செள செள துவையல்(Chow Chow/Chayote Thuvayal)சௌசௌயினை பெங்களூர் கத்திரிகாய் என்று அழைப்போம். சௌசௌ காயில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber),விட்டமின்ஸ், குறைந்த அளவு Saturated Fat & Cholestrol காணப்படுகின்றது.

சௌசௌயினை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட சிறந்தது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· செள செள – 1

· உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி

· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி

· தேங்காய் துறுவல் – 1 தே.கரண்டி (விரும்பினால்)

· கடுகு – 1/4 தே.கரண்டி

· காய்ந்த மிளகாய் – 4, கருவேப்பில்லை – 5 இலை

· புளி – சிறிதளவு

· பெருங்காயம் தூள் – 1/4 தே.கரண்டி

· எண்ணெய் – 2 தே.கரண்டி

· உப்பு – தேவையான அளவு

செய்முறை :

v செள செளவினை தோல் சிவில் வைத்து சிவி கொள்ளவும்.

v உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு +காய்ந்த மிளகாய் + 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும்.

v பின்பு 1/2 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு + கருவேப்பில்லை தாளித்து தனியாக வைக்கவும்.

v அதே கடாயில் சிவி வைத்துள்ள செளசெளவினை மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி 4 – 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

v வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆறவிடவும்.

v வதக்கிய செளசெள + வறுத்த பொருட்கள் + தேங்காய் துறுவல் + புளி + பெருங்காயம் தூள் + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

v சுவையான சத்தான செளசெள துவையல் ரெடி.

குறிப்பு :

செளசெளவின் தோலினை தூக்கி எறியாமல் இத்துடன் சேர்த்து துவையல் செய்யலாம்.

13 comments:

ஹர்ஷினி அம்மா said...

இதுலே துவையல் கூட பன்னலாமா கீதா... ஒரு செளசெளவை வைச்சு யோசிச்சுட்டு இருந்தேன் ...செய்து பாக்குரேன்.

Geetha Achal said...

ஆமாம் ஹர்ஷினி அம்மா...இந்த துவையல் மிகவும் சூப்பராக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றி

Pavithra said...

Looks so yummy geetha.. I too almost make the same one.. perfect for rice.

RAKS KITCHEN said...

Only today made curry with chow chow,never knew we can make thogaiyal,will try next time:)

Sanghi said...

this looks new to me.. yummy!

Chitra said...

Looks very nice geetha..Ithula thogayal kooda seyalamma, super..Naan kootu thaan seyvean..sure ithu try panren :)

Mrs.Menagasathia said...

சூப்பராக இருக்கு கீதா!!

Geetha Achal said...

நன்றி பவித்ரா.

Geetha Achal said...

நன்றி ராஜேஸ்வரி..கண்டிப்பாக செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்.

Geetha Achal said...

நன்றி சங்கீ

Geetha Achal said...

நன்றி சித்ரா...செய்து பாருங்கள்...மிகவும் சூப்பர்பாக இருக்கும்.

Geetha Achal said...

நன்றி மேனகா.

நட்புடன் ஜமால் said...

வித்தியாசமாக இருக்கு - முயற்சித்து பார்க்கனும்.

நார்சத்து மிகந்தது என்ற தகவலுக்கு நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...