ஓட்ஸ் டோஃபு உருண்டை - Oats Tofu Balls
Posted by
GEETHA ACHAL
at
Wednesday, June 02, 2010
Labels:
பார்லி-ஒட்ஸ்,
பிரவுன் ரைஸ் (Brown Rice)-டோஃபு(Tofu)
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
· ஒட்ஸ் – 1 கப் பொடித்தது
· டோஃபு – 1/2 கப்
· உப்பு – தேவையான அளவு
தாளித்து சேர்க்க :
· எண்ணெய் – 1 தே.கரண்டி
· கடுகு – 1/2 தே.கரண்டி
· உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி
· கீரை – 1 கப் (விரும்பினால்)
· பச்சை மிளகாய் – 2
செய்முறை :
· கீரை + பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்தம் பருப்பு தாளித்து கீரை+ பச்சை மிளகாயினை சேர்த்து 1 நிமிடம் வதக்கி கொள்ளவும்.
· ஒட்ஸ் + டோஃபு + தாளித்த பொருட்கள் + உப்பு சேர்த்து நன்றாக சாப்பத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
· இதனை இட்லிபானையில் வைத்து 8 – 10 நிமிடங்கள் வேகவிடவும்.
· சுவையான சத்தான உருண்டைகள் ரெடி.
கவனிக்க :
மாவு பிசையும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை…
இதில் Spinach கீரையினை உபயோகிப்பதற்கு பதிலாக Collard Greens, Turnip Greens போன்ற கீரைகளினை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஐந்து உருண்டை பார்ஸல் பிளிஸ்....!!
ORe healthy healthy saappadu.. Shall I come there as ur neighbour there so that I can have this awesome healthy dishes????
Different & healthy dish geetha!
சத்தான உருண்டை மிக அருமையாக இருக்கு...
Perfectly perfect balls..very healthy. Looks fabulous!
WOW... What a healthy snack.... Oats balls looks so good. YUM!
இதுபோன்ற உருண்டையை இப்பொழுதுதான் நான் முதல் முதலில் கேள்விப்படுகிறேன் . பார்த்தவுடனே இரண்டு ,மூன்றை இப்பவே சாப்பிடணும் போல இருக்கு . பகிர்வுக்கு நன்றி
தங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்லானி....//ஐந்து உருண்டை பார்ஸல் பிளிஸ்....!!//உங்களுக்கு இல்லாமலா...பார்சல் அனுப்பியாச்சு...
//ORe healthy healthy saappadu.. Shall I come there as ur neighbour there so that I can have this awesome healthy dishes????//தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா...கண்டிப்பாக சீக்கிரமாக வாங்க...நானும் உங்கள் சமையலினை சாப்பிட மிகவும் ஆசைபடுகிறேன்...நன்றி...
தங்கள் கருத்துக்கு நன்றி மகி...நன்றி மேனகா...நன்றி கூல்....
தங்கள் கருத்துக்கு நன்றி சுகன்யா...
looking healthy and yummy. Very nice recipe.
டோபு உருண்டை நல்ல இருக்கு இதுக்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் என்ன வைப்பீஙக
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலா அக்கா...இதற்கு என்று எதுவும் சைட்டிஷ வேண்டாம்...விரும்பினால் எதாவது காரசட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி வானதி..
Healthy and delicious balls, i want to have some rite now..
Hi Geetha,
I have been reading your blog very recently and trying one recipe at a time. I first want to thank you for maitaining such a wonderful site with lot of healthy recipes.
I started trying with the Grits idly, it did not come out that well like yours. Then I tried the tofu chillie it came out very nice and became part of our routine meals.
Today I tried this oats and spinach kozhukkattai with the red keerai that we get in Indian stores, it came out really really good. Once again I appreciate your effort of inventing new recipes and posting it for everyone to try.
Please if you get a chance email me how to get the grits idly very soft like our normal idly.
Thank you,
Suganya
தங்களுடைய கருத்துக்கு மிகவும் நன்றிகள் பல சுகன்யா....என்னுடைய குறிப்புகளை செய்து பார்த்து பின்னுடம் அளித்ததில் மகிழ்ச்சி....க்ரிட்ஸ் இட்லியினை கொடுத்துள்ள அளவில் செய்தால் கண்டிப்பாக நல்லா வரும்...வேண்டுமானால் உளுந்தின் அளவினை குறைத்து பாருங்கள்...கண்டிப்பாக நன்றாக வரும்....மேலும் எதாவது doubtsஇருந்தால் என்னுடைய மெயிற்கு emails அனுப்பலாம்....நன்றி...
Post a Comment