இட்லி சத்தான காலை சிற்றுண்டியா??? விளக்கம்...Is Idli Really a good Healthy Indian Breakfast ??

இட்லியினை பற்றிய உங்களுடைய கருத்துக்களை தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றிகள்.

இட்லி என்பது பெரும்பாலும் அனைவருடைய காலை நேர சிற்றுண்டியாக திகழ்கின்றது. 
இட்லி என்பது இட்டு + அவி + அளி என்பதில் இருந்து வருகின்றது…இட்லியினை , இட்லி தட்டில் இட்டு, அதனை அவித்து பின்பு அளிக்கவும் என்பது இதன் பொருள்.

ஆறு மாதம் குழந்தையில் இருந்து அறுவது வயது தாத்தா வரை விரும்பிசாப்பிட்டும் உணவுவகையில் இந்த இட்லியும் ஒன்று.

அதுவும் இட்லியினை சாம்பார், சட்னி அல்லது பொடியுடன் சாப்பிட எப்பொழுதும் மிகவும் சூப்பராக இருக்கும். (எந்த கல்யாணத்திலும் காலையில் பறிமாறபடும் விருந்தில் இட்லியிற்கு எப்பொழுதும் தனி இடம் தான்….இதுவே இட்லியின் பெறுமையினை உணர்த்துகின்றது அல்லவா……)

சிறு குழந்தைகளுக்கு திடமான உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் தரப்படுவது இந்த இட்லி தான். எளிதில் ஜீரணமாகிவிடும்.

அதே போல உடல் நலமில்லாமல் இருக்கும்பொழுதும் இதே இட்லி + சக்கரை தான் பெரும்பாலும் சாப்பிடுவோம். எளிதில் ஜீரணமாகிவிடும் என்ற காரணத்தினால்.

அரைத்த அரிசிமாவு + உளுத்தமாவு + உப்பு சேர்த்து புளிக்கவைத்து, பிறகு அந்த மாவில்  இட்லியினை செய்வோம்.

தயிரினை புளிக்கவைக்க, காய்ச்சிய பாலுடன் சிறிது தயிர் சேர்த்து புளிக்கவைப்போம். ஆனால், அது போல் இல்லாமல், இட்லிமாவிற்கு அப்படியே புளிக்க சக்தி இருக்கின்றது. அதற்கு காரணம், உளுத்தம் பருப்பு. உளுத்தம்மாவினை சேர்ப்பதால், இட்லி மாவு சீக்கிரமாக புளிக்கின்றது. இதில் நிறைய நல்ல Bacteria இருக்கின்றது.

சக்கரை நோயளிகளிடம் செய்த ஒரு ஆய்வில், இட்லியினை இரண்டு நபர்களுக்கும், வெண்பொங்கலினை இரண்டு நபர்களுக்கும் கொடுத்து சாப்பிட சொன்னார்கள்..பின்பு அவர்களுக்கு இரத்தபரிசோதனை செய்தனர்….ஆச்சர்யம்…பொங்கலினை சாப்பிட்டவர்களை விட இட்லியினை சாப்பிட நபர்களுக்கு தான் சக்கரை அளவு அதிகமாக இருந்தது.

சுமார், முன்று வருடங்களுக்கு முன்பு நான் படித்தது.. ஒரு பிரபலமான நாளிதழில் வெளியிட்ட செய்து இது………..ஒரு ஆய்வின் கடைசியில் நிருப்பிக்கபட்டது….

இட்லியில் வெரும் Carbohydrate மற்றும் குறைந்த அளவு பிரோட்டின் (Protein) தான் இருக்கின்றது. இதனை தவிர இதில் வேறு எந்த விட்டமின்ஸும் அல்லது மினரல்ஸும் கிடையாது. (Vitamins & Minerals)

ஆறு மாதகுழந்தைக்கு தாய்பாலினை தவிர , நம்முடைய மக்கள் அறிமுகபடுத்தும் உணவுவகையில் இட்லியிற்கு தான் முதல் இடம். (காரணம் சிறிய குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும்.)

அதே போல ஜுரம், காய்ச்சல் போன்ற சமயங்களிலும் இட்லியினை தான் சாப்பிடுகிறோம்…( சத்தான திடமான உணவினை சாப்பிடுகின்றோம் என்ற நினைப்பில்…)

அப்படிபட்ட, இட்லியில் வெரும் கார்போஹேடேரேட் மற்றும் சிறிது பிரோட்டின் மட்டும் இருந்தால் போதுமா???...வளரும் சின்ன குழந்தைகளுக்கு இப்படி கொடுத்தால் எப்படி அவர்களுடைய உடம்பு ஆரோகியமாக இருக்கும்….அதே உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது நமக்கு விட்டமின்ஸ் மற்றும் மின்ரல்ஸ் வேண்டாமா??

நுடுல்ஸ்….பர்கர்…பிஸ்ஸா.. மட்டும் அனைத்து நாடுகளிலும் பிரபலம்…ஆனால் என்ன தான் இட்லி மிகவும் பிரபலம் என்றாலும், அதனை அனைவராலும் ஏற்கொள்ளபடவில்லை…காரணம்,அதில் இல்லாத சக்துகள் தான்..( மற்ற உணவுகள் என்னதான் உடம்பிற்கு கெடுதல் என்றால், அவற்றில் சில விட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கதான் செய்கின்ற என்று தெரிவித்தனர்….என்ன கொடுமை பாருங்கள் என்று நினைத்து கொண்டேன்)( சிறிது நாட்களுக்கு முன்பு இட்லியினை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று நம்நாட்டில் திட்டதினை செயல்படுத்த முயர்ச்சி செய்கின்றனர்…என்று படித்தேன்…பார்ப்போம்…)

இப்படிபட்ட கேள்விகள் விவாதிக்கபட்டன்…கடைசியில் அதற்கு விடையும் கண்டறியபட்டது…

இட்லிமாவினை கரைத்து புளிக்கவைத்த பிறகு தான் இட்லி செய்வோம்…அப்படி புளிக்க வைக்கும் பொழுது எப்பொழுதும் தயிர் சேர்த்து புளிக்க வைத்தால், அதில் நிறைய சத்துகள் கிடைப்பதாக வெளியிட்டனர்.

எப்பொழுதும் தயிர் சேர்த்து புளிக்க வைக்கபிடிக்கதவர்கள், இட்லியிற்கு மாவு அரைக்கும் பொழுது, அத்துடன் சிறிது கொண்டகடலையினையும் சேர்த்து அரைத்து, பின்பு புளிக்கவைக்க சொல்கின்றனர்…

இப்படி கொண்டைகடலை மாவு அல்லது தயிர் சேர்த்து புளித்த மாவில் இட்லியினை செய்வதால், அது சத்து நிறைந்த உணவாக மாறுகின்றது என்று கூறி ஆய்வினையும் முடித்தனர்….

விரும்பியர்கள், அவர்கள் விருப்பத்திற்கு எற்றாற் போல், புதினா இட்லி, கொத்தமல்லி இட்லி, கீரை இட்லி, வெஜிடேபுள் இட்லி, கேரட் இட்லி, கோதுமை இட்லி, கோதுமைரவை இட்லி, கேழ்வரகு இட்லி, பார்லி இட்லி, ஒட்ஸ் இட்லி, கம்பு இட்லி, பாசிபருப்பு இட்லி, தானிய இட்லி என்று விதவிதமான இட்லியினை செய்து சாப்பிடலாம்….

இட்லியினை ஆவியில் வேகவைப்பதால், தோசையை விட இட்லி சாப்பிடுவது தான் நல்லது…

அதனை படித்த பிறகு, அடிக்கடி நான் இந்த கொண்டைகடலை இட்லியினை செய்வோன்…நீங்களும் செய்து பாருங்கள் …மிகவும் சுவையாகவும், உண்மையில் சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றது……(கவனிக்க:…நானும் ஒரு இட்லி விரும்பி…அப்படியே சாப்பிட்டுவிடுவேன்…)

சரி...இப்பொழுது அனைவருக்கும் இட்லி சத்தான காலை சிற்றுண்டியா இல்லையா என்று புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்....

கொண்டைக்கடலை இட்லி

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 4 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
·         இட்லி அரிசி – 3 கப்
·         கொண்டைகடலை – 1 கப்
·         உளுத்தம் பருப்பு – 1/2 கப்
·         வெந்தயம் – 1 மேஜை கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

செய்முறை :
v  அரிசி + கொண்டைகடலை + உளுந்து , வெந்தயம் எல்லாவற்றினையும் தனி தனியாக ஊறவைக்கவும்.
v  ஊறவைத்த பொருட்களை, மாவாக அரைத்து கொள்ளவும்.
v  அரைத்த மாவினை சுமார் 6 – 8 மணி நேரம் புளிக்கவைக்கவும்.
v  பிறகு மாவினை, இட்லி தட்டில் ஊற்றி வேகவிடவும். சுவையான சத்தான இட்லி ரெடி.

இட்லி சத்தான காலை சிற்றுண்டியா????..


இட்லியினை பற்றிய உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கவும்…என்னுடய அடுத்த பதிவில் இட்லியினை பற்றிய சில தகவல்களுடன் வருகிறேன்…நன்றி

சிங்ககுட்டி கொடுத்த அவார்ட். நன்றி சிங்ககுட்டி.

ஸாதிகா அக்கா, மேனகாசத்யா கொடுத்த அவார்ட்..நன்றி ஸாதிகா அக்கா..நன்றி மேனகா


டோஃபு பொடிமாஸ் - Tofu Podimas

டோஃபுவில் அதிக அளவு Magnesium, இரும்பு சத்து, புரோட்டின், கல்சியம் சத்துகள் இருக்கின்றது. இதனை பன்னீருக்கு பதிலாக உபயோகிக்கலாம்.
சோயாவின் பாலில் இருந்து எடுக்கபடுவது தான் டோஃபு. டோஃபுவினை soft tofu, silken tofu, firm tofu, Extra firm tofu என பலவகைகளில் கிடைக்கின்றது.
சமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         டோஃபு – 1 பக்கட்
·         வெங்காயம் – 2 பெரியது
·         பூண்டு – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சீரக தூள் – 1 தே.கரண்டி

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்புதேவைக்கு

செய்முறை :


v  டோஃபுவுடன் + மஞ்சள் தூள் + மிளகாய் தூள் + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
v  பூண்டு + வெங்காயம் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.


v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும், கடுகு தாளித்து பூண்டினை சேர்க்கவும்.
v  பூண்டு வதங்கியதும், வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.


v  பின்னர், டோஃபுவினை இத்துடன் சேர்த்து நன்றாக 10 – 15 நிமிடங்கள் வதக்கவும்.
v  கடைசியில் சீரக தூள் சேர்த்து மேலும் 1 – 2 நிமிடங்கள் வதக்கிவும். இதனை சுடாக பரிமாறவும். சுவையான சத்தான டோஃபு பொடிமாஸ் ரெடி.

பார்லி ஆறுசுவை சாலட்- Barley Saladஇந்த சாலடில் ஆறு வகையான சுவைகளையும் சேர்த்து செய்து இருப்பதால், மிகவும் அருமையாக இருக்கும்…ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் விதவிதமான சுவையினை சாப்பிடும் பொழுது நாம் உணரலாம்..

·         இனிப்பு சுவை – மாம்பழம்
·         புளிப்பு சுவை – எலுமிச்சை சாறு
·         கசப்பு சுவை – எலுமிச்சை தோல்
·         துவர்ப்பு சுவை – அவகோடா
·         உவர்ப்பு சுவை – உப்பு
·         கார சுவை – பச்சை மிளகாய்

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த பார்லி – 1 கப்
·         மாம்பழம் – 1
·         அவகோடா – 1
·         எலுமிச்சை பழம் – 1
·         கொத்தமல்லி , புதினா – சிறிதளவு
·         பச்சைமிளகாய் – 1
·         உப்பு – தேவைக்கு

செய்முறை :

v  மாம்பழம் + அவகோடாவினை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

v  எலுமிச்சைபழத்தில் இருந்து மேல் தோலினை சிறிது துறுவி கொண்டு, பிறகு அதில் இருந்து சாறினை எடுத்து வைக்கவும்.

v  கொத்தமல்லி + புதினா + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி வைக்கவும்.

v  வேகவைத்த பார்லி + மாம்பழம், அவகோடா துண்டுகள் + எலுமிச்சை தோல் + எலுமிச்சை சாறு + கொத்தமல்லி,புதினா, பச்சைமிளகாய் + உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

v  சுவையான சத்தான சாலட் ரெடி. இதனை சிறிது நேரம் ப்ரிஜில் வைத்து குளிர்சியாக பரிமாறினால், கூடுதல் சுவையாக இருக்கும்.

பார்லி பருப்பு அடை & தாளித்து அரைத்த தேங்காய் சட்னி - Barley Paruppu Adai & Coconut Chutney - Side Dish for Idly and Dosa - Barley Indian Recipe


சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 3 மணி நேரம்
தேவையான பொருட்கள் :     
·         பார்லி - 2 கப்
·         கடலை பருப்பு – 1/4 கப்
·         துவரம் பருப்பு – 1/4 கப்
·         பாசிப்பருப்பு – 1/4 கப்
·         உளுத்தம் பருப்பு -1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 4
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         உப்பு, எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க  வேண்டிய பொருட்கள் :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         சின்ன வெங்காயம் – 6
·         கருவேப்பில்லை – 4 இலை

செய்முறை :
v  பார்லி + கடலை பருப்பு, துவரம் பருப்பினை ஒரு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும். உளுத்தம் பருப்பு + பாசிப்பருப்பினை தனி தனியாக இரண்டு பாத்திரத்தில் போட்டு ஊறவைக்கவும். குறைந்த்து 2 – 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

v  வெங்காயத்தினை பொடியாக நறுக்கி வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து வைத்து கொள்ளவும்.
  
v  பார்லி + காய்ந்த மிளகாய் + கடலை பருப்பு,துவரம் பருப்பினை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அடைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். உளுத்தினை மைய அரைத்து கொள்ளவும்.

v  பார்லி மாவு + உளுத்தம் மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாவுடன், தாளித்த பொருட்கள் + உப்பு + தேங்காய் துறுவல் + பாசிபருப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v  கலந்த மாவினை, மெல்லிய அடைகளாக சுடவும்.v  சுவையான சத்தான பார்லி பருப்பு அடையினை சட்னியுடன் பரிமாறவும்.


தாளித்து அரைத்த தேங்காய் சட்னி
பொதுவாக நாம் எப்பொழுதும் சட்னியினை அரைத்த பின்பு தாளிப்பு சேர்ப்போம். ஒருமுறை, தாளித்த பொருட்களையும் சட்னியின் சேர்த்து அரைத்து பாருங்கள்…மிகவும் சூப்பராக சுவையாக இருக்கும்…

சமைக்க தேவைப்படும் நேரம் : 3 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தேங்காய் துறுவல் – 1/4 கப்
·         காய்ந்த மிளகாய் – 3
·         உப்பு - தேவைக்கு
தாளித்து சேர்க்க :   
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :
தேங்காய் துறுவல் + காய்ந்தமிளகாய் + உப்பு + தாளித்த பொருட்கள் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும். சுவையான சட்னி ரெடி.

பீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் & சிவப்பு தேங்காய் சட்னி - Perkankai /Ridge Gourd Oats Paniyaram and Red Coconut Chutney - Side Dish for Idly and Dosa - Oats Indian Recipe


பீர்க்கங்காயில் அதிக அளவு நார்சத்து (Dietary Fiber), விட்டமின் C, விட்டமின் B1(Vitamin B1), இரும்பு சத்து காணப்படுகின்றது.

பீர்க்கங்காய் உடலுக்கு அதிக குளிர்ச்சி என்பதால் இதனை இரவில் சாப்பிட தவிர்ப்பது நல்லது.

பீர்க்கங்காயில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால், உடல் எடையினை குறைக்க விரும்புவோர் இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         உப்பு , எண்ணெய் - தேவைக்கு

தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         சீரகம் – 1 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
·         பீர்க்கங்காய் பொடியாக நறுக்கியது – 1 கப்
·         பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கி கொள்ளவும்)

செய்முறை :
v  ஒட்ஸினை 5 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து பின், மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு + சீரகம் தாளித்து, உளுத்தம் பருப்பினை சேர்த்து வறுத்து கொள்ளவும். அத்துடன், பீர்க்கங்காய் + பச்சைமிளகாயினை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

v  வதக்கிய பொருட்கள் + அரைத்த ஒட்ஸ் + தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

v  குழிபணியார கடாயில், பணியாரங்களாக சுடவும்.

v  சுவையான சத்தான பீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.

சிவப்பு தேங்காய் சட்னி

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         தேங்காய் – 1/2 கப்
·         காய்ந்த மிளகாய் – 3
·         பூண்டு – 2 பல்
·         உப்பு – தேவைக்கு
கடைசியில் தாளித்து சேர்க்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         உடைத்த உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
·         கருவேப்பிலை – 4 இலை
·         பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

v  தேங்காய் + காய்ந்த மிளகாய் + பூண்டு + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

v  தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் கடைசியில் சேர்க்கவும். சுவையான சிவப்பு தேங்காய் சட்னி ரெடி.

புதினா துவையல் - Mint Leaves / Pudina Thuvayal

புதினாவில் பலவிதமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. புதினாவினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்,
·         ஜீரணம் எளிதில் செய்ய உதவுகின்றது.
·         பசியினை தூண்டுகின்றது.
·    இரத்ததினை சுத்தம் செய்து உடலினை ஆரோக்கியத்துடன் இருக்க செய்கின்றது.
·    வாய் தூற்நாற்றத்தினை அகற்றுகின்றது…(பல Chewing Gums புதினா சேர்த்து இருப்பதை பலரும் கவனித்து இருப்போம்…)
·         உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

புதினாவில், அதிக அளவு நார்சத்து, விட்டமின்ஸ் ஏ & சி(Vitamins A & C) காணப்படுகின்றது. அத்துடன், பிரோட்டின்(Protien), விட்டமின் பி1(Vitamin B1 - Thiamin), விட்டமின் பி3(Vitamin B3 – Niacin), விட்டமின் பி6 (Vitamin B6) மற்றும் Calcium, Iron, Phosphorous, Zinc போன்றவை இருக்கின்றது. புதினாவில் கொழுப்பு சத்து மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவு.

விட்டமின்ஸ் B1, B3, B6 மற்றும் விட்டமின் C தண்ணீரில் கரையும் விட்டமின்ஸ்(Water Soluble Vitamins) என்பதால், இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது இதனை சாப்பிடுவது மிகவும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

உடல் எடையினை குறைக்க விரும்புவோர் புதினாவினை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

சரி, புதினாவினை பற்றி சிறிதளவு தெரிந்து கொண்டோம்..புதினாவை வைத்து நான் செய்து புதினா துவையலினையும் செய்து பார்த்து கருத்தினை தெரிவிக்கவும்.

பொதுவாக, புதினாவினை வதக்கி செய்யும் துவையல் மிகவும் ருசியாக சுவையாக இருக்கும்..ஆனால், புதினா வதக்கி செய்வதால் அதில் உள்ள சத்துகள் குறைந்துவிடுகின்றது…அதனால் புதினாவினை வதக்கி செய்வதினை தவிர்பது நல்லது….

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         சுத்தம் செய்த புதினா இலை – 1 கப்
·         கொத்தமல்லி + கருவேப்பில்லை – 1 கப்
·         தேங்காய் துறுவல் – 1/4 கப் (விரும்பினால் சேர்க்கவும்)
·         புளி, இஞ்சி – சிறிதளவு
·         உப்பு – தேவையான அளவு
வறுத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         கடுகு – 1/2 தே.கரண்டி
·         உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
·         கடலை பருப்பு – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 4
·         பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
·         எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை :
v  புதினா + கொத்தமல்லி + கருவேப்பில்லை சுத்தம் செய்து கொள்ளவும்.
v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு + கடலை பருப்பு + காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
v  வறுத்த பொருட்கள் + புதினா + கொத்தமல்லி ,கருவேப்பில்லை + தேங்காய் துறுவல் + புளி, இஞ்சி + உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
v  சுவையான சத்தான புதினா துவையல் ரெடி.இதனை தயிர் சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...