கேழ்வரகு பார்லி புட்டு - Ragi Barley Puttuமிகவும் சத்தான புட்டு.
சமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கேழ்வரகு மாவு – 1 கப்
·         பார்லி மாவு – 1 கப்
·         தேங்காய் துறுவல் – 1/2 கப்
·         சக்கரை – 3/4 கப்
·         நெய் – 2 மேஜை கரண்டி
·         ஏலக்காய் – 2 (பொடித்து கொள்ளவும்)
·         உப்பு – 1/4 தே.கரண்டி
செய்முறை :
·         கேழ்வரகு மாவு + பார்லி மாவு + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவினை புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். இதனை துணியில் கட்டி, இட்லி பானையில் ஆவியில் வேகவிடவும்.
·         மாவு வெந்ததும், அதனை கட்டியில்லாமல் உதிர்த்து கொள்ளவும். இந்த மாவுடன், சக்கரை + ஏலக்காய் + நெய் + தேங்காய் துறுவல் சேர்த்து கலக்கவும்.
·         சுவையான சத்தான கேழ்வரகு பார்லி புட்டு ரெடி.
கவனிக்க :
·         புட்டுமாவினை பிசையும் பொழுது பதம் ஒழுங்காக இருக்கவேண்டும்.அப்பொழுது தான் புட்டு நன்றாக இருக்கும். புட்டுமாவில் தண்ணீர் கூடியோ அல்லது குறைத்தோ இருந்தால் நன்றாக இருக்காது.
·         தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து மாவினை பிசையவேண்டும். பிசைந்த மாவினை கெட்டியாக பிடித்தால் கொழுக்கட்டை மாதிரி பிடிக்கவரவேண்டும். அதே போல, பிடித்த கொழுக்கட்டையினை உடைத்தால், மாவு நன்றாக உதிர வேண்டும். இதுவே சரியான புட்டுமாவு பதம்.
·         இதே போல வெரும் பார்லி மாவிலோ அல்லது கேழ்வரகு மாவிலோ புட்டு செய்யலாம்.

25 comments:

Ammu Madhu said...

super.

Priya said...

Wat a healthy puttu, fantastic Geetha..

Dershana said...

that's an interesting twist to puttu. very good for kids!

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Gita Jaishankar said...

Very interesting and healthy puttu...I am going to try this soon :)

LK said...

நல்ல ஆரோக்கியமான உணவு
http://vezham.presspublisher.us/issue/april-i

Chitra said...

healthy one. Thank you for the recipe.

மன்னார்குடி said...

nice.

கக்கு - மாணிக்கம் said...

one of the best recipe.

Thanks for sharing

sarusriraj said...

வாவ்... ரொம்ப நல்லா இருக்கு கீதா

SathyaSridhar said...

kelviragu barley puttu rombhavum nalla irukku,,Geetha..naanum nethu thaan puttu ennudaya blog la poeten neengalum rombha vithyasamana puttu saththaana putu poetrukeenga,,rombha santhosham Geetha..

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி அம்மு...நன்றி ப்ரியா...நன்றி தர்ஷினி

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா...கண்டிப்பாக செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்...நன்றி கார்த்திக்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா...நன்றி மன்னார்குடி..நன்றி மாணிக்கம்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...நன்றி சத்யா...

Mrs.Menagasathia said...

நல்ல சத்தான புட்டு!! ரொம்ப வித்தியசாம இருக்கு....

ஸாதிகா said...

சகோதரி உங்களுக்கு விருது வழங்கி உள்ளேன் .அன்புடன் நான் அளித்த விருதினை பெற்றுக்கொள்ளவும்.நன்றி! http://shadiqah.blogspot.com/2010/04/blog-post_10.html

asiya omar said...

healthy blog always bring healthy food.its a new proverb just for you.

Shama Nagarajan said...

healthy puttu...hope u love ragi a lot

Anonymous said...

cool one geetha.do visit my blog when you find some time.following you.

Geetha Achal said...

//healthy blog always bring healthy food.its a new proverb just for you.//தங்களுடைய பாரட்டுக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...

Geetha Achal said...

தங்களுடைய அன்பான விருதுக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...

Geetha Achal said...

தங்களுடைய கருத்துக்கு நன்றி ஷாமா...நன்றி ஸ்ரீவிஜி...

Jaleela said...

ரொம்ப நல்ல இருக்கு சத்தான புட்டும், பார்லி முழுசு தான் இருக்கு மிக்சியில் பொடித்தால் முக்கால் பதம் தான் பொடியுது

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா.....//பார்லி முழுசு தான் இருக்கு மிக்சியில் பொடித்தால் முக்கால் பதம் தான் பொடியுது// பார்லியினை மிக்ஸியில் பொடித்தால் அவ்வளவு நன்றாக வராது...மிக்ஸி, பிளேடும் சீக்கிரத்தில் வீணாகிவிடும்...எனக்கு இங்கு பார்லி மாவே தனியாக கிடைக்கின்றது...எனக்கு இந்தியன் கடையில் இந்த மாவு கிடைக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...