சிம்பிள் ஒட்ஸ் கட்லட் - Simple Oats Cutlets

நேற்று பதிவில் “கினோவா சாலட்”யில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்…அதாவது நமக்கு எப்பொழுதும் அப்படியே Refining பண்ணாமல் “Whole”ஆக கிடைக்க கூடிய பொருள் ஒன்று கினோவா…மற்றொன்று என்ன?????அது தாங்க “ஒட்ஸ்”……..அதனால ஒட்ஸினை சாப்பிடுங்க சாப்பிடுங்க சாப்பிட்டு கொண்டே இருங்க…உடலிற்கு நல்லது தானே….

அந்த கேள்விக்கு Guess செய்த திரு.நட்புடன் ஜமால் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றிகள்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 10 – 15 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         ஒட்ஸ் – 2 கப்
·         வேகவைத்த பாசிப்பருப்பு – 1 கப்
·         காய்ந்த மிளகாய் – 1
·         உப்பு, எண்ணெய் – தேவைக்கு

தாளித்து கொள்ள வேண்டிய பொருட்கள் :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு – 1/4 தே.கரண்டி
·         வெங்காயம் – 1
·         கருவேப்பில்லை – 5 இலை
·         விரும்பிய காய்கள் – காரட்,பீன்ஸ் ,கோஸ் – பொடியாக நறுக்கியது 1 கப்
·         பச்சை மிளகாய் – 2

செய்முறை :
·         வெங்காயம் + கருவேப்பில்லை + பச்சைமிளகாயினை பொடியாக நறுக்கி கொண்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து ,அத்துடன் நறுக்கிய பொருட்கள் + காய்கள் சேர்த்து 3 - 4 நிமிடங்கள் வதக்கவும்.
·         ஒட்ஸ் + காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
·         பொடித்த பொருள் + தாளித்த பொருட்கள் + பாசிப்பருப்பு + உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
·         இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கட்லட் போல சுடவும்.
·         ஒருபுறம் கட்லட் நன்றாக சிவந்த பிறகு அதனை திருப்பி போட்டு மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும்.
·         சுவையான சத்தான ஒட்ஸ் கட்லட் ரெடி. இதனை சாஸ் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
இதில் பாசிப்பருப்புக்கு பதிலாக வேகவைத்த உருளைகிழங்கினையும் சேர்த்து செய்யலாம்.

28 comments:

சசிகுமார் said...

நான் தான் பர்ஸ்ட் நெனைக்கிறேன், அப்படி இருந்தா அந்த தட்டுல உள்ளது எனக்கு தான் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Premalatha Aravindhan said...

cutlet very rich and yummy,never had r tasted,need to try it...thanks for sharing healthy recipes.

Chitra said...

Oats Cutlet - looks great! :-)

srividhya Ravikumar said...

Really very unique cutlet.. thanks அக்கா..

ஸாதிகா said...

எண்னெய் மிகவும் குறைவாக செர்ர்த்து செய்யப்பட்ட ஆரோக்கியமான கட்லட்

நட்புடன் ஜமால் said...

உடலுக்கு நல்லதா சொல்லி தாறியள்

நன்றிங்கோ

இங்கே அதிகம் ஓட்ஸில் கஞ்சி மட்டும் தான் - அதில் எதுனா ஸ்பெஷல் இருந்தா போடுங்க.

சாருஸ்ரீராஜ் said...

நீங்களும் புது ரெசிபி போடுங்க ,போடுங்க .... போட்டுக்கிட்டே இருங்க கட்லட் சூப்பர் கீதா

Mrs.Menagasathia said...

cutlet looks simply super!!

Life is beautiful!!! said...

rusiyana, aarokyamana unavu :)

தெய்வசுகந்தி said...

ஆரோக்கியமான கட்லெட்!!!!!!!

Shama Nagarajan said...

superb cutlet....thanks for sharing

Nithu Bala said...

cutlet nalla irukku..very innovative..thanks for sharing this..

asiya omar said...

ஓட்ஸ் கட்லெட் சூப்பரோ சூப்பர்.

GEETHA ACHAL said...

சசிகுமார் said...
//நான் தான் பர்ஸ்ட் நெனைக்கிறேன், அப்படி இருந்தா அந்த தட்டுல உள்ளது எனக்கு தான் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி சசி...கண்டிப்பாக எடுத்து கொள்ளுங்கள்...நன்றி....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா....நன்றி சித்ரா....நன்றி ஸ்ரீவித்யா...

GEETHA ACHAL said...

ஸாதிகா said...
//எண்னெய் மிகவும் குறைவாக செர்ர்த்து செய்யப்பட்ட ஆரோக்கியமான கட்லட்// தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஸாதிகா அக்கா...ஆமாம் மிகவும் குறைவான எண்ணெய் ஊற்றி செய்தாலே போதுமானது...சூப்பராக இருக்கும்...

GEETHA ACHAL said...

நட்புடன் ஜமால் said...
//உடலுக்கு நல்லதா சொல்லி தாறியள்//தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜமால் அண்ணா....

//இங்கே அதிகம் ஓட்ஸில் கஞ்சி மட்டும் தான் - அதில் எதுனா ஸ்பெஷல் இருந்தா போடுங்க//கண்டிப்பாக ஒட்ஸில் புதுவிதமான கஞ்சி செய்துவிடலாம்...கூடிய சீக்கிரத்தில் பதிவு போடுகிறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சாரு அக்கா....நன்றி மேனகா....நன்றி மஞ்சு....

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...நன்றி ஷாமா...நன்றி நிது....நன்றி ஆசியா அக்கா...

ஜெய்லானி said...

ஒட்ஸ்ல இப்படியெல்லாம் பன்னலாமா..!! சூப்பர்..

athira said...

சூப்பர். ஓட்சில் எத்தனை விதமான சமையல் குறிப்புக்கள் சொல்லிவிட்டீங்கள் அனைத்துமே அருமை.

Ananthi said...

வாவ்.. பார்கவே அழகா இருக்குங்க.. கண்டிப்பா ட்ரை பண்ணனும்.. :)

I like potatoes too.. Will try with that too :D :D

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி...நன்றி அதிரா...நன்றி ஆனந்தி...கண்டிப்பாக செய்து பாருங்கள்...அருமையாக இருக்கும்...

Niloufer Riyaz said...

healthiyana cutlet. oatsil seydadu pudumay

Priya said...

Delicious cutlets, arumaiyana healthyana cutlet..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி நிலோஃபர்...நன்றி ப்ரியா...

அன்புடன் மலிக்கா said...

கீத்து கட்லெட் இன்று செய்துபார்த்துவிடுகிறேன் சூப்பர் போட்டோ கிளிக்..

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி மலிக்கா அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க...நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...