இருந்தது.மிளகாய்த்தூள்க்கு பதில் மிளகு+சோம்புத்தூள்+எலுமிச்சை சாறு சேர்த்து செய்தேன்.மகளும் விரும்பி சாப்பிட்டாங்க//

நன்றி மேனகா. சிவானி குட்டியும் சாப்பிட்டாங்களா...மிகவும் மகிழ்ச்சி...

நிச்சயம் மிளகு + சோம்புதூள் சேர்த்து செய்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...