பார்லி பேன் கேக்ஸ் - Barley Pancakes


சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· பார்லி மாவு – 1 கப்
· பேக்கிங் பவுடர் – 1 தே.கரண்டி
· பால் – 1/2 கப்
· தயிர் – 1/2 கப்
· முட்டை – 1 (விரும்பினால்)
· சக்கரை – 1 தே.கரண்டி
செய்முறை :
v பவுல் 1 : பால் + தயிர் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
v நன்றாக அடித்து வைத்துள்ள தயிர் கலவையில் முட்டையினை சேர்த்து கலந்து கொள்ளவும்.
v பவுல் 2 : பார்லி மாவு + பேக்கிங் பவுடர் + சக்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.
v இப்பொழுது பவுல் 1யில் இருக்கும் கலவையினை இதில் சேர்த்து கட்டியில்லாமல் beaterயினால் நன்றாக கலக்கவும்.
v கல்லினை காயவைத்து அதில் இந்த கலவையினை கரண்டியினால் சிறிது மாவினை ஊற்றவும். (தோசைக்கு தேய்ப்பது போல தேய்க்க கூடாது. மாவினை ஊற்றியவுடன் அதுவே பரவி கொள்ளும்.)

v ஒருபுறம் நன்றாக வெந்தவுடன், அதனை திருப்பிபோட்டு வேகவிடவும்.

v சுவையான சத்தான எளிதில் செய்ய கூடிய பார்லி பேன்கேக்ஸ் ரெடி. இதனை மேப்பில் சிரப், தேனுடன் சேர்த்து சாப்பிட அனைவரும் விரும்புவோம்.

இந்தியாவிற்கு Vacation செல்வதால், இனி சிறிது காலம் ப்ளாக் பக்கம் வரமுடியாமல் இருக்கின்றது....அனைவருக்கும் எனது நன்றிகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...