ஹோட்டல் பீன்ஸ் பொரியல் - Hotel Beans Poriyal

சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்

தேவையான பொருட்கள் :

·         பீன்ஸ் – 1/4 கிலோ
·         வெங்காயம் – 1 பெரியது
·         கருவேப்பில்லை – 4 இலை
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – தாளிக்க
·         சீரகம் – 1 தே.கரண்டி

அரைத்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         தேங்காய் துறுவல் – 2 மேஜை கரண்டி
·         காய்ந்த மிளகாய் – 2
·         பூண்டு – 2 பல்

செய்முறை :
·         பீன்ஸினை பொடியாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். வெங்காயம் + கருவேப்பில்லை பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை கொரகொர அரைத்து கொள்ளவும்.
·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + சீரகம் தாளித்து , வெங்காயம் + கருவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
·         இத்துடன் பீன்ஸ் + மஞ்சள் தூள் + உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். தண்ணீர் ஊற்றாமல் வேகவிடவும். (விரும்பினால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து வேகவிடவும்)
·         பீன்ஸ் நன்றாக வெந்தபிறகு,அரைத்து வைத்துள்ள பொருட்கள் சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும். சுவையான சத்தான பீன்ஸ் பொரியல் ரெடி.

32 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பசுமை கசியும் சமையல் . மிகவும் அருமையாக . பகிர்வுக்கு நன்றி

Mahi said...

நானும்,ஆசியாக்கா ரெசிப்பி பார்த்து இந்தப் பொரியல் செய்திருக்கேன்.சூப்பரா இருந்தது.உங்க பொரியலும் சூப்பரா இருக்கு கீதா!

Mrs.Menagasathia said...

மிக அருமையாக இருக்கு....

Premalatha Aravindhan said...

Very innovative,this method i never tried...luks fabulous.yummy.

vanathy said...

Super! looking very greenish.

LK said...

இது சரி இல்லை.. நீங்கள் எல்லாம் நள்ளிரவில் போஸ்ட் பண்ணுகிறீர்கள்

asiya omar said...

அருமையாக இருக்கு கீதா,கலரும் அசத்தலாக இருக்கு.நன்றி.

ஜெய்லானி said...

நீங்க ஹோட்டல்ன்னு போடாட்டியும் நாங்க சாப்பிடுவோம் .

Chitra said...

nice. :-)

sarusriraj said...

ரொம்ப நல்லா இருக்கு கீதா

மனோ சாமிநாதன் said...

நானும் இதைச் செய்திருக்கிறேன். உங்களுடையதும் அழகாயிருக்கிறது, கீதா!

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக இருக்கு.

அமுதா கிருஷ்ணா said...

செய்திடலாம்..போட்டோவில் அட்டகாசமாய் இருக்கு...

சசிகுமார் said...

நல்ல விளக்கங்கள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Niloufer Riyaz said...

poriyal migavum arumayaga ulladu

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சங்கர்...நன்றி மகி...நன்றி மேனகா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி வானதி...நன்றி கார்த்திக்...

Geetha Achal said...

//இது சரி இல்லை.. நீங்கள் எல்லாம் நள்ளிரவில் போஸ்ட் பண்ணுகிறீர்கள்//இனிமேல நள்ளிரவில் போஸ்ட போடவில்லை...உங்களுக்கு நள்ளிரவு என்றால் எங்களுக்கு மதியம்...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா...நன்றி ஜெய்லானி...நன்றி சித்ரா...நன்றி சாரு அக்கா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி மனோ ஆன்டி...நன்றி ஜலிலா அக்கா...நன்றி அமுதா...

Geetha Achal said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சசி...நன்றி நிலோப்பர்...

சுகந்தி said...

Looks yummy!!!!!!!

goma said...

இன்றைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டும்

நட்புடன் ஜமால் said...

ஹோட்டல் போலவே லுக் இருக்கு டேஸ்ட் அத விட கூடுதலாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்

Priya said...

Thanks for sharing this poriyal, looks tempting...Appadiye yeduthu saapidanam pola irruku..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சுகந்தி...நன்றி கோமா...நன்றி ஜமால் அண்ணா...நன்றி ப்ரியா...

Vijiskitchen said...

சூப்பர் கலர்புல் பொரியல். எங்க ஊரில் இப்படித்தான் செய்வோம்.

srikars kitchen said...

Nice poriyal.. looks nice..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி விஜி...எப்படி இருக்கின்றிங்க...குழந்தைகள் நலமா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா...

apsara-illam said...

கீதா பார்க்கும்போதே சூப்பராக இருக்கு...
இது போல் ஒரு முறை செய்து பார்த்திட வேண்டியதுதான்...
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

super, i need more recipes in poriyal

Related Posts Plugin for WordPress, Blogger...