க்ரிட்ஸ் இட்லி & ஹோட்டல் தேங்காய் சட்னி - Grits Idly & Hotel Coconut Chutney - Grits Indian Recipe / Idly Varieties - Side Dish for Idly & Dosai
Posted by
GEETHA ACHAL
at
Thursday, May 20, 2010
Labels:
இட்லி - Idly,
சட்னி - Chutney,
பருப்பு வகைகள் - தானியங்கள்,
ஹோட்டல் ஸ்டைல் - Hotel Style Cooking
நன்றாக காய்ந்த சோளத்தினை ரவை போல உடைத்தால் கிடைப்பது தான் க்ரிட்ஸ்(Grits). இதனை அமெரிக்காவில் பெரிதும் காலை நேர உணவாக பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக சோளத்தில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber) இருப்பதால், க்ரிட்ஸ் உடலிற்கு மிகவும் நல்லது….
ஒரு மனிதன் தினமும் குறைந்தது 20 கிராம் நார்சத்து அடங்கிய உணவினை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் எடை ஏறாமலும், கொலஸ்டிரால் அளவு, சக்கரை அளவு எல்லாம் கட்டுபாட்டில் இருக்கின்றது.
உடல் எடையினை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக அதிக அளவு நார்சத்து உள்ள உணவினை சாப்பிட வேண்டும். குறைந்தது 35 – 40 கிராம் நார்சத்தினை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.
Dietary Fiberயில் இரண்டு வகை இருக்கின்றது… Soluble Fiber மற்றும் Insoluble Fiber. இந்த இரண்டுமே உணவில் சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.
நார்சத்து அடங்கிய உணவினை சாப்பிடுவதால் கலோரிஸ் எப்படி கணக்கிடபடுகின்றது???...இதற்கும் உடல் எடை குறைவதற்கும் என்ன சம்மந்தம்????? என்பதினை பற்றி என்னுடய பின்வரும் பகுதிகளில் தெளிவாக நாம் பார்க்கலாம்….
சரி…சரி..இப்பொழுது இட்லிக்கு வருவோம்….
க்ரிட்ஸ்(Grits) இட்லி
சமைக்க தேவைப்படும் நேரம் : 10 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· க்ரிட்ஸ் – 2 கப்
· உளுத்தம் பருப்பு – 1/4 கப்
· வெந்தயம் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
· உளுத்தம் பருப்பு + வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து அதனை மைய அரைத்து கொள்ளவும்.
· அரைத்த உளுத்தமாவு + க்ரிட்ஸ் + உப்பு + சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்திற்கு கலக்கவும்.
· கலந்தமாவினை இட்லிக்கு புளிக்கவைப்பது போல, குறைந்தது 5 மணி நேரம் புளிக்கவைத்து இட்லி சுடவும்.
· சுவையான சத்தான க்ரிட்ஸ் இட்லி ரெடி.
ஹோட்டல் தேங்காய் சட்னி
சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· தேங்காய் – 1/4 மூடி
· பொட்டுகடலை – 1/4 கப்
· புளி – சிறிதளவு
· கொத்தமல்லி – சிறிதளவு
· பச்சைமிளகாய் – 4
· உப்பு – தேவைக்கு
கடைசியில் தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 2 தே.கரண்டி
· கடுகு – தாளிக்க
· உடைத்த உளுத்தம் பருப்பு – 1/2 தே.கரண்டி
· கருவேப்பில்லை – 5 இலை
· பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
· தேங்காயின் மேல் உள்ள தோல்பகுதியினை நீக்கிவிடவும் . முதலில் மிக்ஸியில் பொட்டுகடலை + பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். அதன் பிறகு தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
· பிறகு புளி + கொத்தமல்லி + உப்பு சேர்த்து அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான ஹோட்டல் சட்னி ரெடி.
Subscribe to:
Post Comments (Atom)
சிற்றூண்டி – Breakfast
62 comments:
வாவ்..இட்லி சூப்பரா இருக்கு!கீதா,உங்களால நிறைய புது புது திங்க்ஸ் தெரிஞ்சுக்கறேன்..சூப்பர் மார்க்கெட்ல இந்த க்ரிட்ஸ் எந்த செக்ஷன்ல இருக்கும்?
அப்புறம் பர்ல் பார்லி வாங்கிருக்கேன்..அதை அரிசி ஊறவைத்து அரைக்கிற மாதிரி அரைத்து இட்லி/தோசை செய்யலாமா? கொஞ்சம் சொல்லுங்க..நன்றி!
க்ரித்ஸ் இந்தியால கிடைக்குமா ???
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி....எதோ எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் சந்தோசம்...
இதனால் பலருக்கும் பயன்படுகின்றது என்பதில் சந்தோசம்...நன்றி...
இதனை நான் வால்மார்டில் தான் வாங்கினேன்...ஆனால் கரெக்டாக எந்த செக்ஷ்ன் என்று நினைவில்லை...பொதுவாக
ஒட்ஸ் இருக்கும் sectionயில் தேடி பாருங்கள்...
Pearl barley வாங்கி இருக்கின்றிங்களா...நல்லது...இதனை வைத்து
விதவிதமாக சமைக்கலாம்...என்னுடைய பதிவில் உள்ள பார்லி குறிப்பில்
பல விதமான இட்லி/ தோசை குறிப்பினை கொடுத்து இருக்கின்றேன்...பாருங்கள்...நன்றி மகி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்..இது இந்தியாவில் கிடைக்குமா என்று தெரியவில்லை...
Excellent chutney and idly geetha!loved this version.Idly luks very soft...Hotel chutney super.
Wow geetha i too made this last week.. exactly I did the same way..instead of rice rava i too mixed the grits with urad dhall and it came out soo good... I was very much surprised to see this and my next trial would be like rawa idli type with grits.. hopefully that too will workout.
நல்ல சத்தான பதிவு..
Grits idlies..... wow! super idea!
Will the idlies be as soft as the regular idllies?
Namma regular idly mathiri supera iruku. Grits nu oru company kooda idly mix podaranga...oru confusionoda ulla vanthen. Romba nalla idea...chutneyum, idlyum va va nguthu :)
Haan grits first time kelvi padren ... aana idly superaa irukku ... chutney looks too good too
Geetha,, idli n chutney super combo perfect bfast .Grits vaangi try pannanum dear...unga blog ukku vantha vitha vithamaana idli ya paakalam..
இட்லி சூப்பரா இருக்கு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
I think grit is something I should include in my diet too,thanks for sharing the info and I will sure try this version of chutney for tomorrow as Idlies side :)
சோளரவை இட்லியும்,சட்னியும் சூப்பரோ சூப்பர்.சோளரவையில் வெண்பொங்கல் செய்தேன் டேஸ்ட் ஓரளவுக்கு பரவாயில்லை.இனி இட்லி செய்து பார்க்கனும்....
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா....
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...நீங்களும் செய்து பார்த்திங்களா...சூப்ப்பர்ப்...மிகவும் அருமையாக இருக்கும்....நன்றி...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...
தங்கள் கருத்துக்கு நன்றி சித்ரா....இது நாம் எப்பொழுதும் செய்யும் இட்லி போலவே இருக்கும்...மிகவும் சாப்டாக சூப்பராக இருக்கும்...சூடாக சாப்பிடும் பொழுது சட்னியுடன் கூட இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவோம்...சுவையாக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...
தங்கள் கருத்துக்கு நன்றி மஞ்சு...ஆமாம் பா, இது நாம் எப்பொழுது வீட்டில் செய்யும் இட்லி மாதிரி தான் இருக்கும்..கலரும் அப்படி தான்....கண்டிப்பாக செய்து பாருங்கள்...
தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...
தங்கள் கருத்துக்கு நன்றி சத்யா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...
தங்கள் கருத்துக்கு நன்றி சசி....நன்றி ராஜி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...சட்னி அரைக்கும் பொழுது அனைத்தும் ஒன்றாக சேர்த்து அரைக்காமல் இப்படி ஒன்று அரைத்துபின் அதனுடன் ஒவ்வொன்றாக சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும்...நன்றி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மேனகா...இந்த இட்லி மிகவும் அருமையாக இருக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி மேனகா...
chatni suuper. idlyai paathaaley yennakku namba adappavi thangamani akkathan yabakathukku varaa!...:) hahaha
கரிட்ஸ் இட்லி...சோளமாவுக்கு எங்கே போறது?சட்னி மட்டும் செய்து பார்க்கிறேன்.
நல்ல குறிப்பு கீதாச்சல், நானும் சோளன் மாவில் பலவகி பார்த்துள்ளேன் வாங்கிச் சமைத்ததில்லை இனி செய்திடலாம்.
நல்ல சட்னி, ஆனால் ஏன் பச்சையாக இல்லாமல் வெள்ளையாக இருக்கு? பார்த்ததும் சாப்பிடத்தூண்டுது.
pudhumayana kurippu. nandri
Very innovative and healthy idli Geetha...especially for kids...looks tasty with the coconut chutney :)
அது எங்க எப்ப பாத்தாலும் இட்லிய வட்டமாவே சுடுரிங்க வித்தியாசமா , சதுரமா, செவ்வகமா , ஸ்டார் மாதிரி சுட்டு பாருங்களேன்
Idly super fluffya softa irruku geetha, idlyum, chutneyum pasiya varavaikuthu...awesome!!
Wow thos grits idli looks so soft and yummy. Nice tips and post geetha. Perfect combo.
Geetha, this is such a wonderful recipe..thanks for sharing..
I tried your chow-chow fry and it came out so good..posted today in my blog..thanks :-)
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தக்குடுபாண்டி...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...இது பெரிய departmental கடைகளில் கிடைக்கும்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...நன்றி...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சட்னியில் தேங்காய் தான் அதிகம்...கொத்தமல்லி சிறிதளவு தான் சேர்த்து இருக்கின்றேன்...அதே போல தேங்காயின் மேல் தோலினை நீக்கிவிட்டு செய்வதால் வெள்ளையாக இருக்கும்..நன்றி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நன்றி ப்ரியா...நன்றி shriya...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மங்குனி...இனிமேல் சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ அல்லது ஸ்டார் வடிவில் செய்துவிட்ட போகுது...நன்றி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிது..செளசெள வருவலினை செய்து பார்த்தமைக்கு மிகவும் நன்றி...
http://www.ammuseasycooking.com/2010/05/blog-post_21.html
please check out the above link.
இட்லி பார்க்கவே ரொம்பவும் அருமையாக இருக்கிறது, கீதா! மிருதுவாக இருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. வழக்கம்போல சத்தான குறிப்பு போட்டதற்கு மறுபடியும் பாராட்டு!
சோள ரவையில் இட்லியா?புதுசு தான்
இதை சூப்புக்கு தான் பயன் படுத்திஉள்ளேன்.
க்ரிட்ஸ் இட்லியும் பஞ்சுபோல் இருக்கே,சட்னியும் சூப்பர்.
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
மிகவும் நன்றி அம்மு...நன்றாக இருக்கின்றது...
தங்கள் அன்பான பாரட்டிற்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மனோ ஆன்டி. நன்றி
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜலிலா அக்கா...மிகவும் அருமையாக இருக்கும்...செய்து பாருங்கள்...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...
விருதுக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...
விருதுக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...
உங்க பதிவுகளை அறுசுவையில் பாத்திருக்கேன். இப்போதான் உங்க வலைப்பூவை பாக்கிறேன். உங்க பேரை வச்சு வட இந்தியர் எப்படி நம்ம ஊர் சமையல் செய்யறீங்கன்னு ஒரே ரோசனை. அந்த ரகசியத்தை சொல்லிடுங்க. அப்படியே இட்லி சட்னியோட அந்த தட்டையும் இந்த பக்கமா அனுப்பி வக்கிறது?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி அன்னு...இனிமேல் அடிக்கடி வரவேண்டும்...வட இந்தியர் என்று நினைவிட்டீர்களா...அது எல்லாம் இல்லை...எதோ கொஞ்சம் தத்தகாபித்தகா இந்தி தான் தெரியும்..அத தவிர தமிழ் தான்...இட்லியினை சட்னியுடன் பார்சல் அனுப்பிவிட்டேன்...
விதவிதமா இட்லி செய்து அசத்துறீங்க!! உங்க ஓட்ஸ்-ரவா இட்லி மட்டும்தான் இப்பத்திக்கு அடிக்கடி செஞ்சுகிட்டிருக்கேன். மத்த இட்லிகள் ஆசையத் தூண்டினாலும், ரிஸ்க் எடுக்க பயமாருக்கு. சாதாரண இட்லியே சில சமயம் காலைவாரும்!! அவ்ளோ திறமை எனக்கு சமையல்ல!! ;-))
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஹுஸைனம்மா...ஒட்ஸ்-ரவா இட்லி செய்றிங்க என்பதில் மிகவும் மகிழ்ச்சி...அதே மாதிரி இதுவும் செய்து பாருங்கள்...நன்றாக வரும்...//அவ்ளோ திறமை எனக்கு சமையல்ல!! ;-))//இப்படி செல்றவங்க தான் உண்மையில் சூப்பராக சமைப்பாங்க......
Thanks Geetha for the information .Now I know what grits is - but in India we do not get all that .
mam your receipes very nice mam your receipe in arusuvai also very nice. ramani
நன்றி ரமணி...
all i can say is a wow...great recipe
hi geetha mam,
iam really a great fan of ur website... i used to try many items in ur site and came well also.
i have one doubt.. my friends says that used dry coconut id good compared to fresh one. and also they say it doesnt contain cholestrol. is it true...??? please help me..
நன்றி உமா...ரொம்ப மகிழ்ச்சி ...
காய்ந்த தேங்காய் அல்லது fresh தேங்காய் என்று எதனை உபயோகித்தாலும் அதனுடைய கொழுப்பின் அளவே அல்லது சத்துகளே குறைவதில்லை...
என்ன fresh coconut, dry coconutவினை விட டேஸ்ட் சூப்பராக இருக்கும்..
நானும் பெரும்பாலும் காய்ந்த தேங்காயினை தான் உபயோகிக்கிரேன்...மற்றபடி இரண்டிலும் கொலஸ்டிரல் அளவு சமமே...
there are two types of Gritz...?oatmeal and cornmeal? can I use both? or only corn Gritz?
Thanks
நன்றி அனானி...நான் இதில் பயன்படுத்தி இருப்பது Cornmeal....
Post a Comment