பார்லி எலுமிச்சை சாதம் - Barley Lemon Rice

எப்பொழுது பார்லியில் கஞ்சியினை குடிப்பது போர் அடித்துவிட்டால், இப்படி லெமன் ரைஸ், புளிசாதம், தயிர்சாதம் போன்றவை செய்து சாப்பிட்டால் உடலிற்கு நல்லதுசுவையாகவும் இருக்கும்.

அரிசி உணவினை அதிகம் தவிர்த்து , பார்லி, ஒட்ஸ், பயறு வகைகள் என விதவிதமாக சாப்பிடுவதால் உடலில் சக்கரை, கொலஸ்டிரால் அளவுகள் அதிகரிக்காமல் இருக்கும்.

சமைக்க தேவைப்படும் நேரம் : 5 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         வேகவைத்த பார்லி – 2 கப்
·         எலுமிச்சை பழம் – 1
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         வேகவைத்த வேர்க்கடலை – 2 மேஜை கரண்டி (விரும்பினால்)
·         உப்பு - தேவைக்கு

தாளிக்க :
·         எண்ணெய் – 1 தே.கரண்டி
·         கடுகு - தாளிக்க
·         உளுத்தம்பருப்பு – 1 தே.கரண்டி
·         பச்சைமிளகாய் – 2
·         இஞ்சி சிறிய துண்டு
·         கருவேப்பில்லை – 5 இலை

செய்முறை :
·         எலுமிச்சை பழத்தில் இருந்து சாறினை எடுத்து கொள்ளவும். பச்சைமிளகாயினை இரண்டாக கிறி வைக்கவும். இஞ்சியினை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

·         கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பிறகு பச்சைமிளகாய் + இஞ்சி + கருவேப்பில்லை + வேர்க்கடலை போட்டு பிறகு மஞ்சள் தூள் + எலுமிச்சை சாறு + உப்பு சேர்த்து அடுப்பினை நிறுத்திவிடவும்.

·         இந்த கலவையினை பார்லியுடன் சேர்த்து கிளறவும். சுவையான சத்தான பார்லி லெமன் ரைஸ் ரெடி. இத்துடன் சிப்ஸ், வறுவலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு :
1 கப் பார்லிக்கு 2 1/2 கப் தண்ணீர் வைத்து பிரஸர் குக்கரில் 5 – 6 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

பிரஸர் குக்கரில் இல்லாமல் தனியாக வேகவைக்க வேண்டும் என்றால் ,பார்லி வேக குறைந்தது 45 – 55 நிமிடங்கள் ஆகும்.

34 comments:

Jay said...

This is new to me and looks so delicious n healthy. Thanx for sharing Geetha.

Kousalya said...

vithiyasamana dish than....

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு!

Sadhana said...

The dish looks lovely and healthy...nicely presented... I love ur blog...U have variety of lovely recipes...I'm adding u to my blog list....:-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பரா இருக்கு.

Pavithra said...

Wow geetha is is totally innovative..will surely try it out sometime..

Kanchana Radhakrishnan said...

New to me.

சாருஸ்ரீராஜ் said...

geetha romba nalla irukku , eppadi ippadi ellam yosikiringa try panuren.

RAKS KITCHEN said...

I love lemon in anything,sounds good,cool idea Geetha!

Mrs.Menagasathia said...

different &looks wonderful!!

ஜெய்லானி said...

அட பார்லில கூடவா..!!

தெய்வசுகந்தி said...

புதுசா இருக்குது கீதா!!!

Riyas said...

NICE

athira said...

ஆஹா, பார்லியில் லெமன் றைசோ... சூப்பர், கண்ணைக் கொள்ளை கொள்ளுது பார்லி...

ஆயிஷா அபுல் said...

சூப்பராகவும் ,புதிமையானதகவும், இருந்தது.

Krishnaveni said...

wow, this is such a great dish, looks so good

Chitra said...

Barley?????? interesting.....

vanathy said...

Super & healthy recipe.

prabhadamu said...

இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.

http://cookeryindexer.blogspot.com/

Nithu said...

Sounds new to me. Looks good.

Priya said...

Wat a healthy dish, very unique and delicious..

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்...நன்றி கௌசல்யா...நன்றி ஸாதிகா அக்கா...நன்றி சாதனா..நன்றி புவனா..நன்றி பவித்ரா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கஞ்சனா..நன்றி சாரு அக்கா...நன்றி ராஜி...நன்றி மேனகா...நன்றி ஜெய்லானி...நன்றி தெய்வசுகந்தி...நன்றி ரியாஸ்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா..நன்றி ஆயிஷா...நன்றி கிருஷ்ணவேனி...நன்றி சித்ரா...நன்றி வானதி......

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி பிரபா..நன்றி நிது...நன்றி ப்ரியா...

சிங்கக்குட்டி said...

ஓ பார்லி...சூப்பர்...

எனக்கு பார்லிவாட்டர் (பீர்) குடிக்கத்தான் தெரியும் :-)

Mahi said...

புது ரெசிப்பியா இருக்கு கீதா! பார்லி,முத்து முத்தா ஜவ்வசிரி மாதிரி தெரியுது போட்டோல!

கொயினி said...

பார்லி லெமன் சாதம் நல்லா இருக்கு கீதா..கடலைப்பருப்பு,பெருங்காயம் பயன்படுத்தகூடாதா?என்ன உங்க போட்டோவில் கருவேப்பிலையை பார்க்க முடியலை...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

டிஃப்பரண்டா இருக்கும்மா கீதா.. செய்து பார்க்கிறேன்..

Padhu said...

Thanks Geetha for this wonderful recipe .I always wanted to include Barley in my diet .Bookmarked

மங்குனி அமைசர் said...

நல்ல ஹெல்தியான சாப்பாடு மேடம்

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சிங்ககுட்டி...நன்றி மகி...நன்றி தேன் அக்கா...நன்றி பது...நன்றி மங்குனி...

GEETHA ACHAL said...

//பார்லி லெமன் சாதம் நல்லா இருக்கு கீதா..கடலைப்பருப்பு,பெருங்காயம் பயன்படுத்தகூடாதா?என்ன உங்க போட்டோவில் கருவேப்பிலையை பார்க்க முடியலை// தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி கொயினி...நீங்கள் விரும்பினால் கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து கொள்ளலாம்...

Jaleela Kamal said...

பார்லி லெமன் சாதம், டேஸ்ட் எபப்டி இருக்கும்.

பார்லி உடம்பில் உள்ள தண்ணீர் வெளியாகும் என்பார்களே அடிக்கடி சாப்பிடலாமா?

Related Posts Plugin for WordPress, Blogger...