பார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை(Barley Oats Pal Kozhukattai)


பால் கொழுக்கட்டையினை அரிசி மாவில் செய்வாங்க…ஒரு ஹெல்தியான உணவாக இதனை பார்லி + ஒட்ஸ் கலந்து செய்து இருக்கின்றேன்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 – 40 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பால் – 4 கப்
· பார்லி மாவு – 2 தே.கரண்டி
· சக்கரை – 1 கப்
· ஏலக்காய் – 2
· நெய் – 2 மேஜை கரண்டி
கொழுக்கட்டை செய்ய:
· பார்லி மாவு – 1/2 கப்
· ஒட்ஸ் மாவு – 1/2 கப்
· தண்ணீர் – சிறிதளவு
செய்முறை :
v 4 கப் பாலினை 3 கப் பாலாக வரும் வரை நன்றாக கொதிக்கவிடவும்.
v பார்லி மாவு + ஒட்ஸ் மாவு + தண்ணீர் சேர்த்து கெட்டியாக சாப்பத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அதனை படத்தில் காணப்படுவது போல உருட்டி கொள்ளவும்.

v உருட்டி வைத்துள்ள மாவினை இட்லி பானையில் வைத்து ஆவில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.

v 2 தே.கரண்டி பார்லியினை சிறிது பாலில் கரைத்து, கொதித்து கொண்டு இருக்கும் பாலில் சேர்க்கவும்.( இப்படி செய்வதால் பால் மிகவும் திக்காக இருக்கும்.)
v கடைசியில் வேகவைத்த கொழுக்கட்டை + சக்கரை + ஏலக்காய் + நெய் சேர்த்து மேலும் 5 – 6 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.

v சுவையான சத்தான பார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு :
· ஒரிஜினல் பால் கொழுக்கட்டை என்றால் இந்த வடிவில் தான் இருக்கும்…சிலர் கொழுக்கட்டை என்றவுடன் உருண்டையாக இருக்கும் என்று நினைத்து கொள்வார்கள்.
· இதனை உருட்டுவது நிறைய நேரம் எடுக்கும் என்று நினைப்பவர்கள், முருக்கு அச்சில் இதனை போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து கொண்டு உதிர்த்து கொள்ளலாம்.

22 comments:

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு கீதா இத நாங்க அரிசி மாவிலும், மைதாவிலும் செய்வோம்.

இதன் பெயர் சுத்திர்யான், இல்லை ஸ்வீட் தக்குடி

அளவுகள் ஒரே சீராக பார்க்கவே நல்ல இருக்கு.

இந்த பார்லி பொடித்து செய்தீர்களா? இல்லை பார்லி மாவு தனியா விற்கிறதா?

நோன்பு கழித்து நானும் டயட் ஆரம்பிச்சாச்சு,இனி பார்லி, ஓட்ஸ், கொள்ளு தான்.

S.A. நவாஸுதீன் said...

புதுசு புதுசா நிறைய சொல்லிக் கொடுக்குறீங்க. வாழ்த்துக்கள்

Priya said...

Woww Geetha, kalakuringa..nenachikuda pakka mudiyatha combinationla traditional paal kozhukattai senchi irrukinga..keep up ur great work:)

யோ வாய்ஸ் (யோகா) said...

கொழுக்கட்டை என்றாலே 2 விடயம் நினைவுக்கு வருது.

1. நாவை ஈரமாக்கும் இனிப்பு
2. கொழுக்கட்டை என திட்டு வாங்கியது..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா.

//இந்த பார்லி பொடித்து செய்தீர்களா? இல்லை பார்லி மாவு தனியா விற்கிறதா?//இங்கு பார்லி மாவு என்று தனியாக கிடைக்கின்றது.

இல்லையெனில் மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ளலாம்.

அப்படியா நீங்களும், டயட்டினை ஆரம்பித்து விட்டிங்களா...சூப்பர்ப் போங்க...வாழ்த்துகள்.

Geetha Achal said...

மிகவும் நன்றி நவாஸுதீன்.

Geetha Achal said...

//nenachikuda pakka mudiyatha combinationla traditional paal kozhukattai senchi irrukinga..keep up ur great work:)//மிகவும் நன்றி ப்ரியா.

Geetha Achal said...

//நாவை ஈரமாக்கும் இனிப்பு. கொழுக்கட்டை என திட்டு வாங்கியது.//

கண்டிப்பாக இது அனைவருக்கும் பொதுவாக இருக்கும் விஷயம தான் என நினைக்கின்றேன்...

my kitchen said...

ரொம்ப நல்ல இருக்கு கீதா,Different & healthy version.

Mrs.Menagasathia said...

healthy&super kozhukattai geetha!!

Divya Vikram said...

Romba nalla irukkku Geetha. Really healthy!

Valarmathi said...

Wow.. such an healthy dish, great work Geetha, u r rocking.

Sanghi said...

Mm delicious.. pls collect ur award from my blog..!

Geetha Achal said...

நன்றி செல்வி.

Geetha Achal said...

நன்றி மேனகா.

நன்றி திவ்யா.

நன்றி வளர்மதி.

Geetha Achal said...

தங்களுடைய விருதுக்கும் கருத்துக்கும் நன்றி சங்கீ.

sarusriraj said...

கீதா புது மாதிரியான பால் கொழுக்கட்டை ,உங்களுக்கு ரொம்ப பொறுமை அழகா உருட்டி இருக்கிங்க . நெட் பிராப்ளம் 15 நாளா அதான் கமெண்ட் கொடுக்க முடியவில்லை

Suvaiyaana Suvai said...

remba nalla irukku diet recipe pidiththa pal kolukkaddai

susri said...

nalla irukku

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா.

எப்படி இருக்கின்றிங்க..குழந்தைகள் நலமா..

Geetha Achal said...

நன்றி ஸ்ரீ.

Anonymous said...

geetha romba differentaa iruku pa,kalakunga.Vaazhthukal.naan traditional methodla pacharasi ooravachu,arachu,atha vella paakula pizhinju veka vachu seiven ithu romba simple and healthy.good keep it up.

Related Posts Plugin for WordPress, Blogger...