கொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadai Curry


எப்பொழுதும் பொதுவாக வடக்கறியினை கடலைப்பருப்பில் தான் செய்வாங்கஒரு மாறுதலுக்காக கொண்டைக்கடலையில் செய்து பாருங்க….சுவையாக சத்தான உணவாக இருக்கும்.

ஊறவைக்க தேவைப்படும் நேரம் : குறைந்தது 2 மணி நேரம்
சமைக்க தேவைப்படும் நேரம் : 20 – 25 நிமிடங்கள்
தேவையான பொருட்கள் :
·         கொண்டைக்கடலை – 1 கப்
·         வெங்காயம் – 1
·         தக்காளி – 1
·         இஞ்சி – 1 சிறிய துண்டு
·         பூண்டு – 5 பல்
·         கருவேப்பில்லை – 5 இலை
·         தேங்காய் பால் – 2 மேஜை கரண்டி அளவு (விரும்பினால்)

முதலில் தாளிக்க :
·         எண்ணெய் – 1 மேஜை கரண்டி
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         கிராம்பு, ஏலக்காய், பட்டை- 1

சேர்க்க வேண்டிய தூள் வகைகள் :
·         மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
·         மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
·         உப்பு - தேவைக்கு

கொண்டைக்கடலையுடன் சேர்த்து அரைக்க :
·         சோம்பு – 1 தே.கரண்டி
·         பச்சைமிளகாய் – 3
·         உப்பு – 1 தே.கரண்டி

செய்முறை :
·         கொண்டைக்கடலையினை குறைந்தது 2 – 3மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். ஊறவைத்த கொண்டைக்கடலையினை தண்ணீர் வடித்து அத்துடன் சேர்த்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

·         இட்லி தட்டில், அரைத்த கலவையினை உருட்டி ஆவியில் குறைந்தது 10 – 12 நிமிடங்கள் வேகவிடவும்.

·         வெங்காயம் + தக்காளி + கருவேப்பில்லையினை நறுக்கி கொள்ளவும். பூண்டு + இஞ்சியினை நசுக்கி வைக்கவும். (அரைக்க வேண்டாம்.)

·         கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் போட்டு தாளிக்கவும்.

·         அதன்பிறகு வெங்காயம் + இஞ்சிபூண்டு + தக்காளி, கருவேப்பில்லை என்று ஒன்றின்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

·         பிறகு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் + தேங்காய் பால் சேர்த்து நன்றாக 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.

·         வேகவைத்த கொண்டைக்கடலை உருண்டைகளை உதிர்த்து இதில் சேர்க்கவும். மேலும் 2 – 3 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியில் கொத்தமல்லி தூவவும்.

·         சுவையான சத்தான கொண்டைக்கடலை வடக்கறி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

29 comments:

Cool Lassi(e) said...

I love this variation. When I read the title, I thought it to be Kodaikaanal vada Curry. But its Kondakadala..hehe. I love Vada Curry and I will try this for sure.

ஜெய்லானி said...

அந்த தோசை தட்டை அப்படியே தள்ளுங்க என் பக்கமா பாத்ததுமே திரும்பவும் பசியெடுக்குது.

athira said...

சுவையான குறிப்பு கீதா. நாங்கள் துவரம்பருப்பிலேதான் செய்வோம், இதே முறைதான் ஆனால் அவித்தபின் பொரித்தெடுத்து துண்டுகளாக வெட்டி குழம்பில் சேர்ப்போம்.

Chitra said...

ஆஹா.... அப்படியே அந்த தோசை தட்டை, இந்த பக்கம் தள்ளி விடுங்க.... ம்ம்ம்ம்...... சூப்பர்!

asiya omar said...

கீதா தோசையும் வடகறியும் அருமை.ரொம்ப அருமையாக தோசை சுடுறீங்க.

Mahi said...

சூப்பரா இருக்கு கீதா..இதே மாதிரிதான் உருண்டைகுழம்பு வைப்பாங்க அம்மா! ஹெல்த்தி ரெசிப்பி!

prabhadamu said...

கீதா அக்கா எப்படி இருக்கிங்க? குழந்தை நலமா? அக்கா எனக்கு உருண்டை குழம்பு ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சமையம் சரியா வரலை. அதை பற்றி கொஞ்சம் போடமுடியுமா அக்கா?

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி கூல்...கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஜெய்லானி..உங்களுக்கு இல்லாமலா...அப்படியே எடுத்து கொள்ளுங்க...சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லனம்...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி அதிரா....நீங்கள் துவரம் பருப்பில் செய்வீங்களா...அடுத்த முறை அதில் செய்து பார்க்கிறேன்..//பொரித்தெடுத்து துண்டுகளாக வெட்டி குழம்பில் சேர்ப்போம்//.சிலர் அப்படி செய்வாங்க...எங்க வீட்டில் வேகவைத்து பின் அப்படியே குழம்பில் சேர்த்துவிடுவோம்...பொரித்து செய்தாலும் சுவையாக தான் இருக்கும்...என்ன கலோரிஸ் தான் கூடுதலாக இருக்கும்...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி சித்ரா...உங்களுக்கு இல்லாமலா...வாங்க எங்கள் வீட்டிற்கு...செய்து கொடுக்கிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி ஆசியா அக்கா..//ரொம்ப அருமையாக தோசை சுடுறீங்க//நன்றி அக்கா.

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி மகி...ஆமாம் இதில் உருண்டை குழம்பு செய்தாலும் சுவையாக இருக்கும்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி பிரபா...இங்கு அனைவரும் நலம்...நீங்க எப்படி இருக்கிங்க....எனக்கும் உருண்டை குழம்பு ரொம்பவும் பிடிக்கும்....உருண்டை குழம்பிற்கு மாவு அரைக்கும் பொழுது மிகவும் தண்ணீயாக
இல்லாமல் அரைக்க வேண்டும்....அதாவது வடை மாவு பதத்திற்கும் விட கெட்டியாக
அரைத்தால் தான் நன்றாக வரும்.

உருண்டைகள் குழம்பில் அப்படியே போட்டால் உடைந்துவிடும்
என்று பயம் இருந்தால், முதலில் உருண்டைகளை ஆவியில், இட்லி
தட்டில் முக்கால் பாகம் வேகவைத்த பிறகு, குழம்பில் சேர்த்தால்
உடையாது....சூப்பராக இருக்கும்.

ஆனால் உருண்டைகள் குழம்பில் வேகவைத்து சமைப்பதில் தான் அதிக
சுவை இருக்கும்.

உருண்டைகள் குழம்பில் போட்ட பிறகு அடிக்கடி கிளற கூடாது,
இப்படி செய்தால் சூப்பராக இருக்கும். அடுத்த வாரம் உருண்டைகுழம்பு
குறிப்புடன் வருகிறேன்...நன்றி...

GEETHA ACHAL said...

தங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி புவனா...

தெய்வசுகந்தி said...

நல்லா இருக்குது கீதா!

Jaleela Kamal said...

நல்ல இருக்கு மொரு மொரு தோசையுடன்,
வித்தியாசமான முயற்சி.

( நல்ல இருக்கேன், நோன்பு ஆகையால் யார் பிளாக்குக்கும் அடிக்க்டி வரமுடியல.)

Premalatha Aravindhan said...

really delicious,nice combo for dosa...

Priya said...

Very interesting vadacurry..

Vijiskitchen said...

சூப்பர் ஹெல்த்தி ரெசிப்பி கீதா.கல்க்கிட்டிங்க.அவசியம் நான் செய்கிறேன்.

sandhya said...

ஜெய்லானி க்கு எதுக்கு புல் ப்ளேட்? எனக்கு கொடுங்க லேடீஸ்க்கு தான் முன்னுரிமை ..கீதா ஜி சூப்பர் டிஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..நன்றி ?

Devasena Hariharan said...

good one Geetha.

vanathy said...

கீதா, நல்லா இருக்கு உங்கள் ரெசிப்பி. இதெல்லாம் சாப்பிட உங்கள் வீட்டிற்கு ஒரு நாள் வரப் போறேன்.

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தெய்வசுகந்தி...அன்றி ஜலிலா அக்கா...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரேமலதா...நன்றி ப்ரியா..நன்றி விஜி..கண்டிப்பாக செய்து பாருங்க...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி சந்தியா...உங்களுக்கு இல்லாமலா...எங்க வீட்டிக்கு வாங்க...சூடாக செய்து கொடுக்கிறேன்...

GEETHA ACHAL said...

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி தேவசேனா...நன்றி வானதி...எப்ப வரிங்க...சீக்கிரம் வாங்க...உங்கள் வருகையினை எதிர்பார்க்கிறேன்...நன்றி...

prabhadamu said...

சூப்பர் அக்கா. இங்கு நாங்கள் நலம் அக்கா. நானும் செய்து பார்த்து சொல்லுகிறேன். உங்கள் தளத்தில் உருண்டைக்குழம்பு எதிர்பார்க்கிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...