டயட் சேமியா உப்புமா (Diet Semiya Uppuma)


என்னது டயட் சேமியா உப்புமாவா?...இந்த உப்புமாவினை பார்பதற்கு ஒன்னும் அப்படி தெரியவில்லையே என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது…நாம் செய்யும் உப்புமாவிற்கும், நான் செய்து இருக்கும் இந்த டயட் உப்புமாவிற்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் ஒன்றும் கிடையாது….அப்புறம் என்னவா….அத..அத…தான் இப்போ சொல்ல போறேன்…பொதுவாக நாம் உப்புமா செய்யும் பொழுது, கடுகு + பருப்பினை தாளித்து பின் வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை வதக்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கடைசியில் ரவையினை சேர்த்து கிளறுவோம்..ஆனால், இந்த டயட் சேமியாவில், அதே மாதிரி தான், முதலில் கடுகு தாளித்து வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சை மிளகாயினை எல்லாம் வதக்கவேண்டும்….அப்புறம் வதக்கிய பொருட்களை எல்லாம் தனியாக எடுத்துவிடவேண்டும். பிறகு ரவைக்கு(அ) சேமியாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும், ரவையினை கிளறவேண்டும். ரவை/சேமியா வெந்தவுடன், கடைசியில் இந்த வதக்கிய பொருட்களை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். சுவையான டயட் சேமியா ரெடி.இப்படி கடைசியில் வதக்கிய வெங்காயத்தினை சேர்ப்பதால், Calories குறைவாக இருக்கும். (சுமார் 1 கப் உப்புமாவில் 500 Calories என்றால், இந்த டயட் உப்புமாவில் 350 Calories தான் இருக்கும்.) காரணம், வெங்காயத்தினை வதக்கியவுடன் எடுத்துவிடுகிறோம். (வதக்கிய வெங்காயத்தில் சுமார் 100 calories இருக்கும் என்றால், முதலில் வதக்கிய பிறகு தண்ணீரில் வேகவைக்கும் வெங்காயத்தில் 150 – 160 calories இருக்கின்றது…)சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்

தேவையான பொருட்கள்:

• சேமியா – 1 கப்

• வெங்காயம் – 1

• பச்சை மிளகாய் – 1

• கருவேப்பில்லை – 3 இலை

• கடுகு – தாளிக்க

• எண்ணெய் – 1 தே.கரண்டி

• உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி

• உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

 சேமியாவினை கடாயில் போட்டு 1 நிமிடம் வறுத்து கொள்ளவும். வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

 கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பருப்பினை சேர்த்து வறுக்கவும்.

 பின்பு வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

 வெங்காயம் வதங்கியபின் அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

 பின்னர் அதே கடாயில், 1 கப் தண்ணீர் + உப்பு சேர்த்து கொதிவந்ததும் சேமியாவினை கொட்டி கிளறி வேகவிடவும்.

 கடைசியில், சேமியா நன்றாக வெந்தவுடன், தட்டில் எடுத்து வைத்துள்ள வதக்கிய வெங்காயத்தினை இத்துடன் சேர்த்து கிளறவும். சுவையான எளிதில் செய்ய கூடிய உப்புமா ரெடி.35 comments:

Priya said...

Diet upma sounds delicious and yumm! superaa vilakam kudathuku romba nandri Geetha...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.

Nithu Bala said...

Diet semiya uppuma nalla irukku..seidhu parkaren..thanks for sharing this..

Padhu said...

Diet upma sounds good .Thanks for the information

நட்புடன் ஜமால் said...

சேமியாவுல வெஜிடபுள் பிரியாணியே செஞ்சிட்டாங்க நல்லா சாப்பிட்டுவிட்டு ஓப்பன் செய்தா உங்க டயட் சேமியா உப்புமா

ஹூம்

நோட் செய்தாச்சு ...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலோரி அளவெல்லாம் சொல்லி தெளிவா அசத்தியிருக்கீங்க அக்கா. ..

மகி said...

ஆஹா..கீதா,இப்படி செய்தால் Calories வேல்யூ குறையுமா? இது தெரியாமலே நான் இப்படிதான் செஞ்சுட்டு இருக்கேன்.தகவலுக்கு நன்றி!

kavisiva said...

வெங்காயம் வதக்கி வேகவைத்தால் கலோரி கூடிடும்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். தகவலுக்கு நன்றி கீதா

Aruna Manikandan said...

Diet upma sounds interesting....
Thx for the information...

karthik said...

அருமையான வுணவு

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி நிது....

Geetha Achal said...

ஒ...வெஜிடேபுள் சேமியா பிரியாணியா...சூப்பர்ப் தான் ஜமால் அண்ணா...அண்ணிகிட்ட சொல்லி இதனையும் ஒரு முறை செய்து கொடுக்க் சொல்லுங்க...நன்றி அண்ணா.

Geetha Achal said...

//கலோரி அளவெல்லாம் சொல்லி தெளிவா அசத்தியிருக்கீங்க அக்கா//நன்றி ஸ்ரீ. எதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

Geetha Achal said...

//ஆஹா..கீதா,இப்படி செய்தால் Calories வேல்யூ குறையுமா?//ஆமாம் மகி..இப்படி வதக்கிய வெங்காயத்தினை கடைசியில் சேர்த்தால் கண்டிப்பாக Calories வேல்யூ குறையும்.//இது தெரியாமலே நான் இப்படிதான் செஞ்சுட்டு இருக்கேன்.தகவலுக்கு நன்றி//இப்படி தான் நமக்கு தெரியாமலே நல்ல விஷயமும் நாம் செய்கிறோம்...இப்படி கடைசியில் சேர்ப்பதால் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், உப்புமா கட்டிபடாது...நன்றாக கிளறலாம்.

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா..கண்டிப்பாக மீண்டும் மீண்டும் இந்த பக்கம் வர வேண்டும் எனறு அன்புடன் அழைகிறேன். நன்றி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி கார்த்திக்...கண்டிப்பாக அடிக்கடி இந்த ப்ளாக் பக்கம் வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றேன்.

ஸாதிகா said...

ஊரில் இருந்து வந்தாச்சா?சேமியா உப்புமா சுலபாமாக செய்யக்கூடியது.நீங்கள் டயட் உப்புமா கொடுத்துவிட்டீர்கள்.நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்.

Mrs.Menagasathia said...

உப்புமா சூப்பராயிருக்கு.கலோரி தகவல் அருமை.இனி நானும் உங்கமுரையில் செய்ய போகிறேன்.

பொன்மலர் said...

வணக்கம் கீதா. நான் நலம் . நீங்கள் கேட்ட பிளாஷ் க்கு மாற்று அறிய இந்த பக்கத்தில் பாருங்கள் http://www.osalt.com/flash
மேலும் நீங்கள் பிளாஷ் cs4 பயன்படுத்தினால் கீழ் உள்ள சிறிய மென்பொருள் உங்களுடையதை எளிய வழியில் ஒரிஜினல் ஆக மாற்றுகிறது.
http://www.4shared.com/file/142367941/58f2da2a/Flash_CS4_KG_and_Activation.html?s=1
நானும் இதைக்கொண்டு தான் பிளாஷ் பயன்படுத்துகிறேன் எந்த தொல்லையும் இல்லாமல். நன்றி.

Kanchana Radhakrishnan said...

கலோரி தகவல் அருமை.

asiya omar said...

பார்க்கவே எம்மியாக இருக்கு.பொதுவாக சேமியா ரெசிப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Deivasuganthi said...

நல்ல தகவல் நன்றி கீதா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஸாதிகா அக்கா..போனவாரம் தான் இந்தியாவில் இருந்து திரும்பி வந்தோம்..

தங்கள் கருத்துக்கு நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...கண்டிப்பாக இப்படி செய்து பாருங்கள்...நன்றி..

Geetha Achal said...

நன்றி பொன்மலர்...கண்டிப்பாக அதனை செய்து பார்க்கிறேன்...நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா.

sarusriraj said...

thanks for your diet samiya , here after i will do in this method itself .

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகந்தி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா....கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி அக்கா..

my kitchen said...

Thanks for sharing diet tips,upma simply superb

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி செல்வி...

punitha said...

ஆஹா.. சூப்பர்! உடல் நலத்திற்கு தேவையான நல்ல குறிப்பு. நல்ல தகவல் மிகவும் நன்றி.

உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.

exercise4health said...

hi mrs geetha, your recipes are simply superb . i came to know through aval vikatan. since then i am following your blog. i wrote all your 25 types of chutney and got a wow from my family. my chutti daughter 3 years old with your tasty chutney recipe she used have one more idly extra without my effort. do share some macaroni dishes.. please. thank you.

exercise4health said...

hi mrs geetha, your recipes are simply superb . i came to know through aval vikatan. since then i am following your blog. i wrote all your 25 types of chutney and got a wow from my family. my chutti daughter 3 years old with your tasty chutney recipe she used have one more idly extra without my effort. do share some macaroni dishes.. please. thank you.

Related Posts Plugin for WordPress, Blogger...