ஸ்டஃப்டு கோவைக்காய் - Stuffed Kovaikkai - Tindora


சக்கரை நோயளிகளுக்கு (Diabetics) இந்த காயினை வாரத்திற்கு 2 – 3 முறை மதிய உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.சக்கரை கட்டுபாட்டில் இருக்கும். மிகவும் குளுமை என்பதால் இரவு நேரத்திற்கு சாப்பிட வேண்டாம்.


கோவைக்காயினை சாப்பிட்டால் வந்த வாய்புண் காணாமல் போய்விடும். இதனை தொண்டைக்காய் என்றும் சொல்லுவார்கள்.


சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· கோவைக்காய் – 1/2 கிலோ ( சுமார் 30 – 40 காய்கள்)
· உப்பு – 1 தே.கரண்டி
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி (அல்லது Cooking Spray)
ஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள் :
· கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி
· உளுத்தம் பருப்பு – 2 மேகை கரண்டி
· கொள்ளு – 2 மேஜை கரண்டி
· காய்ந்த மிளகாய் – 4
· சீரகம் – 1/2 தே.கரண்டி
· மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
· எலுமிச்சை பழம் – 1
· பெருங்காயம் தூள் – சிறிதளவு
· உப்பு – 1 தே.கரண்டி
· எண்ணெய் – 1 தே.கரண்டி
செய்முறை :
v முதலில் அவனை 400F மூற்சூடு செய்து கொள்ளவும். கோவைக்காயினை கழுவி, நன்காக நடுவில் மட்டும் வெட்டி கொள்ளவும்.உப்பு + எண்ணெய் போட்டு கலந்து கொள்ளவும்.
ஸ்டஃப்பிங் செய்ய :
v கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு + உளுத்தம் பருப்பு + கொள்ளு + காய்ந்த மிளகாய் ஒவ்வொன்றாக தனிதனியாக வறுத்து கொள்ளவும்.
v வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறவிட்டு, அத்துடன் சீரகம் + மஞ்சள் தூள் + பெருங்காயம் தூள் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
v பொடித்த பொடியுடம் எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இப்பொழுது ஸ்டஃப்பிங் ரெடி.
v இந்த ஸ்டஃப்பிங்கினை, சிறிது சிறிதாக எடுத்து வெட்டி வைத்துள்ள கோவைக்காயின் நடுவில் வைக்கவும்.(ஸ்டஃப்பிங் வெளியில் வராமல் பார்த்து கொள்ளவும்.) இப்படியே ஒவ்வொன்றாக ஸ்டஃப்பிங் செய்யவும்.

இப்பொழுது ஸ்டஃப்பிங் செய்த கோவைக்காய் ரெடி.
v இதனை அவனில் வைக்கும் ட்ரேயில் அடுக்கவும். மூற்சுடு செய்ய அவனில், 10 நிமிடங்கள் வைக்கவும்.

v 10 நிமிடங்கள் கழித்து அவனில் இருந்து ட்ரேயினை வெளியில் எடுத்து, கோவைக்காயினை திருப்பிவிடவும். இதனை திரும்பவும் அவனில் வைத்து மேலும் 5 – 8 நிமிடங்கள் வேகவைக்கவும்.

சுவையான சத்தான ஸ்டஃப்டு கோவைக்காய் ரெடி.

கவனிக்க :
Cooking spray உபயோகித்தால், கோவைக்காயினை அவனில் வைக்கும்முன் sprayசெய்தால் போதுமானது.
இதே போல, வெண்டைக்காய், கத்திரிக்காயில் செய்தாலும் சுவையாக இருக்கும்.
Oven இல்லாதவர்கள், இதனை கடாயில் போட்டு செய்யலாம். சுவையாக இருக்கும்.(என்ன…சிறிது எண்ணெய் கூடுதலாக சேர்க்க வேண்டும்…அவ்வளவு தான்..)

23 comments:

S.A. நவாஸுதீன் said...

சின்ன வயசுல சிலேட் அழிக்க ஸ்கூல் பின்னாடி இருக்கும் கோவில் வேலியில் பறித்தபோது பார்த்தது கோவைக்காய். இப்பதான் மறுபடியும் பார்க்கிறேன். அதுவும் சூப்பரா ப்ளேட்ல.

Geetha Achal said...

நன்றி நவாஸுதீன். இந்த காய் கிடைக்த்தால், சமைத்து பாருங்கள்.

sarusriraj said...

நல்லா இருக்கு கீதா , கோவக்காய் கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்கிறேன்.

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா...கண்டிப்பாக காய் கிடைக்கும் பொழுது செய்து பாருங்கள்...(நம்ம தமிழ்நாட்டில் இந்த காய்க்கு பஞ்சமா என்ன...)

sarusriraj said...

இங்க பெரிய மார்கெட் போனால் கிடைக்கும் , பக்கத்தில் உள்ள மார்கெட் சந்தை என்றால் நானும் போவேன் இல்லை என்றால் என்னவர் வாங்கி வர மறந்து விடுவார்.

Mrs.Menagasathia said...

நல்லாயிருக்கு கீதா!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice

Geetha Achal said...

சாரு அக்கா...சும்மா தான் சொன்னேன்...உங்களுக்கு இந்த காய்கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Geetha Achal said...

நன்றி மேனகா.

நன்றி ஸ்ரீ.

Suvaiyaana Suvai said...

ithu half cook thaan cook aakiyirukkumaa?

Priya said...

Wow romba superaa irruku geetha..

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்லா இருக்குங்க, இது மாதிரி நாங்க கத்திரிக்காயில் செய்வேம். ஆனால் எண்ணெய்யில் வாணலியில் வதக்குவேம். இதுவும் செய்து பார்க்கின்றேம். இந்த கோவைக்காயை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, தண்ணீர் வெல்லம் விட்டு வேக வைத்தால் சுவையான பொறியல் ரெடி. ஆனா என்ன கொஞ்சம் பார்க்க பூரான் மாதிரி இருப்பதால் சில பெண்களுக்குப் பிடிக்காது. நன்றி. சுவையான பதிவு.

Geetha Achal said...

நன்றி ஸ்ரீ. இது நன்றாகவே வெந்து இருக்கும். பாதி தான் வேகவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதற்கு ஏற்றாற் போல நேரத்தினை குறைந்த்து கொள்ளலாம்.

நான் கொடுத்துள்ள நேரம் அவனில் வைத்தால், கண்டிப்பாக நன்றாக வெந்துவிடும். நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பித்தன். கண்டிப்பாக கோவைக்காயிலும் செய்து பாருங்கள்..மிகவும் சுவையாக இருக்கும்.

நீங்கள் சொல்வது உண்மை தான்...உடம்புக்கு நல்லது என்றால் எல்லோரும் கசக்கதான் செய்யும்...அதுவும் மலிவாக கிடைக்குது என்றால் எல்லோரும் அதில் சத்துஇல்லை என்று விலை அதிக கொடுத்து சில காய்களை வாங்கி சாப்பிட தான் செய்கின்றனர்...என்ன செய்ய...

sarusriraj said...

சாரு அக்கா...சும்மா தான் சொன்னேன்...உங்களுக்கு இந்த காய்கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள் ....
இதுல என்ன இருக்கு கட்டாயம் செய்து பார்துவிட்டு சொல்கிறேன்

Geetha Achal said...

நன்றி சாரு அக்கா...

my kitchen said...

நல்லாயிருக்கு கீதா கோவக்காய்.

Valarmathi said...

supera irukku, looks delicious.

Geetha Achal said...

நன்றி செல்வி.

நன்றி வளர்மதி.

அண்ணாதுரை said...

நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

prabhadamu said...

கீதா அக்கா நானும் வந்துட்டேன். உங்க சமையல் எல்லாம் சூப்பர். நன்றி அக்கா.

ramesh said...

hai this is very very good helping for tamil people keep it uppppppp.... dear friend.................

Related Posts Plugin for WordPress, Blogger...