ஸ்பெஷல் ஜாமூன்(Special Jamun)


இன்று எங்களுடைய திருமணநாள்(Sep-5th)..அதனால் ஸ்வீட் உடன் ஒரு குறிப்பு…நன்றி…

எந்த ஒரு விஷேசம் என்றால் அனைவரும் செய்ய நினைப்பது குலாப்ஜாமூன் தான். எப்பொழுதும் ஒரே மாதிரி செய்யாமல், இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· குலாப்ஜாமூன் மிக்ஸ் – 1 சிறிய பக்கட்

· சக்கரை – 2 கப் + 1 தே.கரண்டி

· ஏலக்காய் – 1

· எண்ணெய்/ நெய் – பொரிப்பதற்கு

· கலர் – விரும்பிய நிறத்தில் சிறிதளவு

· பால் – தேவையான அளவு மாவு பிசைவதற்கு

செய்முறை :

v குலாப்ஜாமூன் மிக்ஸில் 3/4 பகுதியினை தனியாக எடுத்து கொள்ளவும். இத்துடன் 1 தே.கரண்டி சக்கரை + தேவையான அளவு பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

v இதனை பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

v கலர் உருண்டைகள் :மீதன் உள்ள 1/4 பகுதியினை தனியாக வைக்கவும். இத்துடன் நீங்கள் விரும்பிய கலர்(பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு எதாவது ஒன்று ) + பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

v இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

v இப்பொழுது பெரிய உருண்டைகளை சிறிது தட்டையாக தட்டவும். சிறிய உருண்டைகளை அதில் வைத்து மூடி விரும்பிய வடிவத்தில் உருட்டி கொள்ளவும்.

v சக்கரை பாகு : ஒரு அகலமான பாத்திரத்தில், சக்கரை + ஏலக்காய் + 2 கப் தண்ணீர் சேர்த்து பாகுகாய்ச்சி வைக்கவும்.

v ஜாமூன்களை பொரிக்க : எண்ணெயினை காயவைத்து, அதில் செய்து வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

v பொரித்து எடுத்துள்ள ஜாமூன்களை திரும்பவும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். (இப்படி செய்வதினால் கருப்பு நிறமாகிவிடும். அப்பொழுது தான் சக்கரை பாகில் ஊற்றும் பொழுது , உள்ளே இருக்கும் கலர் நன்றாக தெரியும்.ஜாமூனும் சுவையாக இருக்கும்.)

v பொரித்த ஜாமூன்களை சக்கரைபாகில் சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும். சுவையான ஜாமூன் ரெடி.

குறிப்பு :

எண்ணெயில் ஜாமூன்களை பொரிப்பதாக இருந்தால், சக்கரை பாகில் 1 தே.கரண்டி நெய் சேர்த்து எண்ணெயில் பொரித்த ஜாமூன்களை ஊறவைத்தால், நெயில் பொரித்த மாதிரி சுவையாக இருக்கும்.

43 comments:

ஹர்ஷினி அம்மா said...

கீதா இனிய திருமணநாள் வாழ்த்துகள்.... உங்கள் வாழ்வில் என்றும் இனிப்பும், மகிழ்ச்சியும் நிறைய வாழ்த்துகள்.

எங்க வீட்லையும் இன்னைக்கு இதே ஜாமுன் தான் ஆனா கலர் தான் பச்சை :-)

Pavithra said...

Geetha " Thirumana Naal Nal Vazhulthukkal " Wish u have wonderful and sweet day!!! Enjoy !! Thanks for ur sweet virtual treat for us.

Nithya said...

Yen iniya thirumana naal vaalthukal :)

Jamoon migavum super ah irukku.. Idea romba pudhusa irukku.. kandippa senju paarkaren :)

sarusriraj said...

கீதா இனிய திருமணநாள் வாழ்துக்கள்.. குலோப் ஜாமுன் ரொம்ப நல்லா இருக்கு , நான் ஒன்னு எடுத்துகிட்டேன்.

சிங்கக்குட்டி said...

இனிப்புக்கு நன்றி மற்றும் திருமணநாள் வாழ்த்துகள் கீதா :-)

ஸ்வர்ணரேக்கா said...

திருமணநாள் வாழ்த்துகள் கீதா...

நல்லா சமைக்கவும் செய்யறிங்க, அதை அழகா போட்டோவும் பிடிச்சிருக்கீங்க.. பார்த்தாலே அப்படியே எடுத்துக்கணும் போல இருக்கு...

Priya said...

Iniya thirumananaal vaazhuthukal Geetha, wising u more health, wealth and happiness on this special day..

Jamun looks marvellous, i do add green colour else everything is same...

டவுசர் பாண்டி said...

உங்கள் திருமண நாளுக்கு " வாழ்த்துக்கள் " , தாங்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்தும் . - சகோதரன் , "டவுசர் பாண்டி "

உங்கள் பதிவிற்காக நீங்கள் , எடுத்துக்கொள்ளும் சிரமங்கள் எனக்கு ஆச்சரிய மூட்டுகின்றது , ஒவொரு பதிவிற்கும் , குறிப்புகள் மட்டும் இல்லாது நீங்கள் அதை செய்து காட்டி போட்டோ எடுத்து போடுகிறீர்களே !! அதற்கே உங்களை பாராட்டலாம் , வாழ்த்துக்கள் !!

kavi.s said...

கீதா திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.ஜாமூன் பார்க்கவே சூப்ப‌ரா இருக்கு,இன்னைக்கு கண்டிப்பா எதாவது ஸ்வீட் போடுவீங்கனு தெரியும், ஆனா இந்த மாதிரி ஸ்வீட் எதிர்ப்பார்க்கலை!!! ஓட்ஸ் இல்லைனா பார்லி இப்படி எதுலையாவ‌து ஸ்வீட் செஞ்சு போடிவீங்கலோனுனு வந்து பார்த்தேன்:)

kavi.s said...

ஹர்ஷின் அம்மா இதே ஜாமூன் எப்படி உங்க வீட்டுக்கு வந்தவுடனே பச்சை கலர்ல ஆயிடுச்சு!!!!:)

இலா said...

Happy Anniversary Geetha!!!

En Samaiyal said...

Geetha Thirumana nal Vaazhthukal pa....May God give u guys a Healthy & Happy life ever after ...Ur double layer gulabujamun romba nalla eruku ...next i will surely try it.......Enjoy ur special weekend.....

SANKAR PUNITHAM (MENAGA SISTER) said...

கீதா இனிய திருமணநாள் வாழ்த்துகள்.... உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி நிறைய வாழ்த்துகள்
HAPPY WEDDDING ANNIVERSARY GEETHA.

manjula said...

Happy Anniversary Geetha have a nice day

ஹர்ஷினி அம்மா said...

கவி.s கீதா எனக்கு பார்சல் அனுப்புனாங்கபா... அது இங்கே வரதுக்குள்ளே கலர் மாறிடுச்சு... உங்களுக்கு பார்சல் வரலைய்யா இன்னும்!!!!
:-)

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஹர்ஷினி அம்மா..நன்றிகள்.

நீங்கள் உங்கள் வீட்டில் இந்த ஜாமூனை செய்திங்களா...சூப்பர்....இங்க அக்ஷ்தா குட்டிக்கு இப்படி கலராக உள்ளே இருப்பதால் மிகவும் பிடிக்கும். நன்றி

Geetha Achal said...

// " Thirumana Naal Nal Vazhulthukkal " Wish u have wonderful and sweet day!!! Enjoy !! Thanks for ur sweet virtual treat for us.//

தங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி பவித்ரா.

Geetha Achal said...

தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி நித்யா.

//Jamoon migavum super ah irukku.. Idea romba pudhusa irukku.. kandippa senju paarkaren :)//கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றி

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சாரு அக்கா..

//குலோப் ஜாமுன் ரொம்ப நல்லா இருக்கு , நான் ஒன்னு எடுத்துகிட்டேன்// மிகவும் சந்தோசம் அக்கா.

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சிங்ககுட்டி...

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஸ்வர்ணா..

//நல்லா சமைக்கவும் செய்யறிங்க, அதை அழகா போட்டோவும் பிடிச்சிருக்கீங்க.. பார்த்தாலே அப்படியே எடுத்துக்கணும் போல இருக்கு//மிகவும் நன்றி...

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ப்ரியா..

நானும் ஒவ்வொரு முறை ஒரு கலர் சேர்த்து செய்வேன்...ஆனால் நீங்கள் சொல்வது போல பச்சை கலர் தான் இதற்கு எடுப்பாக இருக்கும்...நன்றி

Geetha Achal said...

டவுசர் பாண்டி அண்ணா, தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி அண்ணா..

//உங்கள் பதிவிற்காக நீங்கள் , எடுத்துக்கொள்ளும் சிரமங்கள் எனக்கு ஆச்சரிய மூட்டுகின்றது , ஒவொரு பதிவிற்கும் , குறிப்புகள் மட்டும் இல்லாது நீங்கள் அதை செய்து காட்டி போட்டோ எடுத்து போடுகிறீர்களே !! அதற்கே உங்களை பாராட்டலாம் , வாழ்த்துக்கள் !// உங்களை போன்றவர்களின் ஊக்கம் தான் என்னை மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்றது. நன்றிகள் பல.

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி கவி.

//ஜாமூன் பார்க்கவே சூப்ப‌ரா இருக்கு,இன்னைக்கு கண்டிப்பா எதாவது ஸ்வீட் போடுவீங்கனு தெரியும், ஆனா இந்த மாதிரி ஸ்வீட் எதிர்ப்பார்க்கலை!!! ஓட்ஸ் இல்லைனா பார்லி இப்படி எதுலையாவ‌து ஸ்வீட் செஞ்சு போடிவீங்கலோனுனு வந்து பார்த்தேன்:// ஒ..அப்படியா கவி...இதனை என்னுடைய கணவரிடம் சொன்னேன்...அவரும் சிரிச்சாரு...

ஆமாம் கவி, இந்த ஸ்விடினை நேற்றே செய்துவிட்டேன்..அக்ஷ்தா குட்டிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இதனை செய்தேன்..

இன்று காலையில், திருமணநாளைக்கு காலை டிபன் ஸ்பெஷல் --- பாசிபருப்பு பாயசம், பச்சைபயிறு தோசை, பார்லி பொங்கல், சாம்பார் செய்து சாப்பிட்டோம்..

இனிமேல் தான் வெளியில் கிளம்பபோகின்றோம். நன்றி

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி இலா.

Thamarai selvi said...

கீதா இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்,லாங் வீக்கெண்ட் வேற அசத்துங்க..உங்க சுவீட்டும் நல்லா வித்தியாசமா இருக்கு..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிகவும் நன்றி ப்ரியா..

Geetha Achal said...

புனிதா அக்கா,
தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா..

இது ஒரு இன்ப அதிர்ச்சி...நான் நினைக்கவே இல்லை நீங்கள் எனக்கு மெயில் அனுப்புவிங்கள் என்று...நன்றி அக்கா.

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சுளா.

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி தாமரை...ஆமாம் பா, லாங்வீக்கென்டு என்பதால் இன்னும் சந்தோசமாக இருக்கு...

Geetha Achal said...

எனக்கு இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள்...

உங்கள் அனைவருடைய அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி. நன்றிகள் பல....

Mrs.Menagasathia said...

திருமணநாள் வாழ்த்துக்கள் கீதா+ஸ்வீட்டும் சூப்பர்!!

Porkodi (பொற்கொடி) said...

Happy wedding anniversary Geetha!! :)

Shama Nagarajan said...

happy anniversary dear.....lovely jamun

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி பொற்கொடி.

Geetha Achal said...

தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஷாமா.

Anonymous said...

super

Anonymous said...

கீதா சமையல்-ல பின்னுரீங்கப்ப..!! உங்க ரெசிபி எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு...உங்க ரெசிபி-ய பார்த்து நாங்களும் சமைத்து பார்த்தோம் எல்லாமே ரொம்ப சுவையோ சுவை..!!! ரொம்ப நன்றி..!!!

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அனானி...தங்கள் பெயர் தெரிவித்து இருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நன்றி.

jaya said...

just read this recipe ...wonderful idea...will def. try this today

shiyam said...

கீதா நான் உங்கள் மெல்டிங் மைசூர் பாக் தீபாவளிக்கு செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது உங்கள் சமையல் குறிப்புக்கு நன்றி என் கணவர் என்னை பாராட்டினார் அது உங்களையே வந்தடையும் , என்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள் கீதா .

GEETHA ACHAL said...

தங்களுடைய அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஷ்யாம்...

Related Posts Plugin for WordPress, Blogger...