காரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari


கலர்பவுடர் இல்லயே…கேசரி எப்படி செய்வது…வெள்ளை நிறத்தில் இருந்தால் அதனை யாரும்விரும்பி சாப்பிடமாட்டாங்க…அப்படி இருக்கும் சமயங்களில் இந்த காரமெல் கேசரியினை ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள்…அப்புறம் என்ன கேசரி கலர் இருந்தாலும் கூட உங்கள் வீட்டில் எப்பொழுதும் இந்த காரமெல் கேசரி தான் போங்க…

சக்கரையினை வெறுமனே தண்ணீர் சேர்க்காமல், கடாயில் வறுத்து செய்யவேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்வீட்..

இதனை கோதுமை ரவையில் செய்து இருக்கின்றேன்..இதனை ரவையில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

· கோதுமை ரவை – 1 கப்

· சக்கரை – 1 கப்

· நெய் – 2 மேஜை கரண்டி

· பால் – 2 கப்

· ஏலக்காய் – 1

வறுத்து சேர்க்க :

· நெய் – 1 தே.கரண்டி

·முந்திரி, திரட்சை- சிறிதளவு

செய்முறை :

v ரவையினை கடாயில் போட்டு 2 – 3 நிமிடங்கள் வறுத்து தனியாக எடுத்துகொள்ளவும்.

v ஒரு பாத்திரத்தில் பாலினை தனியாக காய்ச்சவும்.

v பின் அதே கடாயில் சக்கரை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். (தண்ணீரை சேர்க்க கூடாது.)

v சக்கரை சிறிதுசிறிதாக கரைந்து, கருப்பு தேன் கலர் போல ஆகும் வரை வறுக்கவும்.

v சக்கரை நிறம்மாறியதும், சுடான பால் + நெய் சேர்த்து ஊற்றவும். ( கவனிக்க: இப்பொழுது Bubbles நிறைய பொங்கி வரும். அதனால் பெரிய பாத்திரத்தில் செய்தால் நல்லது. ).

v Bubbles குறைந்ததும் ரவையினை சேர்த்து நன்றாக கிளறவும்.

v ஒரு தாளிப்பு கடாயில், நெய் ஊற்றி முந்திரி + திராட்சையினை வறுத்து கொள்ளவும்.

v ரவை நன்றாக வெந்தபிறகு, ஏலக்காய் + வறுத்த முந்திரி, திராட்சையினை சேர்த்து கிளறவும்.

v சுவையான எளிதில் செய்ய கூடிய காரமெல் கோதுமை கேசரி ரெடி.

கவனிக்க :

v சக்கரையினை கடாயில் போட்டு வறுக்கும் பொழுது கலர் மாறும் வரை பார்த்து கொள்ளவும்.

v பால் சூடாக இருக்க வேண்டும். அப்பொழுது தான், காரமெலில் (வறுத்த சக்கரையில்) சேர்க்கும் பொழுது திரும்பவும் காரமெல் கட்டியாகி கொள்ளலாமல் இருக்கும்.

v சக்கரை கலர்மாறியவுடன், பால் + நெய் சேர்த்து கொள்ளவும். அப்பொழுது, பொங்கி வருவது போல இருக்கும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்திரம் உபயோகிப்பது நல்லது.

v நாம் எப்பொழுதும் செய்யும் கேசரிக்கு கிளறுவது போல, கிளறிக்க கொண்டே இருக்க வேண்டாம். ஒண்றிடண்டு முறை கிளறினால் போதுமானது.

40 comments:

S.A. நவாஸுதீன் said...

காரமெல் கோதுமை கேசரி - பார்க்கவே அழகா இருக்கே. ஒவ்வொன்றும் அசத்தலா சொல்றீங்க சகோதரி. வாழ்த்துக்கள்

Ammu Madhu said...

good one akka.

Mrs.Menagasathia said...

நல்ல ஐடியா!!மிகவும் நன்றாக இருக்கு!!

Geetha Achal said...

நன்றி நவாஸுதீன். கண்டிப்பாக செய்து பாருங்கள்..சுவையாக இருக்கும்.

Geetha Achal said...

நன்றி அம்மு. எப்படி இருக்கின்றிங்க..உடம்பினை பார்த்து கொள்ளுங்கள்...அர்சுன் எப்படி இருக்கான்...

Geetha Achal said...

நன்றி மேனகா...

Priya said...

Romba pudusa irruku intha caramel kesari Geetha..

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க டையட் என்ன ஆச்சு?

Geetha Achal said...

நன்றி ப்ரியா...

டயட் ஆரம்பித்து 5 மாதம் ஆகிவிட்டதால், இப்பொழுது stabilize செய்து கொண்டு இருக்கின்றோம்..நன்றி ராஜ்.

Sukanya Ramkumar said...

Hi first time to ur blog. U have nice set of healthy recipe. Loved ur wheat caramel kesari idea....

BONIFACE said...

super,,,no worry abt colours,,,

ஸாதிகா said...

காரமலில் கேசரி.புது முயற்சி.

பித்தனின் வாக்கு said...

ஆகா படங்கள் பார்க்க அருமை, நாவில் ஊறுகின்றது. மொத்தம் மூனு கரண்டி நெய்யா. சூப்பர். சாப்பிட சுவையாக இருக்கும். எங்களுக்கு ஒரு பார்சல் பிளீஸ். நன்றி.

அன்புடன் மலிக்கா said...

இன்று செய்துபார்க்கிறேன் கீத்து..
சூப்பர் படங்கள்...

RAKS KITCHEN said...

Superb recipe,sure going to try this,bookmarked...sounds bit tricky,still will try as i love caramelized sugar smell :)

ஹுஸைனம்மா said...

கோதுமை ரவையைப் பொடித்துக் கொள்ள வேண்டுமா கீதா?

இதற்கும் 2 பங்கு பால் போதுமா? கோதுமை ரவை வேக நேரம் எடுக்குமே, அதனால் அதிகப் பால் வேண்டாமா?

kino said...

கீதா கோதுமை ரவா கேசரி ரொம்ப நல்லா இருக்கு...செய்து பார்க்குரேன்.ரொம்ப நன்றி.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சுகன்யா..

கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக பக்கம் வரவேண்டும் என்று அன்புடன் அழைகிறேன்.

Geetha Achal said...

நன்றி boniface...கண்டிப்பாக கலர் ப்ராபளம் தீர்ந்துபோய்விட்டது...

Geetha Achal said...

நன்றி ஸாதிகா ஆன்டி.

Geetha Achal said...

நன்றி பித்தன்...உங்களுக்கு பர்சல் கிடைத்துவிட்டதா....நன்றி.

இந்த கேசரிக்கு அதிக நெய் எல்லாம் சேர்க்க்க தேவையில்லை..சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும் ....விரும்பினால் 1 மேஜைகரண்டியே போதுமானது...

Geetha Achal said...

நன்றி ராஜேஸ்வரி...படிக்கும் பொழுது சிறிது trickyயாக தெரிந்தாலும், ஒரு முறை செய்து பாருங்கள் .....

இதனை செய்வது மிகவும் சுலபம்..கண்டிப்பாக செய்து பாருங்கள்.

Geetha Achal said...

நன்றி ஹூஸைனம்மா.

//கோதுமை ரவையைப் பொடித்துக் கொள்ள வேண்டுமா கீதா?//

கோதுமை ரவை தனியாகவே கிடைக்கின்றது..எல்லா இந்தியன் கடைகளில் கிடைக்கும் . கேட்டு பாருங்கள்.

//இதற்கும் 2 பங்கு பால் போதுமா? கோதுமை ரவை வேக நேரம் எடுக்குமே, அதனால் அதிகப் பால் வேண்டாமா?//
கோதுமை ரவையினை முதலிலே நன்றாக வறுத்து கொள்கிறோம்.என்னிடம் உள்ள கோதுமை ரவை மிகவும் பொடியதாக ரவை போலவே இருக்கும். அந்த கோதுமை ரவை வேக அதிக நேரம் எடுக்காது.

Geetha Achal said...

நன்றி kino...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும். நன்றி.

ப்ரியமானவள் said...

இதுவும் சரிதானோ?

பெண்களின் முன்னேற்றம் உண்மையா
http://priyamanavai.blogspot.com/2009/11/blog-post.html

sarusriraj said...

கீதா வித்யாசமான ரெசிபி ... i will try it by tomorrow itself.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா. கண்டிப்பாக செய்து பாருங்கள்..நன்றாக இருக்கும்..குட்டிஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க..

Valarmathi said...

Wow....looks so yummy.

Geetha Achal said...

நன்றி வளர்மதி.

Deivasuganthi said...

வித்தியாசமான ரெசிபி.பார்க்கவே நல்லா இருக்குது.

Geetha Achal said...

நன்றி சுகந்தி.

sarusriraj said...

கீதா இன்று மாலை செய்தேன் ரொம்ப டேஸ்டியா இருந்தது ஆனால் கொஞ்சம் வேகாமல் நறுக்குன்னு இருந்தது (கோதுமை ரவா) , ஆனா சுவையா இருந்தது , வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க அடுத்த முறை செய்யும் போது ரவைல செய்யனும்னு ஆர்டர் போட்டு இருக்காங்க (அல்வா மாதிரி இருக்காம்)

Geetha Achal said...

மிகவும் சந்தோசம் சாரு அக்கா...குட்டிஸ் விரும்பி சாப்பிடதில் மகிழ்ச்சி...

கொஞ்சம் நறுக்நறுக் என்று இருந்தால், மேலும் சிறிது சூடான பால் சேர்த்து வேகவைத்தால், நன்றாக இருக்கும்.

அடுத்த முறை ரவையில் செய்து பாருங்கள்..குட்டிஸ் சொல்வது போல இது அல்வா மாதிரி சூப்பர்ப் டேஸ்டாக இருக்கும்...

sarusriraj said...

கீதா எனக்கு இந்த ஐடியா தோணவே இல்லை என்ன செய்யாலாம்னு யோசிச்சு கொஞ்சம் நேரம் மூடி வச்சு பார்த்தேன். அடுத்த முறை செய்து விடுகிறேன்.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா....

sarusriraj said...

கீதா போய் சூடான பால் ஊற்றி கிளறி விட்டேன் , இப்போ நல்லா வெந்து நல்லா இருந்தது.

Geetha Achal said...

ஒ..சூப்பர்ப்...போங்க...நன்றி...சாரு அக்கா..

Nasar said...

காரமலில் கேசரியா .....!!!!
செய்து, சாப்பிட்டேன் ...வாவ்... சூப்பர் ரெசிபி...
அட்டகாசமான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ...

GEETHA ACHAL said...

ரொம்ப நன்றி நாசர்...செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி..

Sangeetha Selvam said...

ungal recipies anaithum super ellame romba rusiya irukku.mikka nanri

Related Posts Plugin for WordPress, Blogger...