சுறாமீன் ஒட்ஸ் கட்லட் - Fish Oats Cutletsஇந்த சுறாமீன் ஒட்ஸ் கட்லட் மிகவும் அருமையான டயட் ஸ்நாக் என்று சொல்லலாம். சுறாமீனில் பொதுவாக மீன் வாசம் அவ்வளவாக வராது என்பதால், கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.

கொடுத்துள்ள அளவின்படி, சுமார் 12 கட்லட்டுகள் வரும்.

பரிமாறும் அளவு (Serving Size) : 3 கட்லட்

பரிமாறும் அளவில் இருக்கும் கலோரிஸ்(Serving per Calories) : சுமார் 225 - 250 கலோரிஸ்

சமைக்க தேவைப்படும் நேரம் : 25 - 30 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

• சுறாமீன் – 1/2 கிலோ

• ஒட்ஸ் – 1 கப்

• வெங்காயம் – 1 பெரியது

• பச்சை மிளகாய் – 3

• பொடியாக அரிந்த பூண்டு + இஞ்சி – 2 தே.கரண்டி

• புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

• மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

• எண்ணெய் – சிறிதளவு

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :

• சோம்பு தூள் – 1 தே.கரண்டி

• சீரக தூள் - 1 தே.கரண்டி

• மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

• மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி

• உப்பு – தேவையான அளவு

செய்முறை :

• சுறாமீனை சுத்தம் செய்து, மீன் முழ்கும் அளவு தண்ணீர் + மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் போட்டு வேகவிடவும்.

• சுறாமீன் வெந்ததும் , சிறிய நேரம் ஆறவிட்டு, பிறகு அதனுடைய தோலினை நீக்கிவிட்டு மீனை உதிர்த்து கொள்ளவும்.

• ஒட்ஸினை பொடித்து வைக்கவும். வெங்காயம் + பச்சை மிளகாய் +புதினா, கொத்தமல்லியினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


• உதிர்த்த சுறாமீன் + பொடித்த ஒட்ஸ் + நறுக்கிய பொருட்கள் + தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.


• அதனை சிறிய சிறிய கட்லட்டாக தட்டி வைக்கவும்.தோசை கல்லினை காயவைத்து அதில் இந்த கட்லடினை போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

• ஒருபக்கம் நன்றாக சிவந்த பிறகு கட்லடினை திருப்பிபோட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.

• சுவையான சத்தான சுறாமீன் ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிடு சூப்பராக இருக்கும்.

குறிப்பு :

பொதுவாக கட்லடினை செய்யும் பொழுது எப்பொழுதும் உருளைகிழங்கு சேர்த்து செய்வோம்..உருளைகுழங்கு சாப்பிட்டால் வெயிட் போடும் என்பதால், உருளைகிழங்குக்கு பதிலாக ஒட்ஸ் சேர்த்து இருக்கின்றேன்.

கட்லடினை எப்பொழுதும் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து செய்வோம்…அதனையும் இதில் தவிர்த்து இருக்கின்றேன். (வேண்டுமானால் ஒட்ஸினை கொரகொரப்பாக பொடித்து பிரட் தூளிற்கு பதிலாக உபயோகிக்கலாம்.)

கவனிக்க: இதில் கொடுத்துள்ள கலோரிஸ் அளவு சிறிது கூடியோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். கலோரியினை அனைத்து பொருட்களின் அளவில் கணக்கு எடுத்து இருக்கின்றேன். கலோரியினை எழுதலாம் என்று என்னுடைய சிறிய மூயர்ச்சி…நன்றி

20 comments:

Mrs.Menagasathia said...

சூப்பர்ர்ர்...அப்படியே எடுத்து சாப்பிடனும்ப்போல் இருக்கு..அடுத்த வாரம் எடுத்துக்குறேன்...

Mrs.Menagasathia said...

கலோரி முயற்சிக்கு வாழ்த்துக்கள்!!

Chitra said...

Is it the regular uncooked oats? interesting.......
I usually try the fish cutlets with salmon as I don't get shark/sura here. Will give it a try next time, with oats. Thank you.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...இதில் நான் உபயோகித்து இருப்பது Regular Uncooked Oats தான்...நன்றி...

SathyaSridhar said...

Geetha,,,Sura meen cutlet rombhavum arumai athuvum oats ah payan paduthi senyum murai rombhavum udalukku nallathu,,ella vayathinarum saapdum cutlet...Geetha,,,oru vishayam thappa ninaikalenna enakku uthavi seiya mudiyuma,,,eppadi inga tamil la type pannanum konjam sollungalaen,,,rombavum nandri Geetha.

Shobana senthilkumar said...

Geetha..eppudi irrukenga..romba naalachu...cutlet superaa irruku:)

Valarmathi said...

Cutlet looks absolutely delicious, healthy one, looks tempting.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சத்யா...ஆமாம்..ஒட்ஸ் சேர்ப்பதால் கண்டிப்பாக நல்ல டயட் உணவகாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடியதாக இருக்கின்றது.

நான் தான் ekalappai உபயோகிக்கின்றேன்...தமிழ் fonts என்று net தேடி பாருங்கள் ...கிடைக்கும்.அதனை download செய்து கொண்டால் சுலபமாக டைப் செய்யலாம். நன்றி

Kanchana Radhakrishnan said...

present Geetha

sarusriraj said...

me too present geetha

Pavithra said...

Even though I dont eat this..they looks so good and tempting geetha.

Gita Jaishankar said...

Cutlets look so tempting...very healthy and innovative :)

Shama Nagarajan said...

delicious cutlet

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சோபனா...நாங்க எல்லோரும் நன்றாக இருக்கின்றோம்..நீங்க எப்படி இருக்கின்றிங்க....இந்தியா பயணம் என்பதால், சில மாதங்கள் நானும் ப்ளாக் பக்கம் வரவில்லை...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி வளர்மதி...நன்றி கஞ்சனா...நன்றி சாரு அக்கா..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா..நன்றி கீதா...நன்றி ஷாமா...

Priya said...

Wat a healthy cutlet..adhuvum sura meenla..pakkura pothey pasikuthu..

asiya omar said...

cute cutlet,parcel please...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...நன்றி ஆசியா அக்க...பர்சல் அனுப்பிவிடுகிறேன்...சீக்கிரத்தில் கிடைத்துவிடும்..நன்றி..

Related Posts Plugin for WordPress, Blogger...