பார்லி தயிர் சாதம்(Barley Curd Rice)

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· வேகவைத்த பார்லி – 2 கப்
· தயிர் – 1/2 கப்
· கொத்தமல்லிசிறிதளவு
· உப்புதேவையான அளவு
· திரட்சை, மாதுளை பழம் – சிறிதளவு(விரும்பினால்)
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/4 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· பச்சைமிளகாய் – 2
· இஞ்சி – சிறிய துண்டு
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
v கருவேப்பில்லை + பச்சைமிளகாய் + இஞ்சி + கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
v தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொள்ளவும்.
v ஒரு பாத்திரத்தில், வேகவைத்த பார்லி + தயிர் + தாளித்த பொருட்கள் + உப்பு + கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும்.
v பரிமாறும் பொழுது, மாதுளை+ திரட்சை பழங்கள் சேர்த்து கொடுக்கவும். சுவையான எளிதில் செய்ய கூடிய பார்லி தயிர் சாதம் ரெடி.

குறிப்பு :
தாளிக்கும் பொழுது, 2 மோர் மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்தினை கலந்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
இதே போல, ஒட்ஸிலும் செய்யலாம்.

15 comments:

S.A. நவாஸுதீன் said...

100 ஃபாலோயர்ஸுக்கு வாழ்த்துக்கள் சகோதரி. பார்லி தயிர் சாதம், ஹ்ம்ம் வித்தியாசமாத்தான் இருக்கு

சிங்கக்குட்டி said...

புதிதாக கேள்வி படுகிறேன் கீதா, ஒரு முறை செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

ஆனால் உங்கள் பதிவும் படமும் அருமை, வாழ்த்துக்கள்.

Ammu Madhu said...

அக்கா ரொம்ப ரொம்ப நல்ல பதிவு..

sarusriraj said...

கீதா எல்லோரும் நன்றாக இருக்கிறோம் , தயிர் சாதம் நல்லா இருக்கு

Mrs.Menagasathia said...

தயிர் சாதம் என்றாலே அருமையாக இருக்கும்.அதுவும் பார்லியில் என்றால் சொல்லவே தேவையில்லை நன்றாக இருக்கும் என்று.மாதுளை,திராட்சை போட்டு சாப்பிடுவது இன்னும் சுவையாக இருக்கும்..

நட்புடன் ஜமால் said...

மாதுளை காம்பினேஷன் அருமைங்கோ ...

Valarmathi said...

Healthy one Geetha.

Priya said...

i luv kozhukattai..barley el kalakunga

Geetha Achal said...

தங்களுடைய வாழ்த்துகக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நவாஸுதீன்.

Geetha Achal said...

தங்களுடைய கருத்துக்கும் மிகவும் நன்றி சிங்ககுட்டி.

Geetha Achal said...

நன்றி அம்மு.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா.

Geetha Achal said...

நன்றி மேனகா.

Geetha Achal said...

நன்றி ஜமால்.

Geetha Achal said...

நன்றி வளர்மதி.

நன்றி ப்ரியா.

Related Posts Plugin for WordPress, Blogger...