கொள்ளு உருண்டை குழம்பு - Kollu / Horsegram Urundai Kulambu
ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         கடுகு  - தாளிக்க

கரைத்து கொள்ள :
·   புளி – சிறிய எலுமிச்சை பழம் அளவு
·   தண்ணீர் – 4 கப்

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         தனியா தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு – தேவையான அளவு

உருண்டைகள் செய்ய :
·         கொள்ளு – 1 கப்
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 1
·         வெங்காயம் – 1 சிறியது
·         உப்பு – 1 தே.கரண்டி
செய்முறை :
உருண்டைகள் செய்ய :
·      கொள்ளினை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து அதனை சோம்பு + காய்ந்த மிளகாய் + உப்பு சேர்த்து கொரகொரவென அரைத்து கொள்ளவும்.
·      வெங்காயத்தினை பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்க்கவும்.
·      சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி அதனை 5 - 6 நிமிடங்கள் வேகவிடவும்.
·      உருண்டைகள் ரெடி. (கவனிக்க : உருண்டைகளை நன்றாக வேகவிடாமல் முக்கால்வாசி வேகவிடவும்..குழம்பிலும் சிறிது வேகவிடவேண்டும் என்பதால் 3/4 வெந்தால் போதும்.) (மாலை நேர ஸ்நாகாகவும் சாப்பிட விரும்பினால் இதனை குறைந்தது 10 நிமிடங்கள் வேகவிடவும். )
உருண்டை குழம்பு செய்ய :
·         வெங்காயம் + தக்காளியினை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியினை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
·         கரைத்த புளியுடன் தூள் வகைகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + வெந்தாயம் சேர்த்து தாளித்து, வெங்காயம் + கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
·         வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியினை போட்டு 1 நிமிடம் வதக்கி அதனுடன் புளி கரைசலினை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
·         வேகவைத்த உருண்டைகளை குழம்பில் சேர்க்கவும். (1 உருண்டையினை நன்றாக உதிர்த்து குழம்பில் சேர்த்தால் குழம்பு கொட்டியாக இருக்கும்.)
·         குழம்பினை மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வைக்கவும். சுவையான சத்தான கொள்ளு உருண்டை குழம்பு ரெடி.

குறிப்பு :
கொள்ளு உருண்டைகளை தனியாக வேகவைக்காமல் கொதிக்கும் குழம்பிலேயே போட்டும் வேகவைக்கலாம்…அப்படி செய்யும் குழம்பு கூடுதல் சுவையுடன் இருக்கும்.

31 comments:

LK said...

பருப்பு உருண்டை போட்டு பண்ணுவாங்களே அதே மாதிரிதான ??

Premalatha Aravindhan said...

Very innovative,Very tempting.Yummy khuzhambu...

Life is beautiful!!! said...

Geetha, superb recipe. Unga creationa ille unga veetla seivagala ? Naan kelvi pattathe ille. Kuzhambu photos romba arumai :)

Pavithra said...

Nice idea of using horse gram instead of toor dhal geetha ..very healthy too.. surely will make urundai with horse gram next time.

Chitra said...

totally new recipe for me. Thank you very very much. :-)

ஜெய்லானி said...

சாப்பிட்டு விட்டு நல்லா தெம்பா ஓடலாம்..ஹி..ஹி..

நட்புடன் ஜமால் said...

உடலுக்கு மிக நல்லது தானே இது :)

மிக்க நன்றி.

Priya said...

Romba puthumaiyana urundai Geetha, ungalala mattum than ithu madhri ellam samaika mudiyum...Wat a dish..

ஸாதிகா said...

பார்லி,ஓட்ஸ்,சிகப்புஅரிசி,கொள்ளு போன்ற அதிகம் உபயோகிக்கபடாத உணவுப்பொருட்களை வைத்து புதிது புதிதாக சமயல் ரெசிப்பி தரும் கீதாஆச்சலுக்கு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

கொள்ளு உருண்டை குழம்பு செய்து அசத்திட்டீங்க.ஸாதிகாக்கா சொன்னதையே வழிமொழிகிறேன்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கார்த்திக்...பருப்பு உருண்டை குழம்பு மாதிரியே தான்...நான் கொள்ளுவில் செய்து இருக்கின்றேன்...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மஞ்சு...இது எல்லாம் நான் புதுசு...புதுசா ட்ரை செய்வது தான்...நன்றி....

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பவித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...கடலைபருப்பினை உபயோகிப்பதினைவிட கொள்ளுவினை சேர்த்தால் உடலிற்கு மிகவும் நல்லது...நன்றி...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...கண்டிப்பாக செய்து பாருங்கள்...

Geetha Achal said...

//சாப்பிட்டு விட்டு நல்லா தெம்பா ஓடலாம்..ஹி..ஹி.//ஆமாம் ஜெய்லானி...சூப்பராக மராத்தான் கூட ஓடலாம்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால்...ஆமாம் இது உடலிற்கு மிகவும் நல்லது...செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்...நன்றி...

Geetha Achal said...

//பார்லி,ஓட்ஸ்,சிகப்புஅரிசி,கொள்ளு போன்ற அதிகம் உபயோகிக்கபடாத உணவுப்பொருட்களை வைத்து புதிது புதிதாக சமயல் ரெசிப்பி தரும் கீதாஆச்சலுக்கு வாழ்த்துக்கள்//தங்களுடைய அன்பான பாரட்டிற்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கும் பாரட்டிற்கும் மிகவும் நன்றி மேனகா...

vanathy said...

Geetha, very healthy and looks very delicious.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி...

Gita Jaishankar said...

Very healthy dish Geetha...great idea to use kollu instead of regular paruppu...looks superb too :)

யாதவன் said...

வாழ்த்துக்கள்

Mahi said...

வெற்றிகரமா மறக்காமல், கடைல இருந்து கொள்ளு வாங்கிட்டு வந்துட்டேன்..வீட்டுல கொண்டு வந்து வைச்சதோடு மறந்துட்டேன்..நல்லவேளை,ஞாபகப்படுத்திட்டீங்க கீதா! குழம்பு நல்லா இருக்கு.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கீதா...நன்றி யாதவன்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மகி...இப்படி தான் நானும் பலமுறை எதாவது வாங்கமட்டும் மறக்காமல் இருக்கும்பொழுது...அதனை சமைக்க மட்டும் மறந்துவிடுகிறேன்...என்னத செய்ய...சில சமயம் இப்படி தான்...கண்டிப்பாக செய்து பாருங்கள்...சூப்பராக இருக்கும்...

asiya omar said...

புதுசு புதுசாக செய்து அசத்துறீங்கபா.பார்க்க ரொம்ப அருமையாக இருக்கு.

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...

Uma said...

super blog geetha...ennoda blogayum sattru parthu suggestion sollavum:)new to bloggong

Endrum anbudan,
Uma

Deepasri said...

kollu urundai kuzhambu seithu parthen migavum nandraga irunthanthu.

சூரியா said...

வரும் சனிக்கிழமை இந்த சமையலை செய்து ருச்சிக்கணும் !!! சத்தான சைவ சமையல். .. நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...