வாழைக்காய் பொடிமாஸ் - Raw Banana podimas

வாழைக்காயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் விட்டமின் சி & பி, Potassium மற்றும் Magnesium அதிகமாக காணப்படுகின்றது. இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வாழைக்காய் – 1
·         வெங்காயம் – 1
·         பச்சைமிளகாய் – 2
·         கருவேப்பில்லை – 4 இலை
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         சோம்பு தூள் – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
·         உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :  • ஒரு பாத்திரத்தில் வாழைக்காயினை தோலுடன் போட்டு வேகவைத்து கொள்ளவும். வாழைக்காய் வெந்ததும், அதனை தோலுரித்து, காரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.
  • வெங்காயம் + பச்சைமிளகாய் + கருவேப்பில்லையினை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு தூள் சேர்த்து தாளித்து,பின் நறுக்கிய பொருட்களை + தூள் வகைகள் சேர்த்து நன்கு சுமார் 7 – 8 நிமிடங்கள் வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கி, தூள் வாசனைகள் சென்ற பிறகு, துறுவிய வாழைக்காயினை அத்துடன் சேர்க்கவும் , அனைத்தும் சேருமாறு கிளறி 3 – 4 நிமிடங்கள் வேகவிடவும்.(கவனிக்க: மிகவும் அழுத்தமாக கிளறவேண்டாம்ஒர் இருமுறை கிளறினால் போதுமானது)சுவையான எளிதில் செய்ய கூடிய வாழைக்காய் பொடிமாஸ் ரெடி. இதனை சாம்பார், ரசம், கூட்டு , தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

22 comments:

LK said...

//வாழைக்காயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் விட்டமின் சி & பி, Potassium மற்றும் Magnesium அதிகமாக காணப்படுகின்றது. இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்./

gas trouble unde ????

NIZAMUDEEN said...

சுவையான, சத்தான சமையல் குறிப்பு
என்று நம்புகிறேன்.

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

RAVI said...

migavum arumai.. yen blog-il thangalin iniya tamil illamal english comment parthathum senthamizhay thediyathu..

Shama Nagarajan said...

delicious yummy recipe...

Kanchana Radhakrishnan said...

வாழைக்காயால் வாய்வு தொந்திரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அத தவிர்க்க நான் இஞ்சியைத் துருவி சேர்த்து விடுவேன்.

Nithu Bala said...

arumaya irukku podimas..nandri:-)

Chitra said...

அருமையான ரெசிபி பகிர்வு.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கீதா!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Mrs.Menagasathia said...

அருமையாக இருக்கு கீதா.மிளகாய்த்தூள் சேர்த்து செய்ததில்லை...

Ann said...

Lovely recipe, first time here. you have a wonderful blog.

Geetha Achal said...

//வாழைக்காயில் அதிக அளவு நார்சத்து இருக்கின்றது. இதில் விட்டமின் சி & பி, Potassium மற்றும் Magnesium அதிகமாக காணப்படுகின்றது. இதனை வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்./

gas trouble unde ????//
எதனையும் அளவுடன் சாப்பிட்டால் எந்த தொந்தரவும் இருக்காது...அதனால், தான் வாரத்திற்கு ஒரு முறையாவது என்று குறிப்பிடு இருக்கின்றேன்...விரும்பினால், பெருங்காய்ம சேர்த்து கொள்ளுங்கள்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கார்த்திக்...நன்றி நிஜாம்...நன்றி மன்னார்குடி...நன்றி ரவி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஷாமா...நன்றி கஞ்சனா...நன்றி நிது...நன்றி சித்ரா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி மேனகா...மிளகாய் தூள் சேர்த்து செய்து பாருங்கள்..வித்தியாசமாக இருக்கும். ..... நன்றி மனோ ஆன்டி...உங்களுக்கும் எங்களுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துகள்....

Geetha Achal said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Ann...

sarusriraj said...

நல்லா இருக்கு கீதா மேனகா சொன்ன மாதிரி நானும் மிளகாய் தூள் சேர்த்தது இல்லை அடுத்த முறை டிரை செய்கிறேன்.

Gita Jaishankar said...

This is a new dish for me Geetha...looks interesting and very delicious...I'll try this soon :)

நட்புடன் ஜமால் said...

எனக்கு மிகவும் பிடிக்கும் வாழைக்காய்

நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி சாரு அக்கா...நன்றி கீதா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால்...எப்படி இருக்கின்றிங்க...ரொம்ப நாளாக ப்ளாக பக்கம் பார்க்கமுடியவில்லையே...

Nandy said...

Hi your recipies are very useful to me. Please say how to download this website

Related Posts Plugin for WordPress, Blogger...