மணத்தக்காளிகாய் இட்லி சாம்பார்(Manathakaali Idly Sambar)


மணத்தக்காளி கீரை மற்றும் காய் சாப்பிடுவது உடலிற்கு மிகவும் நல்லது. வாய் புண், வயிற்று புண் இருக்கும் சமயத்தில் இந்த கீரையினை தொடர்ந்து சாப்பிட நல்ல பயனை தரும். உடல் சூடினை தடுக்கவல்லது இந்த கீரை.

மணத்தக்காளியில் அதிக அளவு விட்டமின்ஸ் (A, B Complex) இருக்கின்றது.

இந்த கீரையில், காய்கள் இருக்கும். காய்கள் பச்சைநிறத்திலும் பழுத்தவுடன் கருநீல நிறத்திற்கு மாறிவிடும். கீரையில் பச்சை + கருநீலநிற காய்கள் பார்க்க அழகாக இருக்கும்.காய்களை பார்பதற்கும் தக்காளி போல சிறிதாக சின்ன அளவு மணி மாதிரி இருக்கும். அதனால் இதற்கு மணித்தக்காளி என்ற பெயர்..அதுவே காலபோக்கில் மாறி மணத்தக்காளி ஆகிவிட்டது.

இங்கு யூஸியில் இந்த காய் freshஆக கடைகளில் கிடைக்காது என்று நினைக்கின்றேன்…இந்த செடியினை, இங்கு எங்கள் வீட்டு தோட்டத்தில் இந்த வருடம், நான் வளர்த்த மணத்தக்காளி செடியில் இருந்து எடுத்த காய்களை வைத்து இதனை சமைத்தேன்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· மணத்தக்காளி காய் – 1 கப்

· வெங்காயம் – 1

· தக்காளி – 2

· துவரம் பருப்பு – 1/2 கப்

· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி

· பச்சை மிளகாய் - 3

· உப்பு – தேவையான அளவு

கடைசியில் தாளித்து சேர்க்க :

· எண்ணெய் – 1 தே.கரண்டி

· கடுகு – 1/4 தே.கரண்டி

· சீரகம் – 1/2 தே.கரண்டி

· வெந்தயம் – 1/4 தே.கரண்டி

· கருவேப்பில்லை – 5 இலை

· காய்ந்த மிளகாய் – 2

· பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

v வெங்காயம் + தக்காளி + பச்சை மிளகாயினை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மணத்தக்காளியினை கழுவி கொள்ளவும்.

v பிரஸர் குக்கரில், வெங்காயம் + தக்காளி + பச்சைமிளகாய் + மணத்தக்காளி காய் + துவரம் பருப்பு + மஞ்சள் தூள் + 3 கப் தண்ணீர் சேர்த்து 4 – 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

v குக்கரில் பிரஸர் அடங்கியதும், மத்தினை வைத்து கலவையினை லேசாக கடையவும்.

v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

v சுவையான சத்தான மணத்தக்காளி இட்லி சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு :

மணத்தக்காளி காய் freshஆக கிடைக்கவில்லை எனில், மணத்தக்காளி வற்றல் கண்டிப்பாக அனைத்து ஊரிலும் கிடைக்கும் என நினைக்கின்றேன். அப்பொழுது இந்த சாம்பார் செய்யும் பொழுது கடைசியில் மணத்தக்காளியினையும் தாளித்து சேர்த்து கொள்ளலாம்.

அல்லது மணத்தக்காளியினை தனியாக வறுத்து பொடித்தும் கடைசியில் சாம்பாரில் சேர்க்கலாம். ருசியாக இருக்கும்.

இதே போல சுண்டைக்காய், கத்திரிக்காயிலும் சாம்பார் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

32 comments:

Pavithra said...

Wow is that pot from ur garden ? sambar miga arumaiyagha irukirathu !!!!

Nithya said...

Super. odambukku romaba nalladhu.. :)

sarusriraj said...

மணத்தக்காளி சாம்பார் கேள்வி படாத ஒன்று . சுப்பர் கீதா இதை தவிற வேறு என்ன சொல்ல , கட்டாயம் செய்து பார்கிறேன்.

அதிரை அபூபக்கர் said...

மணத்தக்காளியின் பயன்களும்,, அதில் எப்படி சாம்பார் வைப்பதையும் தெளிவாக சொல்லியுள்ளீர்கள்..
இது வரை. நான் தெரியாத விசயம்..
நன்றி.

RAKS KITCHEN said...

Never tasted this before,mom makes poricha kuzhambu with this :) Very healthy one!!

யோ வாய்ஸ் (யோகா) said...

:)

அன்புடன் மலிக்கா said...

மணதக்காளி சாம்பார் சூப்பர்பா,

தாங்களை தொடர் கருத்துக்களுக்கு அன்போடு அழைக்கிறேன்,
http://niroodai.blogspot.com

பிரவின்குமார் said...

தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.....
அனைத்து சமையல் குறிப்பு பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
மேலும் உங்கள் பதிவுகளில் Add Tamil பட்டன் சேர்த்து தமிழ்மணம், தமிலிஷ், தமிழ்10, உலவு.காம் etc., பல திரட்டிகளில் கீழ்உள்ள இணைப்பை பயன்படுத்தி உங்கள் வலைப்பக்கத்தில் சேர்த்திடுங்கள்.
http://www.findindia.net/பலருக்கும் இது பயன்படட்டும்.
நன்றி வணக்கம்.

பிரவின்குமார் said...

எனது வலைப்பக்கத்தை மேம்படுத்த தங்களது மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.
http://dpraveen03.blogspot.com/

S.A. நவாஸுதீன் said...

உண்மையில் சமையல் மகாராணிதான் நீங்க.

Priya said...

Manathakkali kaai pottu idly sambar, wow Geetha arumai!! yennaku intha kaai kedaikurathu romba romba kastam..

Mrs.Menagasathia said...

மணத்தக்காளி காயில் இட்லிசாம்பார் புதுசாயிருக்கு எனக்கு.நல்லாயிருக்கு கீதா ஆனா என்ன செய்ய எனக்கு இங்கு காய்,கீரை கிடைக்காதே.

ஷ‌ஃபிக்ஸ் said...

மணத்தக்காளி, இதன் குணங்கள் கேள்விப் பட்டிருக்கின்றேன், முதன் முதலா இதை இப்படியும் செய்யலாம்னு சொல்லி இருக்கீங்க, நீங்கள் இருக்கும் பகுதியில் கிடைக்கிறதா? போட்டோவை பார்த்தால் வீட்டிலேயே வள்ர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

En Samaiyal said...

Wow manathakali u r having at ur home aaa...very nice geetha...shows u r interested in Gardening tooo right...Healthy sambar looks yum ...

En Samaiyal said...

Pls collect ur awards from my blog dear...

Geetha Achal said...

//Wow is that pot from ur garden ?//ஆமாம் பவித்ரா...இது எங்கள் வீட்டு தோட்டத்தில் நான் வளர்பது..

தங்கள் கருத்துக்கு நன்றி பவி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நித்யா

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி அதிரை அபூபக்கர்.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ராஜேஸ்வரி...கண்டிப்பாக செய்து பாருங்கள்..அருமையாக இருக்கும்.

Geetha Achal said...

நன்றி யோகா

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா அக்கா.

நன்றி.

Geetha Achal said...

//உண்மையில் சமையல் மகாராணிதான் நீங்க//தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸுதீன்.

மகாராணி எல்லாம் இல்லை...எதோ சமையலில் கொஞ்சம் ஆர்வர் அவ்வளவு தான்.

Geetha Achal said...

//Manathakkali kaai pottu idly sambar, wow Geetha arumai!! yennaku intha kaai kedaikurathu romba romba kastam..//நன்றி பரியா.

எனக்கும் இந்த காய் இங்கு கிடைக்காது..மணத்தக்காளி செடியினை இங்கு ஒரு தொட்டியில் வைத்து இருக்கின்றேன். அதில் இருந்து எடுத்த காய் தான் இது..

Geetha Achal said...

நன்றி மேனகா...மணத்தக்காளி வற்றல் கிடைத்தால் வேண்டுமானால், செய்து பாருங்கள்..

Geetha Achal said...

//முதன் முதலா இதை இப்படியும் செய்யலாம்னு சொல்லி இருக்கீங்க, நீங்கள் இருக்கும் பகுதியில் கிடைக்கிறதா? போட்டோவை பார்த்தால் வீட்டிலேயே வள்ர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்//

நன்றி ஷஃபிக்ஸ். ஆமாம், நான் வீட்டிலேயே இதனை தொட்டியில் வைத்து வளர்க்கின்றேன். நன்றி

Geetha Achal said...

//manathakali u r having at ur home aaa...very nice geetha...shows u r interested in Gardening tooo right//

ஆமாம் ப்ரியா...Gardeningலயும் கொஞ்சம் ஆர்வம்...எதுலையும் முழுசாக கிடையாது...எதோ எல்லாதலையிலையும் கொஞ்சம் கொஞ்சம் ஆர்வம்...

தங்கள் விருதுக்கு நன்றி ப்ரியா.

நட்புடன் ஜமால் said...

சிறிய வயதில் நிறைய சாப்பிடதுண்டு

அந்த நினைவுகள் வந்துவிட்டன

நன்றி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றி....

Geetha Achal said...

நன்றி ஜமால்.

//சிறிய வயதில் நிறைய சாப்பிடதுண்டு

அந்த நினைவுகள் வந்துவிட்டன
///உங்களுடைய சிறு வயதினை நியபாகம் செய்துவிட்டேனா...

Geetha Achal said...

நன்றி ராஜ்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மணத்தக்காளி சாம்பார், இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். வீட்டில் செடி இருக்கிறது, இன்றே செய்யப் போகிறேன். நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...