சுறாமீன் குழம்பு - Sura / Shark Fish Kulambuஇந்த குழம்பினை சளி, காய்ச்சல் , குளிர் காலம் போன்ற சமயங்களுக்கு எற்ற குழம்பு. இதனை குழந்தை பெற்ற பெண்களுக்கு கொடுப்பாங்க. உடலிற்கு மிகவும் நல்லது.
அதிக எண்ணெய் சேர்க்காமல் இதனை செய்யலாம். சுறா மீன் குழம்பினை நாம் எப்பொழுதும் வைக்கும் மீன் குழம்பு போல வைத்தால் சுவையாக இருக்காது.
அதே போல, சுறாமீனினை குழம்பில் போடும் பொழுது, தோலினை நீக்கிவிடவேண்டும்.
மீனை வாங்கும் பொழுதே தோலினை நீக்கி வாங்கி கொள்ளலாம், அப்படி இல்லயெனில் மீனை தனியாக வேகவைத்தபின் நாம் தோலினை நீக்கிவிட வேண்டும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 – 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· சுறா மீன் – 1/2 கிலோ
· மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி + 1/2 தே.கரண்டி
· உப்புதேவையான அளவு
· கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது சிறிதளவு
புளி கரைக்க :
· புளி – எலுமிச்சை அளவு
· தண்ணீர் – 3 – 4 கப்
அரைத்து கொள்ள:
· வெங்காயம் – 1 பெரியது
· மிளகு – 2 மேஜை கரண்டி (சுமார் 40 மிளகுகள்)
· பூண்டு – 10 - 12 பல் பெரியது
மேலும் காரம் விரும்பினால் :
· மிளகாய் தூள் + தனியா தூள் – 1 தே.கரண்டி
முதலில் தாளிக்க :
· நல்லெண்ணெய் – 1 தே. கரண்டி
· கடுகு – 1/2 தே.கரண்டி
· வெந்தயம் – 1/4 தே.கரண்டி
· அல்லது வடகம் – சிறிதளவு (கடுகு, வெந்தயதிற்கு பதிலாக)
செய்முறை :
v மீனை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

மீன் நன்றாக வெந்த பிறகு, சிறிது நேரம் ஆறிய வைத்து தோலினை நீக்கிவிடவும்.

v வெங்காயம் + பூண்டு + மிளகு சேர்த்து மிக்ஸில் மைய அரைத்து கொள்ளவும்.

v புளியினை தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து கொள்ளவும்.
v அரைத்த விழுது + புளி தண்ணீர் + 1/2 தே.கரண்டி மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். (காரம் பார்த்து கொள்ளவும். விரும்பினால் மேலும் காரத்திற்கு மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து கொள்ளவும்.)

v கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து, கலந்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி நன்றாக 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
v குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன், கொத்தமல்லி + வேகவைத்து தோல் நீக்கி வைத்துள்ள சுறாமீனை குழம்பில் போடவும்.
v இதனை மேலும் 10 – 12 நிமிடங்கள் குழம்பில் போட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும். சுவையான சத்தான சுறாமீன் குழம்பு ரெடி.

கவனிக்க :
சுறாமீனை எப்பொழுதும் தோலினை நீக்கி குழம்பில் சேர்க்கவும்.
வேகவைத்த மீனை, குழம்பில் எவ்வளவு நேரம் கொதிக்கவிட்டாலும் உடைந்துவிடாது. ( மற்றமீன்கள் அதிகமாக வெந்தால் கரைந்துவிடும்.) சுறாமீன் நன்றாக இருக்கும்.
இந்த குழம்பினை சிறிது தண்ணியாக வைத்து, ரசம் போல ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

30 comments:

S.A. நவாஸுதீன் said...

மீன்களில் எனக்கு ரொம்ப பிடித்தது இதுதான். ரொம்ப டாப். உங்க செய்முறையிலும் செய்து பார்த்திடுவோம். நன்றி சகோதரி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நவாஸுதீன்.

//மீன்களில் எனக்கு ரொம்ப பிடித்தது இதுதான். ரொம்ப டாப். உங்க செய்முறையிலும் செய்து பார்த்திடுவோம். நன்றி சகோதரி//

அனைவருக்கும் சுறாமீன் என்றால் மிகவும் விருப்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கண்டிப்பாக செய்து பாருங்கள்..இது எங்கள் வீட்டில் செய்யும் குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும்.

எப்பொழுதும் என்னுடைய பதிவுகளுக்கு பின்னுட்டம் அளித்து எனக்கு ஊக்கம் அளிப்பதற்கு நன்றிகள் பல.

Shama Nagarajan said...

arumaiyana meen kulambu

Shama Nagarajan said...

arumaiyana meen kulambu....

புலவன் புலிகேசி said...

இத ஒரு பேச்சிலர் வச்சா சரியா வருமா? எனக்கு நீண்ட நாள் ஆசை...மீன் குழம்பு செய்து சாப்பிட வேண்டும் என்று.........

Geetha Achal said...

நன்றி ஷாமா.

//இத ஒரு பேச்சிலர் வச்சா சரியா வருமா? எனக்கு நீண்ட நாள் ஆசை...மீன் குழம்பு செய்து சாப்பிட வேண்டும் என்று.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலிகேசி.

கண்டிப்பாக இந்த செய்முறைபடி யார் வைத்தால் நன்றாக தான் இருக்கும்..ஏன் பேச்சிலர் வைத்தால் சரியா வராது என்ன...உண்மையில் பேச்சுலர்லர்கள் தான் நல்லா சமைப்பாங்க...கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றாக வரும். வாழ்த்துகள்.

Mrs.Menagasathia said...

உங்க செய்முறை வித்தியாசமாக நன்றாக இருக்கு.

Geetha Achal said...

மிகவும் நன்றி மேனகா..கண்டிப்பாக செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்..

எல்லாம் அம்மா கற்று கொடுத்தது தான்...

வால்பையன் said...

பாக்கும் போதே பசிக்குதே!

Sanghi said...

Wow.. drooling over!

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

சமைத்து சொன்ன விதம் அருமை!! யம் யம் யம்!!

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு , மிளகு சேர்த்து செய்து, இந்த சால்னாவும், புட்டும் வைத்தால் ஒரு புடி புடித்து விடுவேன், ரொம்ப பிடிக்கும். நல்ல இருக்கு.

கோபிநாத் said...

சுராப்புட்டு(அஞ்சப்பர்,அரசப்பரில்) சாப்பிட்டிருக்கிறேன். இந்த குழம்பினை முயற்சி செய்து பார்க்கிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

நல்ல சுவையான ரெசிப்பி.சுறா மீன் எனக்கும் பிடிக்கும்.தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ரொம்ப நல்லது,பால் சுரக்கும்.

Valarmathi said...

Parka romba nalla iruku, yummy....

my kitchen said...

Romba nalla erruku geetha

Geetha Achal said...

வாங்க வால்பையா...எங்கள் வீட்டிற்கு நிச்சயம் உங்களுக்கு சுறாமீன் குழம்பும், வாழைக்காய் வறுவலும் செய்து கொடுகிறேன். நன்றி.

Geetha Achal said...

நன்றி சங்கீ.

நன்றி ஷஃபிக்ஸ்.

வால்பையன் said...

//
வாங்க வால்பையா...எங்கள் வீட்டிற்கு நிச்சயம் உங்களுக்கு சுறாமீன் குழம்பும், வாழைக்காய் வறுவலும் செய்து கொடுகிறேன்//

ரொம்ப அவசரம்!
கூரியரில் அனுப்ப முடியுமா!?

Geetha Achal said...

நன்றி ஜலிலா அக்கா..ஆமாம் எனக்கும் இதே காம்பினேஷன் ரொம்பவும் பிடிக்கும். அன்றும் கூட அதே காம்பினேஷனில் தான் சமைத்தேன்.

சுறாபுட்டு குறிப்பு எற்கனெவே நான் கொடுத்து இருப்பதால், அதனை வெளியிடவில்லை.

Geetha Achal said...

நன்ரி கோபிநாத். கண்டிப்பாக செய்து பாருங்கள். இந்த குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

எங்கள் வீட்டு வழக்கம்படி, இந்த குழம்பினை செய்து இருக்கின்றேன். செய்து பாருங்கள் .நன்றி.

Geetha Achal said...

நன்றி பாத்திமா.

நன்றி வளர்மதி.

நன்றி செல்வி.

Geetha Achal said...

////
வாங்க வால்பையா...எங்கள் வீட்டிற்கு நிச்சயம் உங்களுக்கு சுறாமீன் குழம்பும், வாழைக்காய் வறுவலும் செய்து கொடுகிறேன்//

ரொம்ப அவசரம்!
கூரியரில் அனுப்ப முடியுமா!//

அனுப்பிவிட்டேன் வால்பையன்...நன்றிகள்.

Alagar jayakodi said...

Geetha achal where are you ya ?

Anonymous said...

En Thol neeka vendum ?

GEETHA ACHAL said...

இதில் மஞ்சள் தூள் தவிர வேறு எந்த தூள் வகையும் சேர்க்க வேண்டாம்... விரும்பினால் மேலும் காரத்திற்கு மிளகாய் தூள் + தனியா தூள் சேர்த்து கொள்ளலாம்.

Anonymous said...

tasted like milagu rasam. Did i miss something!!!!

however different dish.

Vijay.

Selvi Jagadeesan said...

Very very nice and mouth watering Geetha!!

Selvi Jagadeesan said...

Very very nice and mouth watering Geetha!!

Selvi Jagadeesan said...

its loooks very nice and mouth watering Geetha

Related Posts Plugin for WordPress, Blogger...