இரால் வறுவல் - Shrimp Varuval


சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :
·         இரால் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 2
·         எண்ணெய் – 2 மேஜை கரண்டி
·         சோம்பு தூள் – 1 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு
அரைத்து கொள்ள :
·         தேங்காய் – சிறிதளவு( 2 சிறிய துண்டுகள்)

செய்முறை :

v  இராலினை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.வெங்காயத்தினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.தேங்காயினை நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.

v  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும், சோம்பு தூள் சேர்த்து தாளித்து பின்,வெங்காயம் + தூள் வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.


v  வெங்காயம் நன்றாக வதங்கிய(சுமார் 10 நிமிடம் கழித்து) பின், இராலினை இத்துடன் சேர்க்கவும்.


v  இரால் முக்கால்வாசி வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுதினை இத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.


v  தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும். சுவையான இரால் வறுவல் ரெடி.

 

கவனிக்க:
v  இதில் சோம்பு தூள் தான் முக்கியம்..சோம்பு தூள் சேர்ப்பதால் மிகவும் சுவையாக இருக்கும். அதிக மசாலா பொருட்கள் சேர்க்காத வறுவல்.
v  இந்த வறுவலில் சிறிதும் தண்ணீர் சேர்க்க கூடாது.
v  தேங்காய் அரைக்கும் பொழுது வேண்டுமானால், சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.


பெரிய சைஸ் இரால் என்றால், இரால் பாதிவெந்த பிறகு தேங்காய் விழுதினை சேர்க்கவேண்டும். அதுவே சிறிய சைஸ் என்றால், தேங்காய் விழுதினை இராலுடனே சேர்த்து கொள்ளவும்.

21 comments:

LK said...

escape :)

Porkodi (பொற்கொடி) said...

பதிவை பத்தி என்னால கமென்ட் எதுவும் பண்ண முடியாதுன்னாலும், வடையை பிடுங்க ஒண்ணும் தடை இல்லையே? :)

Jaleela said...

ரொமப் நல்ல இருக்கு நானும் இன்று காலை இறால் வறுவல் தான் இறால், உருளை வறுவல் போட்டோ எடுக்க முடியாமல் போய் விட்டது

Chitra said...

நான் சீரகத் தூள் தான் போட்டு செய்வேன். சோம்பு தூள் சேர்ப்பது புதுசு.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

ஸாதிகா said...

தக்காளி எல்லாம் சேர்க்காமல் செய்து இருக்கின்றீர்கள்.பார்க்கவே நன்றாக உள்ளது

ஜெய்லானி said...

இது எப்போதும் என் ஃபேவரைட். ரொம்ப பிடிக்கும்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

படத்துடன் அசத்தல் குறிப்புகள் முடிஞ்சா பார்சல் அனுப்புங்க அக்கா ..

Mrs.Menagasathia said...

நல்ல கலரா சூப்பராக இருக்கு!!

sarusriraj said...

பார்வையிட்டேன்

Priya said...

Slurp, tempting varuval...paathathume pasikuthu:)..

Shama Nagarajan said...

delicious varuval...yummy recipe

Geetha Achal said...

கார்திக்...நீங்க escape ஆனால், விடமோட்டோம்...உங்கள் குழந்தை so cute...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி பொற்கொடி..நன்றி ஜலிலா அக்கா...நன்றி சித்ரா...

Geetha Achal said...

தக்காளி சேர்க்காமல் செய்ததால், மிகவும் சூப்பராக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்க ஸாதிகா அக்கா...நன்றி ஜெய்லானி...

Geetha Achal said...

ஸ்ரீ...உங்கள் பர்சல் அனுப்பியாச்சு...நன்றி...நன்றி சாருஅக்கா...நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா...நன்றி ஷாமா...

Ann said...

Looks yummy! MY Dh is looking at this page now and tellin me to cook this NOW!! and I'm thinking about self inviting myself to your place.. heh heh.

Priya said...

eral varuval super ah eruku geetha..

Geetha Achal said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ann...நன்றி ப்ரியா...

கொயினி said...

கீதா தக்காளி இல்லாமல் இறால் வறுவல் செய்து இருக்கீங்க.அது எனக்கு ரொம்பவும் டிஃப்ப்ரென்டா இருந்தது.நேற்றுதான் நீங்க செய்வதை போல செய்து பார்க்கலாம்னு செய்தேன் ..சோம்பு தூள் சேர்ப்பதும் நல்ல மனம் இருந்தது.சப்பாத்திக்கு சைடாக வைத்தேன்.ரொம்ப நன்றாக இருந்தது.நன்றி.ஒரே மாதிரியாக செய்வது போய் வேறு ஒரு மெதட் கற்றுக்கொடுத்திருக்கீங்க.நன்றி.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு நன்றி கொயினி...சமைத்த பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிகவும் மகிழ்ச்சி...நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...